Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௫௪

Qur'an Surah Hud Verse 54

ஸூரத்து ஹூது [௧௧]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَرٰىكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْۤءٍ ۗقَالَ اِنِّيْٓ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْٓا اَنِّيْ بَرِيْۤءٌ مِّمَّا تُشْرِكُوْنَ (هود : ١١)

in naqūlu
إِن نَّقُولُ
Not we say
கூறமாட்டோம்
illā
إِلَّا
except (that)
தவிர
iʿ'tarāka baʿḍu
ٱعْتَرَىٰكَ بَعْضُ
have seized you some
தீண்டி விட்டன/உம்மை/சில
ālihatinā
ءَالِهَتِنَا
(of) our gods
எங்கள் தெய்வங்களில்
bisūin
بِسُوٓءٍۗ
with evil"
ஒரு தீமையைக் கொண்டு
qāla
قَالَ
He said
கூறினார்
innī
إِنِّىٓ
"Indeed, I
நிச்சயமாக நான்
ush'hidu
أُشْهِدُ
[I] call Allah to witness
சாட்சியாக்குகிறேன்
l-laha
ٱللَّهَ
[I] call Allah to witness
அல்லாஹ்வை
wa-ish'hadū
وَٱشْهَدُوٓا۟
and (you) bear witness
நீங்கள் சாட்சி கூறுங்கள்
annī
أَنِّى
that I am
நிச்சயமாக நான்
barīon
بَرِىٓءٌ
innocent
விலகியவன்
mimmā tush'rikūna
مِّمَّا تُشْرِكُونَ
of what you associate
நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து

Transliteration:

In naqoolu illa' taraaka ba'du aalihatinaa bisooo'; qaala inneee ushhidul laaha wash hadooo annee bareee'um mimmaa tushrikoon (QS. Hūd:54)

English Sahih International:

We only say that some of our gods have possessed you with evil [i.e., insanity]." He said, "Indeed, I call Allah to witness, and witness [yourselves] that I am free from whatever you associate with Allah (QS. Hud, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, "எங்களுடைய சில தெய்வங்கள் உங்களுக்குக் கேடு உண்டுபண்ணி விட்டன. (ஆதலால், நீங்கள் மதியிழந்து விட்டீர்கள்!) என்றும் கூறினார்கள். அதற்கவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவைகளிலிருந்து விலகிக் கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௫௪)

Jan Trust Foundation

“எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை” (என்றும் கூறினார்கள்| அதற்கு) அவர், “நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘‘எங்கள் தெய்வங்களில் சில உம்மை ஒரு தீமையைக் கொண்டு தீண்டிவிட்டன என்றே தவிர கூறமாட்டோம்”(என்றும் கூறினர். ஹூது) கூறினார்:“அவனை அன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன் என்பதற்கு நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்கு கிறேன்; நீங்களும் சாட்சி கூறுங்கள் ஆகவே, அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். பிறகு, எனக்கு அவகாசமளிக்காதீர்கள்.’’