குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௩௦
Qur'an Surah Hud Verse 30
ஸூரத்து ஹூது [௧௧]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيٰقَوْمِ مَنْ يَّنْصُرُنِيْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْ ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ (هود : ١١)
- wayāqawmi
- وَيَٰقَوْمِ
- And O my people!
- என் மக்களே
- man
- مَن
- Who
- யார்?
- yanṣurunī
- يَنصُرُنِى
- would help me
- உதவுவார்/எனக்கு
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- against Allah
- அல்லாஹ்விடத்தில்
- in ṭaradttuhum
- إِن طَرَدتُّهُمْۚ
- if I drove them away
- நான் விரட்டினால்/அவர்களை
- afalā tadhakkarūna
- أَفَلَا تَذَكَّرُونَ
- Then will not you take heed?
- நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
Transliteration:
Wa yaa qawmi mai yansurunee minal laahi in tarattuhum; afalaa tazak karoon(QS. Hūd:30)
English Sahih International:
And O my people, who would protect me from Allah if I drove them away? Then will you not be reminded? (QS. Hud, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
அன்றி, என்னுடைய மக்களே! நான் அவர்களை விரட்டி விட்டால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அச்சமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? இவ்வளவு கூட நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா? (ஸூரத்து ஹூது, வசனம் ௩௦)
Jan Trust Foundation
“என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால்; அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார்? (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் மக்களே! நான் அவர்களை விரட்டினால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அதுசமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு யார் உதவுவார்? நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?