Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௫

Qur'an Surah Hud Verse 75

ஸூரத்து ஹூது [௧௧]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اِبْرٰهِيْمَ لَحَلِيْمٌ اَوَّاهٌ مُّنِيْبٌ (هود : ١١)

inna ib'rāhīma
إِنَّ إِبْرَٰهِيمَ
Indeed Ibrahim
நிச்சயமாக இப்றாஹீம்
laḥalīmun
لَحَلِيمٌ
(was) certainly forbearing
சகிப்பாளர்
awwāhun
أَوَّٰهٌ
imploring
அதிகம் பிரார்த்திப்பவர்
munībun
مُّنِيبٌ
and oft-returning
திரும்பக்கூடியவர்

Transliteration:

Inna Ibraaheema lahaleemun awwwaahum muneeb (QS. Hūd:75)

English Sahih International:

Indeed, Abraham was forbearing, grieving and [frequently] returning [to Allah]. (QS. Hud, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இப்ராஹீம் மிக்க சகிப்பவராகவும், மிக இளகியமன முடையவராகவும் (எதற்கும்) நம்மையே நோக்குபவராகவும்இருந்தார். (ஸூரத்து ஹூது, வசனம் ௭௫)

Jan Trust Foundation

நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இப்றாஹீம் சகிப்பாளர், அதிகம் பிரார்த்திப்பவர், (நம் பக்கமே) திரும்பக்கூடியவர் ஆவார்.