குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௫௩
Qur'an Surah Hud Verse 53
ஸூரத்து ஹூது [௧௧]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا يٰهُوْدُ مَاجِئْتَنَا بِبَيِّنَةٍ وَّمَا نَحْنُ بِتَارِكِيْٓ اٰلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِيْنَ (هود : ١١)
- qālū yāhūdu
- قَالُوا۟ يَٰهُودُ
- They said "O Hud!
- கூறினர்/ஹூதே!
- mā ji'tanā
- مَا جِئْتَنَا
- You have not brought us You have not brought us
- நீர் வரவில்லை/நம்மிடம்
- bibayyinatin
- بِبَيِّنَةٍ
- clear proofs
- ஓர் அத்தாட்சியைக் கொண்டு
- wamā naḥnu
- وَمَا نَحْنُ
- and not we
- இன்னும் இல்லை/நாங்கள்
- bitārikī
- بِتَارِكِىٓ
- (will) leave
- விடுபவர்களாக
- ālihatinā
- ءَالِهَتِنَا
- our gods
- தெய்வங்களை/எங்கள்
- ʿan qawlika
- عَن قَوْلِكَ
- on your saying
- உம் சொல்லுக்காக
- wamā naḥnu
- وَمَا نَحْنُ
- and not we (are)
- இன்னும் இல்லை/நாங்கள்
- laka
- لَكَ
- in you
- உம்மை
- bimu'minīna
- بِمُؤْمِنِينَ
- believers
- நம்பிக்கை கொண்டவர்களாக
Transliteration:
Qaaloo yaa Hoodu maa ji'tanaa bibaiyinatinw wa maa nahnu bitaarikeee aalihatinaa 'an qawlika wa maa nahnu laka bimu'mineen(QS. Hūd:53)
English Sahih International:
They said, "O Hud, you have not brought us clear evidence, and we are not ones to leave our gods on your say-so. Nor are we believers in you. (QS. Hud, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள், "ஹூதே! நீங்கள் (நாம் விரும்பியவாறு) யாதொரு அத்தாட்சியும் நம்மிடம் கொண்டு வரவில்லை. உங்களுடைய சொல்லுக்காக நாங்கள் எங்களுடைய தெய்வங்களை விட்டுவிட மாட்டோம். உங்களை நாங்கள் நம்பவும் மாட்டோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௫௩)
Jan Trust Foundation
(அதற்கு) அவர்கள்| “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“ஹூதே! எந்த ஓர் அத்தாட்சியையும் நம்மிடம் நீர் கொண்டு வரவில்லை. உம் சொல்லுக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களை விடுபவர்களாக இல்லை. உம்மை நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லை” என்று கூறினர்.