Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௫௦

Qur'an Surah Hud Verse 50

ஸூரத்து ஹூது [௧௧]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا ۗقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ۗاِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ (هود : ١١)

wa-ilā
وَإِلَىٰ
And to
இடம்
ʿādin
عَادٍ
Aad
ஆது
akhāhum
أَخَاهُمْ
(We sent) their brother
சகோதரர் அவர்களுடைய
hūdan
هُودًاۚ
Hud
ஹூதை
qāla
قَالَ
He said
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் மக்களே
uʿ'budū
ٱعْبُدُوا۟
Worship
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
mā lakum
مَا لَكُم
not (is) for you
உங்களுக்கில்லை
min
مِّنْ
any
அறவே
ilāhin
إِلَٰهٍ
god
வணக்கத்திற்குரியவன்
ghayruhu
غَيْرُهُۥٓۖ
other than Him
அவனையன்றி
in antum
إِنْ أَنتُمْ
Not you
நீங்கள் இல்லை
illā
إِلَّا
(are) but
தவிர
muf'tarūna
مُفْتَرُونَ
inventors
புனைபவர்களாகவே

Transliteration:

Wa ilaa 'aadin akhaahum Hoodaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhooo in antum illaa muftaroon (QS. Hūd:50)

English Sahih International:

And to Aad [We sent] their brother Hud. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. You are not but inventors [of falsehood]. (QS. Hud, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

"ஆது" (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் "ஹூதை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களை நோக்கி) அவர் கூறினார்: "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. (வேறு இறைவன் உண்டென்று கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே. (ஸூரத்து ஹூது, வசனம் ௫௦)

Jan Trust Foundation

“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்| “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘ஆது’(எனும் மக்கள்) இடம் அவர்களுடைய சகோதரர் -ஹூதை- (அனுப்பினோம்). “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (வேறு) வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு அறவே இல்லை. புனைபவர்களாகவே தவிர நீங்கள் வேறில்லை என்று கூறினார்.