குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௮
Qur'an Surah Hud Verse 28
ஸூரத்து ஹூது [௧௧]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْ وَاٰتٰىنِيْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّيَتْ عَلَيْكُمْۗ اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْتُمْ لَهَا كٰرِهُوْنَ (هود : ١١)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் மக்களே
- ara-aytum
- أَرَءَيْتُمْ
- Do you see
- நீங்கள் கவனித்தீர்களா?
- in kuntu
- إِن كُنتُ
- if I was
- நான் இருந்து
- ʿalā bayyinatin
- عَلَىٰ بَيِّنَةٍ
- on (the) clear proof
- மீது/ஒரு தெளிவான அத்தாட்சி
- min
- مِّن
- from
- இருந்து
- rabbī
- رَّبِّى
- my Lord
- என் இறைவன்
- waātānī
- وَءَاتَىٰنِى
- while He has given me
- இன்னும் அளித்தான் எனக்கு
- raḥmatan
- رَحْمَةً
- mercy
- அருளை
- min ʿindihi
- مِّنْ عِندِهِۦ
- from Himself
- தன்னிடம்/இருந்து
- faʿummiyat
- فَعُمِّيَتْ
- but (it) has been obscured
- அவை மறைக்கப்பட்டன
- ʿalaykum
- عَلَيْكُمْ
- from you
- உங்களுக்கு
- anul'zimukumūhā
- أَنُلْزِمُكُمُوهَا
- should We compel you (to accept) it
- நாம் நிர்ப்பந்திப்போமா?/உங்களை/அவற்றை
- wa-antum
- وَأَنتُمْ
- while you (are)
- நீங்களும்
- lahā
- لَهَا
- averse to it?
- அவற்றை
- kārihūna
- كَٰرِهُونَ
- averse to it?
- வெறுப்பவர்களாக
Transliteration:
Qaala yaa qawmi ara'aitum in kuntu 'alaa baiyinatim mir Rabbee wa aataanee rahmatam min 'indihee fa'um miyat 'alaikum anulzimuku moohaa wa antum lahaa kaarihoon(QS. Hūd:28)
English Sahih International:
He said, "O my people, have you considered: if I should be upon clear evidence from my Lord while He has given me mercy from Himself but it has been made unapparent to you, should we force it upon you while you are averse to it? (QS. Hud, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
(அதற்கு) அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: "என்னுடைய மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனுடைய அத்தாட்சியின் மீது நான் நிலையாக இருந்தும் அவன் தன்னுடைய அருளைக்கொண்டு (நபித்துவத்தை) எனக்கு அளித்திருந்தும், அது உங்கள் கண்களுக்குப் புலப்படா(மல் அதனை நீங்கள் வெறுத்து) விட்டால், அதனைப் பின்பற்றும்படி நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா?. (ஸூரத்து ஹூது, வசனம் ௨௮)
Jan Trust Foundation
(அதற்கு) அவர் (மக்களை நோக்கி) “என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நூஹ்) கூறினார்: “என் மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனிடமிருந்து (கொடுக்கப்பட்ட) ஒரு தெளிவான அத்தாட்சியின் மீது நான் இருந்து அவன் தன்னிடமிருந்து அருளை எனக்கு அளித்திருந்து, அவை (எல்லாம்) உங்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டால், நீங்களும் அவற்றை வெறுப்பவர்களாக இருக்க, அவற்றை (ஏற்றுக் கொள்ள) உங்களை நாம் நிர்ப்பந்திப்போமா?”