Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௭

Qur'an Surah Hud Verse 27

ஸூரத்து ஹூது [௧௧]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰىكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰىكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِۚ وَمَا نَرٰى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ (هود : ١١)

faqāla
فَقَالَ
So said
கூறினார்(கள்)
l-mala-u
ٱلْمَلَأُ
the chiefs
தலைவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தார்கள்
min qawmihi
مِن قَوْمِهِۦ
from his people
அவருடைய சமுதாயத்தில்
mā narāka
مَا نَرَىٰكَ
"Not we see you
நாம் பார்க்கவில்லை/ உம்மை
illā
إِلَّا
but
தவிர
basharan
بَشَرًا
a man
ஒரு மனிதராக
mith'lanā
مِّثْلَنَا
like us
எங்களைப் போன்ற
wamā narāka
وَمَا نَرَىٰكَ
and not we see you
நாம் பார்க்கவில்லை/ உம்மை
ittabaʿaka
ٱتَّبَعَكَ
followed [you]
பின்பற்றினார்/உம்மை
illā alladhīna
إِلَّا ٱلَّذِينَ
except those who
தவிர/எவர்கள்
hum
هُمْ
[they]
அவர்கள்
arādhilunā
أَرَاذِلُنَا
(are) the lowest of us
எங்களில் மிக இழிவானவர்கள்
bādiya l-rayi
بَادِىَ ٱلرَّأْىِ
immature in opinion immature in opinion
வெளிப் பார்வையில்
wamā narā
وَمَا نَرَىٰ
And not we see
நாங்கள்பார்க்கவில்லை
lakum
لَكُمْ
in you
உங்களுக்கு
ʿalaynā
عَلَيْنَا
over us
எங்களைவிட
min faḍlin
مِن فَضْلٍۭ
any merit
எந்த ஒரு மேன்மையையும்
bal naẓunnukum
بَلْ نَظُنُّكُمْ
nay we think you
மாறாக/கருதுகிறோம்/உங்களை
kādhibīna
كَٰذِبِينَ
(are) liars"
பொய்யர்களாக

Transliteration:

Faqaalal mala ul lazeena kafaroo min qawmihee ma naraaka illaa basharam mislanaa wa maa naraakat taba'aka illal lazeena hum araazilunaa baadiyar raayi wa maa naraa lakum 'alainaa min fadlim bal nazunnukum kaazibeen (QS. Hūd:27)

English Sahih International:

So the eminent among those who disbelieved from his people said, "We do not see you but as a man like ourselves, and we do not see you followed except by those who are the lowest of us [and] at first suggestion. And we do not see in you over us any merit; rather, we think you are liars." (QS. Hud, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

அதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நாம் உங்களை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். அன்றி, வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே அன்றி (கண்ணியமானவர்கள்) உங்களைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் யாதொரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. அன்றி, நீங்கள் (அனைவரும்) பொய்ய ரெனவே நாங்கள் எண்ணுகிறோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௨௭)

Jan Trust Foundation

அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), “நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை - மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அதற்கு) அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த தலைவர்கள் “எங்களைப் போன்ற ஒரு மனிதனாகவே தவிர (தூதராக) நாம் உம்மை பார்க்கவில்லை. (எங்கள்) வெளிப் பார்வையில் எங்களில் மிக இழிவானவர்களே தவிர (மற்றவர்கள்) உம்மைப் பின்பற்றியதாக நாம் பார்க்கவில்லை. எங்களைவிட உங்களுக்கு எந்த ஒரு மேன்மையையும் நாங்கள் பார்க்கவில்லை. மாறாக, உங்களை பொய்யர்களாக கருதுகிறோம்” என்று கூறினார்கள்.