Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௮௦

Qur'an Surah Hud Verse 80

ஸூரத்து ஹூது [௧௧]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ لَوْ اَنَّ لِيْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِيْٓ اِلٰى رُكْنٍ شَدِيْدٍ (هود : ١١)

qāla
قَالَ
He said
கூறினார்
law
لَوْ
"If
இருக்க வேண்டுமே!
anna lī
أَنَّ لِى
that I had
நிச்சயமாக/எனக்கு
bikum
بِكُمْ
over you
உங்களிடம்
quwwatan aw
قُوَّةً أَوْ
power or
பலம்/அல்லது
āwī
ءَاوِىٓ
I could take refuge
ஒதுங்குவேன்!
ilā ruk'nin
إِلَىٰ رُكْنٍ
in a support
பக்கம்/ஆதரவாளர்
shadīdin
شَدِيدٍ
strong"
வலிமையானவர்

Transliteration:

Qaala law anna lee bikum quwwatan aw aaweee ilaa ruknin shadeed (QS. Hūd:80)

English Sahih International:

He said, "If only I had against you some power or could take refuge in a strong support." (QS. Hud, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டாமா? அல்லது (உங்களைத் தடுத்து விடக்கூடிய) பலமான ஆதரவை நான் அடைய வேண்டாமா?" என்று (மிக துக்கத்துடன்) கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௮௦)

Jan Trust Foundation

அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“எனக்கு உங்களிடம் (சண்டையிட) பலம் இருக்க வேண்டுமே! அல்லது வலிமையான ஓர் ஆதரவாளரின் பக்கம் நான் ஒதுங்கவேண்டுமே!” என்று கூறினார்.