Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௩

Qur'an Surah Hud Verse 3

ஸூரத்து ஹூது [௧௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْٓا اِلَيْهِ يُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَّيُؤْتِ كُلَّ ذِيْ فَضْلٍ فَضْلَهٗ ۗوَاِنْ تَوَلَّوْا فَاِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيْرٍ (هود : ١١)

wa-ani is'taghfirū
وَأَنِ ٱسْتَغْفِرُوا۟
And that "Seek forgiveness
இன்னும் பாவமன்னிப்புக் கோருங்கள் என்று
rabbakum
رَبَّكُمْ
(of) your Lord
உங்கள் இறைவனிடம்
thumma tūbū
ثُمَّ تُوبُوٓا۟
and turn in repentance
பிறகு/திரும்புங்கள்
ilayhi
إِلَيْهِ
to Him
அவன் பக்கம்
yumattiʿ'kum
يُمَتِّعْكُم
He will let you
சுகமளிப்பான்/உங்களை
matāʿan
مَّتَٰعًا
enjoy
ஒரு சுகம்
ḥasanan
حَسَنًا
a good
அழகியது
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
for a term
வரை/ஒரு காலம்
musamman
مُّسَمًّى
appointed
குறிப்பிடப்பட்டது
wayu'ti
وَيُؤْتِ
And give
இன்னும் கொடுப்பான்
kulla
كُلَّ
(to) every
ஒவ்வொரு
dhī faḍlin
ذِى فَضْلٍ
owner (of) grace
அதிகமுடையவருக்கு
faḍlahu
فَضْلَهُۥۖ
His Grace
அதிகத்தை/அவருடைய
wa-in tawallaw
وَإِن تَوَلَّوْا۟
But if you turn away
நீங்கள் புறக்கணித்தால்
fa-innī
فَإِنِّىٓ
then indeed, I
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
fear
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
for you
உங்கள் மீது
ʿadhāba
عَذَابَ
(the) punishment
வேதனையை
yawmin
يَوْمٍ
(of) a Great Day
ஒரு நாளின்
kabīrin
كَبِيرٍ
(of) a Great Day
மாபெரும்

Transliteration:

Wa anis taghfiroo Rabbakum summa toobooo ilaihi yumatti'kum mataa'an hasanan ilaaa ajalim musammanw wa yu'ti kulla zee fadlin fadlahoo wa in tawallaw fa inneee akhaafu 'alaikum 'azaaba Yawmin Kabeer (QS. Hūd:3)

English Sahih International:

And [saying], "Seek forgiveness of your Lord and repent to Him, [and] He will let you enjoy a good provision for a specified term and give every doer of favor his favor [i.e., reward]. But if you turn away, then indeed, I fear for you the punishment of a great Day. (QS. Hud, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் உங்கள் இறைவனிடத்தில் பாவ மன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரையில் உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனை நிச்சயமாக உங்களை அணுகுமென்று நான் பயப்படுகிறேன். (ஸூரத்து ஹூது, வசனம் ௩)

Jan Trust Foundation

“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்; ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன்” (என்றும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். பிறகு, (நன்மை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிடப்பட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய சுகமான வாழ்வளிப்பான். அதிகமுடையவ(ர் அதை தர்மம் தரும் போது அவ)ருக்கு (மேலும்) அவருடைய அதிக(செல்வ)த்தை கொடுப்பான். நீங்கள் புறக்கணித்தால் ஒரு மாபெரும் நாளின் வேதனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன்.