Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௮௮

Qur'an Surah Hud Verse 88

ஸூரத்து ஹூது [௧௧]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْ وَرَزَقَنِيْ مِنْهُ رِزْقًا حَسَنًا وَّمَآ اُرِيْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰى مَآ اَنْهٰىكُمْ عَنْهُ ۗاِنْ اُرِيْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُۗ وَمَا تَوْفِيْقِيْٓ اِلَّا بِاللّٰهِ ۗعَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ اُنِيْبُ (هود : ١١)

qāla
قَالَ
He said
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் மக்களே
ara-aytum
أَرَءَيْتُمْ
Do you see
அறிவியுங்கள்
in kuntu
إِن كُنتُ
if I am
நான் இருப்பதால்
ʿalā bayyinatin
عَلَىٰ بَيِّنَةٍ
on a clear evidence
தெளிவான அத்தாட்சியில்
min rabbī
مِّن رَّبِّى
from my Lord
என் இறைவனின்
warazaqanī
وَرَزَقَنِى
and He has provided me
இன்னும் வழங்கினான்/ எனக்கு
min'hu
مِنْهُ
from Himself
தன்னிடமிருந்து
riz'qan
رِزْقًا
a good provision?
உணவை
ḥasanan
حَسَنًاۚ
a good provision?
அழகியது/ நல்லது
wamā urīdu
وَمَآ أُرِيدُ
And not I intend
நாடமாட்டேன்
an ukhālifakum
أَنْ أُخَالِفَكُمْ
that I differ from you
நான் முரண்படுவதற்கு/உங்களுக்கு
ilā mā
إِلَىٰ مَآ
in what
இல்/எவை
anhākum
أَنْهَىٰكُمْ
I forbid you
தடுக்கிறேன்/உங்களை
ʿanhu
عَنْهُۚ
from it
அவற்றை விட்டு
in urīdu
إِنْ أُرِيدُ
Not I intend
நாடமாட்டேன்
illā
إِلَّا
except
தவிர
l-iṣ'lāḥa
ٱلْإِصْلَٰحَ
the reform
சீர்திருத்துவதை
mā is'taṭaʿtu
مَا ٱسْتَطَعْتُۚ
as much as I am able as much as I am able
நான் இயன்றவரை
wamā tawfīqī
وَمَا تَوْفِيقِىٓ
And not (is) my success
இல்லை /என் நற்பாக்கியம்
illā
إِلَّا
except
தவிர
bil-lahi
بِٱللَّهِۚ
with Allah
அல்லாஹ்வைக் கொண்டே
ʿalayhi
عَلَيْهِ
Upon Him
அவன் மீதே
tawakkaltu
تَوَكَّلْتُ
I trust
நம்பிக்கை வைத்தேன்
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
அவன் பக்கமே
unību
أُنِيبُ
I turn
திரும்புகிறேன்

Transliteration:

Qaala yaa qawmi ara'aitum in kuntu 'alaa baiyinatim mir Rabbee wa razaqanee minhu rizqan hasanaa; wa maaa ureedu an ukhaalifakum ilaa maaa anhaakum 'anh; in ureedu illal islaaha mastata't; wa maa tawfeeqeee illaa billaah; 'alaihi tawakkaltu wa ilaihi uneeb (QS. Hūd:88)

English Sahih International:

He said, "O my people, have you considered: if I am upon clear evidence from my Lord and He has provided me with a good provision from Him...? And I do not intend to differ from you in that which I have forbidden you; I only intend reform as much as I am able. And my success is not but through Allah. Upon Him I have relied, and to Him I return. (QS. Hud, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "என்னுடைய மக்களே! என் இறைவன் தெளிவான அத்தாட்சிகளை எனக்களித்திருப்பதையும், அவன் எனக்கு வேண்டிய உணவை நல்லவிதமாக அளித்து வருவதையும் நீங்கள் அறிவீர்களா? (இந்நிலைமையில் மக்களை நான் மோசம் செய்யவேண்டிய அவசியமில்லை; ஆகவே) நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு மாறுசெய்ய விரும்பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத்தை நானும் செய்யமாட்டேன்.) என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன். (ஸூரத்து ஹூது, வசனம் ௮௮)

Jan Trust Foundation

(அதற்கு) அவர் கூறினார்| “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் மக்களே! அறிவியுங்கள்! என் இறைவனின் ஒரு தெளிவான அத்தாட்சியில் நான் இருப்பதால், அவன் தன்னிடமிருந்து எனக்கு நல்ல உணவை வழங்கி இருப்பதால் (நான் அவனுடைய தூது செய்தியில் மோசடி செய்வது தகுமா?)... நான் உங்களைத் தடுப்பதில் உங்களுக்கு முரண்படுவதற்கு நாடமாட்டேன். நான் இயன்றவரை சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நாடமாட்டேன். அல்லாஹ்வைக் கொண்டே தவிர என் நற்பாக்கியம் இல்லை. அவன் மீதே நம்பிக்கை வைத்தேன்; அவன் பக்கமே திரும்புகிறேன்.