Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௩௫

Qur'an Surah Hud Verse 35

ஸூரத்து ஹூது [௧௧]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُۗ قُلْ اِنِ افْتَرَيْتُهٗ فَعَلَيَّ اِجْرَامِيْ وَاَنَا۠ بَرِيْۤءٌ مِّمَّا تُجْرِمُوْنَ ࣖ (هود : ١١)

am
أَمْ
Or
அல்லது
yaqūlūna
يَقُولُونَ
(do) they say
கூறுகிறார்கள்
if'tarāhu
ٱفْتَرَىٰهُۖ
"He has invented it?"
அவர் புனைந்தார்/இதை
qul
قُلْ
Say
கூறுவீராக
ini if'taraytuhu
إِنِ ٱفْتَرَيْتُهُۥ
"If I have invented it
நான் புனைந்திருந்தால்/அதை
faʿalayya
فَعَلَىَّ
then on me
என் மீதே
ij'rāmī
إِجْرَامِى
(is) my crime
என் குற்றம்
wa-anā
وَأَنَا۠
but I am
இன்னும் நான்
barīon
بَرِىٓءٌ
innocent
விலகியவன்
mimmā tuj'rimūna
مِّمَّا تُجْرِمُونَ
of what crimes you commit"
விட்டு/எவை/நீங்கள் குற்றம் புரிகிறீர்கள்

Transliteration:

Am yaqooloonaf taraahu qul inif taraituhoo fa'alaiya ijraamee wa ana bareee'um mimmaa tujrimoon (QS. Hūd:35)

English Sahih International:

Or do they say [about Prophet Muhammad (^)], "He invented it"? Say, "If I have invented it, then upon me is [the consequence of] my crime; but I am innocent of what [crimes] you commit." (QS. Hud, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) "நீங்கள் இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள்" என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீங்கள் கூறுங்கள்: "நான் அதனைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல. (ஸூரத்து ஹூது, வசனம் ௩௫)

Jan Trust Foundation

(நபியே! நீர் இதைக் கூறும் போது|) “இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்” என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்| “நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! உம்மைப் பற்றி) “அவர் இ(ந்த வேதத்)தைப் புனைந்தார்”என்று கூறுகிறார்களா? (அவ்வாறாயின்) கூறுவீராக! “நான் அதைப் புனைந்திருந்தால் என் மீதே என் குற்றம் சாரும். (உங்கள் மீதல்ல.) நீங்கள் புரியும் குற்றங்களை விட்டு நான் விலகியவன்.”