Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௮௨

Qur'an Surah Hud Verse 82

ஸூரத்து ஹூது [௧௧]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّنْ سِجِّيْلٍ مَّنْضُوْدٍ (هود : ١١)

falammā
فَلَمَّا
So when
போது
jāa
جَآءَ
came
வந்தது
amrunā
أَمْرُنَا
Our Command
நம் கட்டளை
jaʿalnā
جَعَلْنَا
We made
ஆக்கினோம்
ʿāliyahā
عَٰلِيَهَا
its upside
அதன் மேல்புறத்தை
sāfilahā
سَافِلَهَا
its downside
அதன் கீழ்ப்புறமாக
wa-amṭarnā
وَأَمْطَرْنَا
and We rained
இன்னும் மழையாக பொழிந்தோம்
ʿalayhā
عَلَيْهَا
upon them
அதன் மீது
ḥijāratan
حِجَارَةً
stones
கற்களை
min
مِّن
of
இருந்து
sijjīlin
سِجِّيلٍ
baked clay
இறுக்கமாக்கப்பட்டது
manḍūdin
مَّنضُودٍ
(in) layers
சுடப்பட்ட களிமண்

Transliteration:

Falammaa jaaa'a amrunaa ja'alnaa 'aaliyahaa saafilahaa wa amtamaa 'alaihaa hijaaratam min sijjeelim mandood (QS. Hūd:82)

English Sahih International:

So when Our command came, We made the highest part [of the city] its lowest and rained upon them stones of layered hard clay, [which were] (QS. Hud, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

நம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை மேல் கீழாக கவிழ்த்து விட்டோம். அன்றி, (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். (ஸூரத்து ஹூது, வசனம் ௮௨)

Jan Trust Foundation

எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம் கட்டளை வந்தபோது அதன் மேல்புறத்தை அதன் கீழ்ப்புறமாக (தலைகீழ்) ஆக்கினோம். அதன் மீது (நன்கு) இறுக்கமாக்கப்பட்ட சுடப்பட்ட களிமண்ணினால் ஆன, உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்ட கற்களை மழையாகப் பொழிந்தோம். அவை அக்கிரமக்காரர்களிலிருந்து தூரமாக இல்லை.