Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭

Qur'an Surah Hud Verse 7

ஸூரத்து ஹூது [௧௧]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِيْ سِتَّةِ اَيَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَى الْمَاۤءِ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ۗوَلَىِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْۢ بَعْدِ الْمَوْتِ لَيَقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَٓا اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ (هود : ١١)

wahuwa
وَهُوَ
And He
அவன்
alladhī
ٱلَّذِى
(is) the One Who
எத்தகையவன்
khalaqa
خَلَقَ
created
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
இன்னும் பூமியை
fī sittati
فِى سِتَّةِ
in six
இல்/ஆறு
ayyāmin
أَيَّامٍ
epochs
நாள்கள்
wakāna
وَكَانَ
and His throne was
இன்னும் இருந்தது
ʿarshuhu
عَرْشُهُۥ
and His throne was
அவனுடைய அர்ஷு
ʿalā l-māi
عَلَى ٱلْمَآءِ
on the water
மீது/நீர்
liyabluwakum
لِيَبْلُوَكُمْ
that He might test [you]
அவன் உங்களை சோதிப்பதற்காக
ayyukum
أَيُّكُمْ
which of you
உங்களில் யார்
aḥsanu
أَحْسَنُ
(is) best
மிக அழகியவர்
ʿamalan
عَمَلًاۗ
(in) deed
செயலால்
wala-in qul'ta
وَلَئِن قُلْتَ
But if you say
நீர் கூறினால்
innakum
إِنَّكُم
"Indeed, you
நிச்சயமாக நீங்கள்
mabʿūthūna
مَّبْعُوثُونَ
(will be) resurrected
எழுப்பப்படுவீர்கள்
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னர்
l-mawti
ٱلْمَوْتِ
[the] death"
இறப்பு
layaqūlanna
لَيَقُولَنَّ
surely would say
நிச்சயம் கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
disbelieved
நிராகரித்தார்கள்
in
إِنْ
"This is not
இல்லை
hādhā
هَٰذَآ
"This is not
இது
illā
إِلَّا
but
தவிர
siḥ'run
سِحْرٌ
a magic
சூனியமே
mubīnun
مُّبِينٌ
clear"
பகிரங்கமான(து)

Transliteration:

Wa Huwal lazee khalaqas samaawaati wal alrda fee sittati aiyaaminw wa kaana 'Arshuhoo alal maaa'i liyablu wakum aiyukum ahsanu 'amalaa; wa la'in qulta innakum mab'oosoona mim ba'dil mawti la yaqoolanal lazeena kafaroo in haazaaa illaa sihrum mubeen (QS. Hūd:7)

English Sahih International:

And it is He who created the heavens and the earth in six days – and His Throne had been upon water – that He might test you as to which of you is best in deed. But if you say, "Indeed, you are resurrected after death," those who disbelieve will surely say, "This is not but obvious magic." (QS. Hud, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய "அர்ஷு" நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீங்கள் மனிதர்களை நோக்கி) "நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்" என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர். (ஸூரத்து ஹூது, வசனம் ௭)

Jan Trust Foundation

மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தவன். அவனுடைய ‘அர்ஷு’நீரின் மீதிருந்தது. உங்களில் யார் செயலால் மிக அழகியவர் என்று அவன் உங்களை சோதிப்பதற்காக (உங்களைப் படைத்தான்). “இறப்பிற்கு பின்னர் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்”என்று (நபியே) நீர் கூறினால், “இது பகிரங்கமான சூனியமே தவிர (வேறு) இல்லை”என்று நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்.