Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௮

Qur'an Surah Hud Verse 8

ஸூரத்து ஹூது [௧௧]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَىِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰٓى اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّيَقُوْلُنَّ مَا يَحْبِسُهٗ ۗ اَلَا يَوْمَ يَأْتِيْهِمْ لَيْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ࣖ (هود : ١١)

wala-in
وَلَئِنْ
And if
akharnā
أَخَّرْنَا
We delay
நாம் பிற்படுத்தினால்
ʿanhumu
عَنْهُمُ
from them
அவர்களை விட்டு
l-ʿadhāba
ٱلْعَذَابَ
the punishment
வேதனையை
ilā ummatin
إِلَىٰٓ أُمَّةٍ
for a time
வரை/ஒரு காலம்
maʿdūdatin
مَّعْدُودَةٍ
determined
எண்ணப்பட்டது
layaqūlunna
لَّيَقُولُنَّ
they will surely say
நிச்சயம் கூறுவார்கள்
مَا
"What
எது?
yaḥbisuhu
يَحْبِسُهُۥٓۗ
detains it?"
தடுக்கின்றது/அதை
alā
أَلَا
No doubt!
அறிந்துகொள்ளுங்கள்!
yawma
يَوْمَ
(On) the Day
நாளில்
yatīhim
يَأْتِيهِمْ
it comes to them
அது வரும்/அவர்களிடம்
laysa maṣrūfan
لَيْسَ مَصْرُوفًا
not (will be) averted
அறவே திருப்பப்படாது
ʿanhum
عَنْهُمْ
from them
அவர்களை விட்டு
waḥāqa bihim
وَحَاقَ بِهِم
and will surround them
இன்னும் சூழும்/அவர்களை
مَّا
what
எது
kānū
كَانُوا۟
they used (to)
இருந்தனர்
bihi
بِهِۦ
mock at [it]
அதை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
mock at [it]
பரிகாசம்செய்கின்றனர்

Transliteration:

Wala'in akhkharnaa 'anhumul 'azaaba ilaaa ummatim ma'doodatil la yaqoolunna maa yahbisuh; alaa yawma yaateehim laisa masroofan 'anhum wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon (QS. Hūd:8)

English Sahih International:

And if We hold back from them the punishment for a limited time, they will surely say, "What detains it?" Unquestionably, on the Day it comes to them, it will not be averted from them, and they will be enveloped by what they used to ridicule. (QS. Hud, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(நிராகரிப்பின் காரணமாக) அவர்களுக்கு (வரவேண்டிய) வேதனையை ஒரு சொற்ப காலம் நாம் பிற்படுத்தியபோதிலும் "அதனைத் தடுத்துக்கொண்டது எது?" எனப் பரிகாசமாகக் கேட்கிறார்கள். அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அதைத் தடுத்துவிட முடியாது என்பதையும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (ஸூரத்து ஹூது, வசனம் ௮)

Jan Trust Foundation

(குஃப்ரின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதைத் தடுத்தது யாது?” என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள்; அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை விட்டு வேதனையை எண்ணப்பட்ட ஒரு காலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதை எது தடுக்கின்றது?” என நிச்சயம் அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்களிடம் அது வரும் நாளில், (அது) அவர்களை விட்டு அறவே திருப்பப்படாது. அவர்கள் எதை பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழும்.