Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௬௫

Qur'an Surah Hud Verse 65

ஸூரத்து ஹூது [௧௧]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِيْ دَارِكُمْ ثَلٰثَةَ اَيَّامٍ ۗذٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوْبٍ (هود : ١١)

faʿaqarūhā
فَعَقَرُوهَا
But they hamstrung her
வெட்டினார்கள் அதை
faqāla
فَقَالَ
So he said
ஆகவே, கூறினார்
tamattaʿū
تَمَتَّعُوا۟
"Enjoy (yourselves)
சுகமாக இருங்கள்
فِى
in
இல்லத்தில்
dārikum
دَارِكُمْ
your home(s)
உங்கள்
thalāthata
ثَلَٰثَةَ
(for) three
மூன்று
ayyāmin
أَيَّامٍۖ
days
நாள்கள்
dhālika
ذَٰلِكَ
That
இது
waʿdun
وَعْدٌ
(is) a promise
ஒரு வாக்கு
ghayru makdhūbin
غَيْرُ مَكْذُوبٍ
not (to) be belied"
னஜிலஸீறீ©பீலிறீஜிறிலஸி

Transliteration:

Fa 'aqaroohaa faqaala tamatta'oo fee daarikum salaasata aiyaamin zaalika wa'dun ghairu makzoob (QS. Hūd:65)

English Sahih International:

But they hamstrung her, so he said, "Enjoy yourselves in your homes for three days. That is a promise not to be denied [i.e., unfailing]." (QS. Hud, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

எனினும், அவர்கள் (அவருடைய கட்டளைக்கு மாறுசெய்து) அதனை வெட்டி விட்டார்கள். ஆகவே, அவர் (அவர்களை நோக்கி, "இனி) மூன்று நாள்கள் வரையில் உங்கள் வீடுகளில் (இருந்து கொண்டு) நீங்கள் சுகமடையலாம். (அதற்குப் பின்னர் அல்லாஹ்வுடைய வேதனை உங்களை வந்தடையும்) இது தவறாத வாக்காகும்" என்று கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௬௫)

Jan Trust Foundation

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்)| “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை வெட்டினார்கள். ஆகவே, மூன்று நாள்கள் உங்கள் இல்லத்தில் (ஊரில்) சுகமாக இருங்கள். (பிறகு வேதனை வரும்.) இது ஒரு பொய்ப்பிக்கப்படாத வாக்காகும்“என்று (ஸாலிஹ்) கூறினார்.