குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௪௩
Qur'an Surah Hud Verse 43
ஸூரத்து ஹூது [௧௧]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ سَاٰوِيْٓ اِلٰى جَبَلٍ يَّعْصِمُنِيْ مِنَ الْمَاۤءِ ۗقَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ ۚوَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِيْنَ (هود : ١١)
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- saāwī
- سَـَٔاوِىٓ
- "I will betake myself
- ஒதுங்குவேன்
- ilā
- إِلَىٰ
- to
- மேல்
- jabalin
- جَبَلٍ
- a mountain
- ஒரு மலை
- yaʿṣimunī
- يَعْصِمُنِى
- (that) will save me
- காக்கும்/என்னை
- mina
- مِنَ
- from
- இருந்து
- l-māi
- ٱلْمَآءِۚ
- the water"
- நீர்
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- lā
- لَا
- "(There is) no
- அறவே இல்லை
- ʿāṣima
- عَاصِمَ
- protector
- பாதுகாப்பவர்
- l-yawma
- ٱلْيَوْمَ
- today
- இன்று
- min
- مِنْ
- from
- இருந்து
- amri
- أَمْرِ
- the Command of Allah
- கட்டளை
- l-lahi
- ٱللَّهِ
- the Command of Allah
- அல்லாஹ்வின்
- illā
- إِلَّا
- except
- தவிர
- man
- مَن
- (on) whom
- எவர்
- raḥima
- رَّحِمَۚ
- He has mercy"
- கருணை காட்டினான்
- waḥāla
- وَحَالَ
- And came
- இன்னும் தடையானது
- baynahumā
- بَيْنَهُمَا
- (in) between them
- அவ்விருவருக்கும் இடையில்
- l-mawju
- ٱلْمَوْجُ
- the waves
- அலை
- fakāna
- فَكَانَ
- so he was
- ஆகவே ஆகினான்
- mina l-mugh'raqīna
- مِنَ ٱلْمُغْرَقِينَ
- among the drowned
- மூழ்கடிக்கப்பட்டவர்களில்
Transliteration:
Qaala sa aaweee ilaa jabaliny ya'simunee minal maaa'; qaala laa 'aasimal yawma min amril laahi illaa mar rahim; wa haala bainahumal mawju fakaana minal mughraqeen(QS. Hūd:43)
English Sahih International:
[But] he said, "I will take refuge on a mountain to protect me from the water." [Noah] said, "There is no protector today from the decree of Allah, except for whom He gives mercy." And the waves came between them, and he was among the drowned. (QS. Hud, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
அதற்கவன் "இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக் கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்" என்று கூறினான். அதற்கவர் "அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது" என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கி விட்டான். (ஸூரத்து ஹூது, வசனம் ௪௩)
Jan Trust Foundation
அதற்கு அவன்| “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அதற்கவன்) “(வெள்ள) நீரிலிருந்து என்னைக் காக்கும் ஒரு மலையின் மேல் ஒதுங்குவேன்”என்று கூறினான். “இன்று அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து பாதுகாப்பவர் அறவே இல்லை அவன் கருணை காட்டியவரைத் தவிர”என்று கூறினார். (அது சமயம்) அவ்விருவருக்கும் இடையில் அலை தடையானது. ஆகவே, அவன் (அதில்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஆகினான்.