குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௯
Qur'an Surah Hud Verse 29
ஸூரத்து ஹூது [௧௧]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيٰقَوْمِ لَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مَالًاۗ اِنْ اَجْرِيَ اِلَّا عَلَى اللّٰهِ وَمَآ اَنَا۠ بِطَارِدِ الَّذِيْنَ اٰمَنُوْاۗ اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰكِنِّيْٓ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ (هود : ١١)
- wayāqawmi
- وَيَٰقَوْمِ
- And O my people!
- என் மக்களே
- lā asalukum
- لَآ أَسْـَٔلُكُمْ
- not I ask (of) you
- நான் கேட்கவில்லை/உங்களிடம்
- ʿalayhi
- عَلَيْهِ
- for it
- இதன் மீது
- mālan
- مَالًاۖ
- any wealth
- ஒரு செல்வத்தை
- in ajriya
- إِنْ أَجْرِىَ
- Not (is) my reward
- என் கூலி இல்லை
- illā
- إِلَّا
- except
- தவிர
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِۚ
- from Allah
- அல்லாஹ் மீது
- wamā anā
- وَمَآ أَنَا۠
- And not I am
- இல்லை / நான்
- biṭāridi
- بِطَارِدِ
- going to drive away
- விரட்டுபவனாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்களை
- āmanū
- ءَامَنُوٓا۟ۚ
- believed
- நம்பிக்கை கொண்டார்கள்
- innahum
- إِنَّهُم
- Indeed they
- நிச்சயமாக அவர்கள்
- mulāqū
- مُّلَٰقُوا۟
- (will) be meeting
- சந்திப்பவர்கள்
- rabbihim
- رَبِّهِمْ
- their Lord
- தங்கள் இறைவனை
- walākinnī
- وَلَٰكِنِّىٓ
- but I
- என்றாலும் நிச்சயமாக நான்
- arākum
- أَرَىٰكُمْ
- see you
- காண்கிறேன்/ உங்களை
- qawman
- قَوْمًا
- (are) a people
- மக்களாக
- tajhalūna
- تَجْهَلُونَ
- ignorant
- நீங்கள் அறிய மாட்டீர்கள்
Transliteration:
Wa yaa qawmi laaa as'alukum 'alaihi maalan in ajriya illaa 'alal laah; wa maaa ana bitaaridil lazeena aamanoo; innahum mulaaqoo Rabbihim wa laakinneee araakum qawman tajhaloon(QS. Hūd:29)
English Sahih International:
And O my people, I ask not of you for it any wealth. My reward is not but from Allah. And I am not one to drive away those who have believed. Indeed, they will meet their Lord, but I see that you are a people behaving ignorantly. (QS. Hud, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
"அன்றி, என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடம் யாதொரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன். (ஸூரத்து ஹூது, வசனம் ௨௯)
Jan Trust Foundation
“அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே ஈமான் கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் மக்களே! இதன் மீது நான் உங்களிடம் செல்வத்தை (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. நம்பிக்கை கொண்டவர்களை விரட்டுபவனாகவும் நான் இல்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்கள் ஆவர். என்றாலும் நிச்சயமாக நான் உங்களை அறியாத மக்களாக காண்கிறேன்.