குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௪௨
Qur'an Surah Hud Verse 42
ஸூரத்து ஹூது [௧௧]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهِيَ تَجْرِيْ بِهِمْ فِيْ مَوْجٍ كَالْجِبَالِۗ وَنَادٰى نُوْحُ ِۨابْنَهٗ وَكَانَ فِيْ مَعْزِلٍ يّٰبُنَيَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ (هود : ١١)
- wahiya
- وَهِىَ
- And it
- அது (கப்பல்)
- tajrī
- تَجْرِى
- sailed
- செல்கிறது
- bihim
- بِهِمْ
- with them
- அவர்களைக்கொண்டு
- fī mawjin
- فِى مَوْجٍ
- on the waves
- அலையில்
- kal-jibāli
- كَٱلْجِبَالِ
- like mountains
- மலைகளைப் போன்று
- wanādā nūḥun
- وَنَادَىٰ نُوحٌ
- and Nuh called out and Nuh called out
- இன்னும் சப்தமிட்டு அழைத்தார்/நூஹ்
- ib'nahu
- ٱبْنَهُۥ
- (to) his son
- தன் மகனை
- wakāna
- وَكَانَ
- and he was
- இருந்தான்
- fī maʿzilin
- فِى مَعْزِلٍ
- [in] apart
- ஒரு விலகுமிடத்தில்
- yābunayya
- يَٰبُنَىَّ
- "O my son!
- என் மகனே!
- ir'kab
- ٱرْكَب
- Embark
- பயணி
- maʿanā
- مَّعَنَا
- with us
- எங்களுடன்
- walā takun
- وَلَا تَكُن
- and (do) not be
- ஆகிவிடாதே
- maʿa
- مَّعَ
- with
- உடன்
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- the disbelievers"
- நிராகரிப்பாளர்கள்
Transliteration:
Wa hiya tajree bihim fee mawjin kaljibaali wa naadaa Noohunib nahoo wa kaana fee ma'ziliny yaa bunai yarkam ma'anaa wa laa takum ma'al kaafireen(QS. Hūd:42)
English Sahih International:
And it sailed with them through waves like mountains, and Noah called to his son who was apart [from them], "O my son, come aboard with us and be not with the disbelievers." (QS. Hud, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக் கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னைவிட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி "என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)" என்று (சப்தமிட்டு) அழைத்தார். (ஸூரத்து ஹூது, வசனம் ௪௨)
Jan Trust Foundation
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கப்பல், மலைகளைப் போன்று அலை(களுக்கு மத்தி)யில் அவர்களை (சுமந்து)க் கொண்டு சென்றது. ஒரு விலகுமிடத்தில் (விலகி) இருந்த தன் மகனை நோக்கி “என் மகனே! எங்களுடன் (இதில்) பயணி, நிராகரிப்பாளர்களுடன் ஆகிவிடாதே”என்று சப்தமிட்டு (நூஹ்) அழைத்தார்.