Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௬௪

Qur'an Surah Hud Verse 64

ஸூரத்து ஹூது [௧௧]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَأْكُلْ فِيْٓ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْۤءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيْبٌ (هود : ١١)

wayāqawmi
وَيَٰقَوْمِ
And O my people!
என் மக்களே
hādhihi
هَٰذِهِۦ
This
இது
nāqatu
نَاقَةُ
she-camel
பெண் ஒட்டகம்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
lakum
لَكُمْ
(is) for you
உங்களுக்கு
āyatan
ءَايَةً
a Sign
அத்தாட்சியான
fadharūhā
فَذَرُوهَا
so leave her
ஆகவே, விட்டு விடுங்கள்/அதை
takul
تَأْكُلْ
to eat
அது சாப்பி(டட்)டும்
fī arḍi
فِىٓ أَرْضِ
in the earth
பூமியில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
walā tamassūhā
وَلَا تَمَسُّوهَا
and (do) not touch her
அதற்கு செய்யாதீர்கள்
bisūin
بِسُوٓءٍ
with harm
ஒரு கெடுதியையும்
fayakhudhakum
فَيَأْخُذَكُمْ
lest will seize you
பிடிக்கும்/உங்களை
ʿadhābun
عَذَابٌ
a punishment
ஒரு வேதனை
qarībun
قَرِيبٌ
impending"
அதிசீக்கிரமானது

Transliteration:

Wa yaa qawmi haazihee naaqatul laahi lakum aayatan fazaroohaa taakul feee ardil laahi wa laa tamassoohaa bisooo'in fa yaakhuzakum azaabun qareeb (QS. Hūd:64)

English Sahih International:

And O my people, this is the she-camel of Allah – [she is] to you a sign. So let her feed upon Allah's earth and do not touch her with harm, or you will be taken by an impending punishment." (QS. Hud, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, "என்னுடைய மக்களே! இது அல்லாஹ்வினுடைய ஒரு பெண் ஒட்டகமாகும். உங்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வினுடைய பூமியில் (அது விரும்பிய இடத்தில்) மேய அதனை விட்டுவிடுங்கள்; அதற்கு யாதொரு கெடுதலும் செய்ய(க் கருதி) அதனைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதிசீக்கிரத்தில் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்" (என்று சொன்னார்.) (ஸூரத்து ஹூது, வசனம் ௬௪)

Jan Trust Foundation

“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் மக்களே! இது உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பெண் ஒட்டகமாகும். ஆகவே, அதை விட்டுவிடுங்கள் அது அல்லாஹ்வின் பூமியில் சாப்பிடட்டும்; அதற்கு ஒரு கெடுதியையும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அதிசீக்கிரமான வேதனை உங்களைப் பிடிக்கும்.”