Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௩௪

Qur'an Surah Hud Verse 34

ஸூரத்து ஹூது [௧௧]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يَنْفَعُكُمْ نُصْحِيْٓ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ يُرِيْدُ اَنْ يُّغْوِيَكُمْ ۗهُوَ رَبُّكُمْ ۗوَاِلَيْهِ تُرْجَعُوْنَۗ (هود : ١١)

walā yanfaʿukum
وَلَا يَنفَعُكُمْ
And (will) not benefit you
பலனளிக்காது/உங்களுக்கு
nuṣ'ḥī
نُصْحِىٓ
my advice
என் நல்லுபதேசம்
in aradttu
إِنْ أَرَدتُّ
(even) if I wish
நான் நாடினால்
an anṣaḥa
أَنْ أَنصَحَ
to [I] advise
நான் நல்லுபதேசம்புரிய
lakum
لَكُمْ
[to] you
உங்களுக்கு
in kāna l-lahu
إِن كَانَ ٱللَّهُ
if it was Allah's it was Allah's
இருந்தால்/அல்லாஹ்
yurīdu
يُرِيدُ
will
நாடுகிறான்
an yugh'wiyakum
أَن يُغْوِيَكُمْۚ
to let you go astray
அவன் வழிகெடுக்க/உங்களை
huwa
هُوَ
He (is)
அவன்
rabbukum
رَبُّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned"
நீங்கள் திருப்பப்படுவீர்கள்

Transliteration:

Wa laa yanfa'ukum nusheee in arattu an ansaha lakum in kaanal laahu yureedu ai yughwi yakum; Huwa Rabbukum wa ilaihi turja'oon (QS. Hūd:34)

English Sahih International:

And my advice will not benefit you – although I wished to advise you – if Allah should intend to put you in error. He is your Lord, and to Him you will be returned." (QS. Hud, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அன்றி "நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. அவன்தான் உங்களைப் படைத்து காப்பவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்.) (ஸூரத்து ஹூது, வசனம் ௩௪)

Jan Trust Foundation

“நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நான் உங்களுக்கு நல்லுபதேசம் புரிய நாடினாலும், உங்களை வழிகெடுக்க அல்லாஹ் நாடி இருந்தால் என் நல்லுபதேசம் உங்களுக்கு பலனளிக்காது. அவன் உங்கள் இறைவன்; அவனிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.”