Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௫௯

Qur'an Surah Hud Verse 59

ஸூரத்து ஹூது [௧௧]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتِلْكَ عَادٌ ۖجَحَدُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهٗ وَاتَّبَعُوْٓا اَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيْدٍ (هود : ١١)

watil'ka
وَتِلْكَ
And this
இவர்கள்
ʿādun jaḥadū
عَادٌۖ جَحَدُوا۟
(was) Aad they rejected
ஆது/மறுத்தனர்
biāyāti
بِـَٔايَٰتِ
(the) Signs
அத்தாட்சிகளை
rabbihim
رَبِّهِمْ
(of) their Lord
தங்கள் இறைவனின்
waʿaṣaw
وَعَصَوْا۟
and disobeyed
இன்னும் மாறு செய்தனர்
rusulahu
رُسُلَهُۥ
His Messengers
தூதர்களுக்கு/அவனுடைய
wa-ittabaʿū
وَٱتَّبَعُوٓا۟
and followed
இன்னும் பின்பற்றினர்
amra
أَمْرَ
(the) command
கட்டளை
kulli
كُلِّ
(of) every
எல்லோருடைய
jabbārin
جَبَّارٍ
tyrant
பிடிவாதக்காரர்கள்
ʿanīdin
عَنِيدٍ
obstinate
முரடர்கள்

Transliteration:

Wa tilka 'aad, jahadoo bi Aayaati Rabbihim wa 'asaw Rusulahoo wattaba'ooo amra kulli jabbaarin 'aneed (QS. Hūd:59)

English Sahih International:

And that was Aad, who rejected the signs of their Lord and disobeyed His messengers and followed the order of every obstinate tyrant. (QS. Hud, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இது "ஆது" மக்களின் (சரித்திரமாகும்.) அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை நிராகரித்து (அவர்களிடம் அனுப்பப்பட்ட) இறைவனின் தூதர்களுக்கு மாறு செய்தார்கள். அன்றி, பிடிவாதக்கார முரடர்கள் அனைவருடைய தீய வழிகாட்டல்களையும் அவர்கள் பின்பற்றினார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௫௯)

Jan Trust Foundation

(நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை மறுத்த, அ(ந்த இறை)வனுடைய தூதர்களுக்கு மாறு செய்த. பிடிவாதக்காரர்கள், முரடர்கள் (ஆகிய) எல்லோருடைய (தீய) கட்டளையை பின்பற்றிய ‘ஆது’(மக்கள்) இவர்கள்தான்.