குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௪
Qur'an Surah Hud Verse 24
ஸூரத்து ஹூது [௧௧]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ مَثَلُ الْفَرِيْقَيْنِ كَالْاَعْمٰى وَالْاَصَمِّ وَالْبَصِيْرِ وَالسَّمِيْعِۗ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ ࣖ (هود : ١١)
- mathalu
- مَثَلُ
- (The) example
- உதாரணம்
- l-farīqayni
- ٱلْفَرِيقَيْنِ
- (of) the two parties
- இரு பிரிவினரின்
- kal-aʿmā
- كَٱلْأَعْمَىٰ
- (is) like the blind
- குருடனைப் போன்று
- wal-aṣami
- وَٱلْأَصَمِّ
- and the deaf
- இன்னும் செவிடன்
- wal-baṣīri
- وَٱلْبَصِيرِ
- and the seer
- இன்னும் பார்ப்பவன்
- wal-samīʿi
- وَٱلسَّمِيعِۚ
- and the hearer
- இன்னும் கேட்பவன்
- hal yastawiyāni
- هَلْ يَسْتَوِيَانِ
- Are they equal
- இருவரும் சமமாவார்களா?
- mathalan
- مَثَلًاۚ
- (in) comparison?
- உதாரணத்தால்
- afalā tadhakkarūna
- أَفَلَا تَذَكَّرُونَ
- Then will not you take heed?
- நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
Transliteration:
Masalul fareeqini kal a'maa wal asammi walbaseeri wassamee'; hal yastawiyaani masalaa; afalaa tazakkaroon(QS. Hūd:24)
English Sahih International:
The example of the two parties is like the blind and deaf, and the seeing and hearing. Are they equal in comparison? Then, will you not remember? (QS. Hud, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
இவ்விரு (பிரிவினரில் ஒரு) பிரிவினர் குருடனையும், செவிடனையும் (போலிருக்கின்றனர். மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவனையும் கேட்கும் சக்தியுடையவனையும் ஒத்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? (இந்த உதாரணத்தைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா? (ஸூரத்து ஹூது, வசனம் ௨௪)
Jan Trust Foundation
இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்| (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இந்த) இரு பிரிவினரின் உதாரணம் குருடன், செவிடன் இன்னும் பார்ப்பவன், கேட்பவனைப் போன்றாகும். இருவரும் சமமாவார்களா? நீங்கள் (இந்த வேதத்தை சிந்தித்து) நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?