குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௪௪
Qur'an Surah Hud Verse 44
ஸூரத்து ஹூது [௧௧]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقِيْلَ يٰٓاَرْضُ ابْلَعِيْ مَاۤءَكِ وَيَا سَمَاۤءُ اَقْلِعِيْ وَغِيْضَ الْمَاۤءُ وَقُضِيَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُوْدِيِّ وَقِيْلَ بُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِيْنَ (هود : ١١)
- waqīla
- وَقِيلَ
- And it was said
- கூறப்பட்டது
- yāarḍu
- يَٰٓأَرْضُ
- "O earth!
- பூமியே
- ib'laʿī
- ٱبْلَعِى
- Swallow
- விழுங்கு
- māaki
- مَآءَكِ
- your water
- தண்ணீரை/உன்
- wayāsamāu
- وَيَٰسَمَآءُ
- and O sky!
- இன்னும் வானமே
- aqliʿī
- أَقْلِعِى
- Withhold"
- நிறுத்து
- waghīḍa
- وَغِيضَ
- And subsided
- இன்னும் வற்றியது
- l-māu
- ٱلْمَآءُ
- the water
- தண்ணீர்
- waquḍiya
- وَقُضِىَ
- and was fulfilled
- இன்னும் முடிக்கப்பட்டது
- l-amru
- ٱلْأَمْرُ
- the Command
- காரியம்
- wa-is'tawat
- وَٱسْتَوَتْ
- And it rested
- இன்னும் தங்கியது
- ʿalā l-jūdiyi
- عَلَى ٱلْجُودِىِّۖ
- on the Judi
- ஜூதி மலையில்
- waqīla
- وَقِيلَ
- And it was said
- இன்னும் கூறப்பட்டது
- buʿ'dan
- بُعْدًا
- "Away
- அழிவுதான்
- lil'qawmi
- لِّلْقَوْمِ
- with the people
- மக்களுக்கு
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers"
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Wa qeela yaaa ardubla'ee maaa'aki wa yaa samaaa'u aqi'ee wa gheedal maaa'u wa qudiyal amru wastawat 'alal joodiyyi wa qeela bu'dal lilqawmiz zaalimeen(QS. Hūd:44)
English Sahih International:
And it was said, "O earth, swallow your water, and O sky, withhold [your rain]." And the water subsided, and the matter was accomplished, and it [i.e., the ship] came to rest on the [mountain of] J´diyy. And it was said, "Away with the wrongdoing people." (QS. Hud, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
பின்னர் "பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடு; வானமே! (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்" என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) "ஜூதி" (என்னும்) மலையில் தங்கியது; அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்" என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது. (ஸூரத்து ஹூது, வசனம் ௪௪)
Jan Trust Foundation
பின்னர்| “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“பூமியே! உன் தண்ணீரை விழுங்கு; வானமே! (பொழிவதை) நிறுத்து” என்று கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. (அவர்களின்) காரிய(மு)ம் முடிக்கப்பட்டது. (அக்கப்பல்) ‘ஜூதி’ மலையில் தங்கியது; அநியாயக்கார மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்”என்று கூறப்பட்டது.