குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௫௭
Qur'an Surah Hud Verse 57
ஸூரத்து ஹூது [௧௧]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنْ تَوَلَّوْا فَقَدْ اَبْلَغْتُكُمْ مَّآ اُرْسِلْتُ بِهٖٓ اِلَيْكُمْ ۗوَيَسْتَخْلِفُ رَبِّيْ قَوْمًا غَيْرَكُمْۗ وَلَا تَضُرُّوْنَهٗ شَيْـًٔا ۗاِنَّ رَبِّيْ عَلٰى كُلِّ شَيْءٍ حَفِيْظٌ (هود : ١١)
- fa-in tawallaw
- فَإِن تَوَلَّوْا۟
- So if you turn away
- நீங்கள் விலகினால்
- faqad
- فَقَدْ
- then verily
- திட்டமாக
- ablaghtukum
- أَبْلَغْتُكُم
- I have conveyed to you
- எடுத்துரைத்து விட்டேன்/உங்களுக்கு
- mā
- مَّآ
- what
- எதை
- ur'sil'tu
- أُرْسِلْتُ
- I was sent
- அனுப்பப்பட்டேன்
- bihi
- بِهِۦٓ
- with [it]
- அதைக் கொண்டு
- ilaykum
- إِلَيْكُمْۚ
- to you
- உங்களிடம்
- wayastakhlifu
- وَيَسْتَخْلِفُ
- And my Lord will give succession
- இன்னும் தோன்றச் செய்வான்
- rabbī
- رَبِّى
- And my Lord will give succession
- என் இறைவன்
- qawman
- قَوْمًا
- (to) a people
- மக்களை
- ghayrakum
- غَيْرَكُمْ
- other than you
- அல்லாத(வர்கள்) நீங்கள்
- walā taḍurrūnahu
- وَلَا تَضُرُّونَهُۥ
- and not you will harm Him
- நீங்கள் தீங்கிழைக்க முடியாது/அவனுக்கு
- shayan inna
- شَيْـًٔاۚ إِنَّ
- (in) anything Indeed
- எதையும்
- rabbī
- رَبِّى
- my Lord
- நிச்சயமாக என் இறைவன்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- (is) on all things
- எல்லாவற்றின் மீது
- ḥafīẓun
- حَفِيظٌ
- a Guardian"
- பாதுகாவலன்
Transliteration:
Fa in tawallaw faqad ablaghtukum maaa ursiltu biheee ilaikum; wa yastakhlifu Rabbee qawman ghairakum wa laa tadur roonahoo shai'aa; inna Rabbee 'alaa kulli shai'in Hafeez(QS. Hūd:57)
English Sahih International:
But if you turn away, then I have already conveyed that with which I was sent to you. My Lord will give succession to a people other than you, and you will not harm Him at all. Indeed my Lord is, over all things, Guardian." (QS. Hud, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடம் எதற்காக அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) உங்களை அல்லாத வேறு மக்களை என் இறைவன் உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (இதற்காக) நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் அனைத்தையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். (ஆகவே, அவன் என்னையும் பாதுகாத்துக் கொள்வான்" என்றும் கூறினார்.) (ஸூரத்து ஹூது, வசனம் ௫௭)
Jan Trust Foundation
“நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் விலகினால் (எனக்கொன்றுமில்லை.) நான் உங்களிடம் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு திட்டமாக எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் தோன்றச் செய்வான்; நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. நிச்சயமாக என் இறைவன் எல்லாவற்றின் மீதும் (கண்கானிப்பவன் இன்னும்) பாதுகாவலன் ஆவான்.”