குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௫௨
Qur'an Surah Hud Verse 52
ஸூரத்து ஹூது [௧௧]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْٓا اِلَيْهِ يُرْسِلِ السَّمَاۤءَ عَلَيْكُمْ مِّدْرَارًا وَّيَزِدْكُمْ قُوَّةً اِلٰى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِيْنَ (هود : ١١)
- wayāqawmi
- وَيَٰقَوْمِ
- And O my people!
- என் மக்களே
- is'taghfirū
- ٱسْتَغْفِرُوا۟
- Ask forgiveness
- மன்னிப்புக் கோருங்கள்
- rabbakum
- رَبَّكُمْ
- (of) your Lord
- உங்கள் இறைவனிடம்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- tūbū
- تُوبُوٓا۟
- turn in repentance
- திருந்தி திரும்புங்கள்
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவன் பக்கம்
- yur'sili
- يُرْسِلِ
- He will send
- அனுப்புவான்
- l-samāa
- ٱلسَّمَآءَ
- (from) the sky (rain)
- மழையை
- ʿalaykum
- عَلَيْكُم
- upon you
- உங்களுக்கு
- mid'rāran
- مِّدْرَارًا
- (in) abundance
- தாரை தாரையாக
- wayazid'kum
- وَيَزِدْكُمْ
- and increase you
- இன்னும் அதிகப்படுத்துவான்/உங்களுக்கு
- quwwatan
- قُوَّةً
- (in) strength
- பலத்தை
- ilā quwwatikum
- إِلَىٰ قُوَّتِكُمْ
- (added) to your strength
- உங்கள் பலத்துடன்
- walā tatawallaw
- وَلَا تَتَوَلَّوْا۟
- And (do) not turn away
- திரும்பி விடாதீர்கள்
- muj'rimīna
- مُجْرِمِينَ
- (as) criminals"
- குற்றவாளிகளாக
Transliteration:
Wa yaa qawmis taghfiroo Rabbakum summa toobooo ilaihi yursilis samaaa'a 'alaikum midraaranw wa yazidkum quwwatan ilaa quwwatikum wa laa tatawallaw mujrimeen(QS. Hūd:52)
English Sahih International:
And O my people, ask forgiveness of your Lord and then repent to Him. He will send [rain from] the sky upon you in showers and increase you in strength [added] to your strength. And do not turn away, [being] criminals." (QS. Hud, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரி (மனம் வருந்தி) அவன் பக்கமே திரும்புங்கள். (அவன் தடுத்திருக்கும்) மழையை உங்கள் மீது ஏராளமாகப் பொழியச் செய்வான். உங்களுடைய பலத்தைப் பின்னும் (பின்னும்) அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள் அவனைப் புறக்கணித்துக் குற்றமிழைத்து விடாதீர்கள்" (என்றும் கூறினார்.) (ஸூரத்து ஹூது, வசனம் ௫௨)
Jan Trust Foundation
“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
‘‘என் மக்களே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். (பாவங்களை விட்டு) திருந்தி (நன்மை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். மழையை உங்களுக்கு தாரை தாரையாக அனுப்புவான். உங்கள் பலத்துடன் (மேலும்) பலத்தை உங்களுக்கு அதிகப்படுத்துவான். (புறக்கணித்த) குற்றவாளிகளாக திரும்பி விடாதீர்கள்.”