Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௮௪

Qur'an Surah Hud Verse 84

ஸூரத்து ஹூது [௧௧]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا ۗقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ۗوَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ اِنِّيْٓ اَرٰىكُمْ بِخَيْرٍ وَّاِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيْطٍ (هود : ١١)

wa-ilā madyana
وَإِلَىٰ مَدْيَنَ
And to Madyan
‘மத்யன்’க்கு
akhāhum
أَخَاهُمْ
their brother
சகோதரர் அவர்களுடைய
shuʿayban
شُعَيْبًاۚ
Shuaib
ஷுஐபை
qāla
قَالَ
He said
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் மக்களே
uʿ'budū
ٱعْبُدُوا۟
Worship
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
mā lakum
مَا لَكُم
not (is) for you
உங்களுக்கு இல்லை
min
مِّنْ
any
அறவே
ilāhin
إِلَٰهٍ
god
வணக்கத்திற்குரியவன்
ghayruhu
غَيْرُهُۥۖ
other than Him
அவனையன்றி
walā tanquṣū
وَلَا تَنقُصُوا۟
And (do) not decrease
குறைக்காதீர்கள்
l-mik'yāla
ٱلْمِكْيَالَ
(from) the measure
அளவையில்
wal-mīzāna
وَٱلْمِيزَانَۚ
and the scale
இன்னும் நிறுவையில்
innī
إِنِّىٓ
Indeed I
நிச்சயமாக நான்
arākum
أَرَىٰكُم
see you
காண்கிறேன்/ உங்களை
bikhayrin
بِخَيْرٍ
in prosperity
நல்லதொரு வசதியில்
wa-innī
وَإِنِّىٓ
but indeed I
இன்னும் நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
fear
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
for you
உங்கள் மீது
ʿadhāba
عَذَابَ
punishment
வேதனையை
yawmin
يَوْمٍ
(of ) a Day
ஒரு நாளின்
muḥīṭin
مُّحِيطٍ
all-encompassing
சூழக்கூடியது

Transliteration:

Wa ilaa Madyana akhaahum Shu'aibaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhoo wa laa tanqusul mikyaala walmeezaan; inneee araakum bikhairinw wa innee akhaafu 'alaikum 'azaaba Yawmim muheet (QS. Hūd:84)

English Sahih International:

And to Madyan [We sent] their brother Shuaib. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. And do not decrease from the measure and the scale. Indeed, I see you in prosperity, but indeed, I fear for you the punishment of an all-encompassing Day. (QS. Hud, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

"மத்யன்" (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையும் நிறுவையும் குறைத்து ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன். (ஸூரத்து ஹூது, வசனம் ௮௪)

Jan Trust Foundation

மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்| “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘மத்யன்’ க்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (தூதராக அனுப்பினோம்). “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (வேறு) வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு அறவே இல்லை. அளவையிலும் நிறுவையிலும் (பொருள்களை) குறைக்காதீர்கள். நிச்சயமாக நான் உங்களை நல்லதொரு வசதியில் காண்கிறேன். நிச்சயமாக நான் சூழ்(ந்து விட)க்கூடிய ஒரு நாளின் வேதனையை உங்கள் மீது பயப்படுகிறேன்”என்று கூறினார்.