Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௫

Qur'an Surah Hud Verse 5

ஸூரத்து ஹூது [௧௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَآ اِنَّهُمْ يَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِيَسْتَخْفُوْا مِنْهُۗ اَلَا حِيْنَ يَسْتَغْشُوْنَ ثِيَابَهُمْ ۙيَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَۚ اِنَّهٗ عَلِيْمٌ ۢ بِذَاتِ الصُّدُوْرِ ۔ (هود : ١١)

alā
أَلَآ
No doubt!
அறிவீராக
innahum
إِنَّهُمْ
They
நிச்சயமாக இவர்கள்
yathnūna
يَثْنُونَ
fold up
திருப்புகின்றனர்
ṣudūrahum
صُدُورَهُمْ
their breasts
நெஞ்சங்களை/தங்கள்
liyastakhfū
لِيَسْتَخْفُوا۟
that they may hide
அவர்கள் மறைப்பதற்காக
min'hu
مِنْهُۚ
from Him
அவனிடமிருந்து
alā
أَلَا
Surely
அறிவீராக
ḥīna
حِينَ
when
நேரம், சமயம்
yastaghshūna
يَسْتَغْشُونَ
they cover (themselves)
மறைத்துக் கொள்கிறார்கள்
thiyābahum
ثِيَابَهُمْ
(with) their garments
தங்கள் ஆடைகளால்
yaʿlamu
يَعْلَمُ
He knows
அறிகின்றான்
mā yusirrūna
مَا يُسِرُّونَ
what they conceal
எதை/மறைக்கிறார்கள்
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَۚ
and what they reveal
இன்னும் எதை/பகிரங்கப்படுத்துகிறார்கள்
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All-Knower
நன்கறிபவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
of what (is in) the breasts
நெஞ்சங்களில் உள்ளவற்றை

Transliteration:

Alaa innahum yasnoona sudoorahum liyastakhfoo minh; alaa heena yastaghshoona siyaabahum ya'lamu maa yusiroona wa maa yu'linoon; innahoo 'aleemum bizaatis sudoor (QS. Hūd:5)

English Sahih International:

Unquestionably, they [i.e., the disbelievers] turn away their breasts to hide themselves from him. Unquestionably, [even] when they cover themselves in their clothing, He [i.e., Allah] knows what they conceal and what they declare. Indeed, He is Knowing of that within the breasts. (QS. Hud, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(இந்தப் பாவிகள் தங்கள் தீய எண்ணங்களை) அல்லாஹ்வுக்கு மறைப்பதற்காக (அவற்றைத்) தங்கள் உள்ளங்களில் (வைத்து) மடித்து மறைக்கக் கருதுகின்றனர் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள். (நித்திரைக்குச் செல்லும்போது) அவர்கள் தங்கள் போர்வையைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ளும் சமயத்தில் (தங்கள் உள்ளங்களில்) அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் அவன் அறிகிறான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ள (ரகசியங்கள்) அனைத்தையும் நன்கறிந்தவன். (ஸூரத்து ஹூது, வசனம் ௫)

Jan Trust Foundation

“அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து) மறைத்துக் கொள்வதற்காகத் தங்கள் இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின் (இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்” (என்பதை அறிந்து கொள்வீர்களாக)!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அறிவீராக! நிச்சயமாக இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக தங்கள் நெஞ்சங்களை திருப்புகின்றனர். (நபியே!) அறிவீராக! அவர்கள் தங்கள் ஆடைகளால் (தங்களை) மறைத்துக்கொள்ளும் சமயம் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் அறிகின்றான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் ஆவான்.