குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௮
Qur'an Surah Hud Verse 78
ஸூரத்து ஹூது [௧௧]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَاۤءَهٗ قَوْمُهٗ يُهْرَعُوْنَ اِلَيْهِۗ وَمِنْ قَبْلُ كَانُوْا يَعْمَلُوْنَ السَّيِّاٰتِۗ قَالَ يٰقَوْمِ هٰٓؤُلَاۤءِ بَنَاتِيْ هُنَّ اَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِيْ ضَيْفِيْۗ اَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِيْدٌ (هود : ١١)
- wajāahu
- وَجَآءَهُۥ
- And came (to) him
- வந்தார்(கள்)/அவரிடம்
- qawmuhu
- قَوْمُهُۥ
- his people
- அவருடைய மக்கள்
- yuh'raʿūna
- يُهْرَعُونَ
- rushing
- விரைந்தவர்களாக
- ilayhi
- إِلَيْهِ
- to him
- அவர் பக்கம்
- wamin qablu
- وَمِن قَبْلُ
- and before and before
- இன்னும் இதற்கு முன்னர்
- kānū
- كَانُوا۟
- they (had) been
- இருந்தனர்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- doing
- அவர்கள் செய்பவர்களாக
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِۚ
- the evil deeds
- தீயவற்றை
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் மக்களே
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- These
- இவர்களை
- banātī
- بَنَاتِى
- (are) my daughters
- என் பெண் பிள்ளைகள்
- hunna
- هُنَّ
- they
- அவர்கள்
- aṭharu
- أَطْهَرُ
- (are) purer
- மிக சுத்தமானவர்(கள்)
- lakum
- لَكُمْۖ
- for you
- உங்களுக்கு
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- So fear
- ஆகவே, அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- walā tukh'zūni
- وَلَا تُخْزُونِ
- and (do) not disgrace me
- அவமானப்படுத்தாதீர் கள்/என்னை
- fī ḍayfī
- فِى ضَيْفِىٓۖ
- concerning my guests
- என் விருந்தினர் விஷயத்தில்
- alaysa
- أَلَيْسَ
- Is (there) not
- இல்லையா?
- minkum
- مِنكُمْ
- among you
- உங்களில்
- rajulun
- رَجُلٌ
- a man
- ஓர் ஆடவர்
- rashīdun
- رَّشِيدٌ
- right-minded?"
- நல்லறிவுள்ளவர்
Transliteration:
Wa jaaa'ahoo qawmuhoo yuhra'oona ilaihi wa min qablu kaanoo ya'maloonas saiyiaat; qaala yaa qawmi haaa'ulaaa'i banaatee hunna atharu lakum fattaqul laaha wa laa tukhzooni fee daifee alaisa minkum rajulur rasheed(QS. Hūd:78)
English Sahih International:
And his people came hastening to him, and before [this] they had been doing evil deeds. He said, "O my people, these are my daughters; they are purer for you. So fear Allah and do not disgrace me concerning my guests. Is there not among you a man of reason?" (QS. Hud, Ayah ௭௮)
Abdul Hameed Baqavi:
(இதற்குள்) அவருடைய மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய காரியங்களையே செய்து கொண்டிருந்தனர். (இதனை நாடியே அவரிடம் அவர்கள் வந்தனர்.) அதற்கு ("லூத்" நபி அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர். (அவர்களை திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். (உங்களுக்கு நல்லுபதேசம் செய்யும்) நல்ல மனிதன் ஒருவன் கூட உங்களிடம் இல்லையா?" என்று கேட்டார். (ஸூரத்து ஹூது, வசனம் ௭௮)
Jan Trust Foundation
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவருடைய மக்கள் அவர் பக்கம் விரைந்தவர்களாக அவரிடம் வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீயவற்றை செய்பவர்களாகவே இருந்தனர். “என் மக்களே! இவர்கள் என் பெண் பிள்ளைகள். அவர்கள் உங்களுக்கு மிக்க சுத்தமானவர்கள். (அவர்களை மணம்புரிந்து சுகமனுபவியுங்கள்). ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை அவமானப்படுத்தாதீர்கள். நல்லறிவுள்ள ஓர் ஆடவர் உங்களில் இல்லையா?” என்று கூறினார்.