Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௪௦

Qur'an Surah Hud Verse 40

ஸூரத்து ஹூது [௧௧]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حَتّٰىٓ اِذَا جَاۤءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُۙ قُلْنَا احْمِلْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ ۗوَمَآ اٰمَنَ مَعَهٗٓ اِلَّا قَلِيْلٌ (هود : ١١)

ḥattā
حَتَّىٰٓ
Till
இறுதியாக
idhā
إِذَا
when
போது
jāa
جَآءَ
came
வந்தது
amrunā
أَمْرُنَا
Our command
நம் கட்டளை
wafāra
وَفَارَ
and overflowed
இன்னும் பொங்கியது
l-tanūru
ٱلتَّنُّورُ
the oven
அடுப்பு
qul'nā
قُلْنَا
We said
கூறினோம்
iḥ'mil
ٱحْمِلْ
"Load
ஏற்றுவீராக
fīhā
فِيهَا
in it
அதில்
min
مِن
of
இருந்து
kullin
كُلٍّ
every kind
எல்லாம்
zawjayni
زَوْجَيْنِ
a pair
இரு ஜோடியை
ith'nayni
ٱثْنَيْنِ
two
இரண்டு
wa-ahlaka
وَأَهْلَكَ
and your family
இன்னும் உமது குடும்பத்தை
illā man
إِلَّا مَن
except who
தவிர/எவர்
sabaqa
سَبَقَ
has preceded
முந்தி விட்டது
ʿalayhi
عَلَيْهِ
against him
அவர் மீது
l-qawlu
ٱلْقَوْلُ
the word
வாக்கு
waman
وَمَنْ
and whoever
இன்னும் எவர்
āmana
ءَامَنَۚ
believed"
நம்பிக்கை கொண்டார்
wamā āmana
وَمَآ ءَامَنَ
And not believed
நம்பிக்கை கொள்ளவில்லை
maʿahu illā
مَعَهُۥٓ إِلَّا
with him except
அவருடன்/தவிர
qalīlun
قَلِيلٌ
a few
குறைவானவர்கள்

Transliteration:

Hattaaa izaa jaaa'a amrunaa wa faarat tannooru qulnah mil feehaa min kullin zawjainis naini wa ahlaka illaa man sabaqa 'alaihil qawlu wa man aaman; wa maaa aamana ma'ahooo illaa qaleel (QS. Hūd:40)

English Sahih International:

[So it was], until when Our command came and the oven overflowed, We said, "Load upon it [i.e., the ship] of each [creature] two mates and your family, except those about whom the word [i.e., decree] has preceded, and [include] whoever has believed." But none had believed with him, except a few. (QS. Hud, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி "ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள். (அழிந்து விடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்களுடைய மகன் ஆகிய)வர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர் களையும் அதில் ஏற்றிக் கொள்ளுங்கள்" என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை. (ஸூரத்து ஹூது, வசனம் ௪௦)

Jan Trust Foundation

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி|) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக, நம் கட்டளை வர, அடுப்பும் பொங்கவே எல்லாவற்றிலிருந்தும் (ஆண், பெண் என) இரண்டு ஜோடிகளையும் எவர் மீது (அவரை அழிப்போம் என்ற) வாக்கு முந்திவிட்டதோ அவரைத் தவிர (மற்ற) உமது குடும்பத்தையும் நம்பிக்கை கொண்டவரையும் அதில் ஏற்றுவீராக”என்று கூறினோம். (வெகு) குறைவானவர்கள் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கைகொள்ளவில்லை.