Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௫௧

Qur'an Surah Hud Verse 51

ஸூரத்து ஹூது [௧௧]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰقَوْمِ لَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ اَجْرًا ۗاِنْ اَجْرِيَ اِلَّا عَلَى الَّذِيْ فَطَرَنِيْ ۗ اَفَلَا تَعْقِلُوْنَ (هود : ١١)

yāqawmi
يَٰقَوْمِ
O my people!
என் மக்களே
lā asalukum
لَآ أَسْـَٔلُكُمْ
Not I ask you
நான் கேட்கவில்லை/உங்களிடம்
ʿalayhi
عَلَيْهِ
for it
அதற்காக
ajran
أَجْرًاۖ
any reward
ஒரு கூலியை
in ajriya
إِنْ أَجْرِىَ
Not (is) my reward
என் கூலி இல்லை
illā ʿalā
إِلَّا عَلَى
except from
தவிர/மீது
alladhī
ٱلَّذِى
the One Who
எத்தகையவன்
faṭaranī
فَطَرَنِىٓۚ
created me
படைத்தான்/என்னை
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
Then will not you use reason?
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Transliteration:

Yaa qawmi laaa as'alukum 'alaihi ajran in ajriya illaa 'alal lazee fataranee; afalaa ta'qiloon (QS. Hūd:51)

English Sahih International:

O my people, I do not ask you for it [i.e., my advice] any reward. My reward is only from the one who created me. Then will you not reason? (QS. Hud, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி என்னை படைத்தவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்து ஹூது, வசனம் ௫௧)

Jan Trust Foundation

“என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் மக்களே! அதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. சிந்தித்துப் புரியமாட்டீர்களா?