குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௪௯
Qur'an Surah Hud Verse 49
ஸூரத்து ஹூது [௧௧]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تِلْكَ مِنْ اَنْۢبَاۤءِ الْغَيْبِ نُوْحِيْهَآ اِلَيْكَ ۚمَا كُنْتَ تَعْلَمُهَآ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَاۚ فَاصْبِرْۚ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِيْنَ ࣖ (هود : ١١)
- til'ka min anbāi
- تِلْكَ مِنْ أَنۢبَآءِ
- This (is) from the news
- இவை/சரித்திரங்களில்
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- (of) the unseen
- மறைவான(து)
- nūḥīhā
- نُوحِيهَآ
- (which) We reveal
- வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை
- ilayka
- إِلَيْكَۖ
- to you
- உமக்கு
- mā kunta
- مَا كُنتَ
- Not you were
- நீர் இருக்கவில்லை
- taʿlamuhā
- تَعْلَمُهَآ
- knowing it
- அறிவீர்/இவற்றை
- anta
- أَنتَ
- you
- நீரோ
- walā qawmuka
- وَلَا قَوْمُكَ
- and not your people
- இன்னும் இல்லை/உமது மக்களோ
- min qabli
- مِن قَبْلِ
- from before
- முன்னர்
- hādhā
- هَٰذَاۖ
- this
- இதற்கு
- fa-iṣ'bir
- فَٱصْبِرْۖ
- So be patient
- ஆகவே பொறுப்பீராக
- inna l-ʿāqibata
- إِنَّ ٱلْعَٰقِبَةَ
- indeed the end
- நிச்சயமாக முடிவு
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- (is) for the God fearing"
- அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
Transliteration:
Tilka min ambaaa'il ghaibi nooheehaaa ilaika maa kunta ta'lamuhaaaa anta wa laa qawmuka min qabli haazaa fasbir innal 'aaqibata lilmuttaqeen(QS. Hūd:49)
English Sahih International:
That is from the news of the unseen which We reveal to you, [O Muhammad]. You knew it not, neither you nor your people, before this. So be patient; indeed, the [best] outcome is for the righteous. (QS. Hud, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இது (உங்களுக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹீ மூலமாகவே நாம் இதனை உங்களுக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீங்களோ அல்லது உங்களுடைய மக்களோ இதனை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப் போல் நீங்களும் கஷ்டங்களைச்) சகித்துப் பொறுத்திருங்கள். நிச்சயமாக முடிவான வெற்றி இறை அச்சம் உடையவர்களுக்குத்தான். (ஸூரத்து ஹூது, வசனம் ௪௯)
Jan Trust Foundation
(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இவை (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இவற்றை அறிந்திருக்கவில்லை. ஆகவே, பொறுப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கே.