Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௪

Qur'an Surah Hud Verse 14

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِلَّمْ يَسْتَجِيْبُوْا لَكُمْ فَاعْلَمُوْٓا اَنَّمَآ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّآ اِلٰهَ اِلَّا هُوَ ۚفَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ (هود : ١١)

fa-illam yastajībū
فَإِلَّمْ يَسْتَجِيبُوا۟
Then if not they respond
அவர்கள் பதில் அளிக்கவில்லையெனில்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
fa-iʿ'lamū annamā
فَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ
then know that
அறியுங்கள்/எல்லாம்
unzila
أُنزِلَ
it was sent down
இறக்கப்பட்டது
biʿil'mi
بِعِلْمِ
with the knowledge of Allah
அறிவைக் கொண்டே
l-lahi
ٱللَّهِ
with the knowledge of Allah
அல்லாஹ்வின்
wa-an lā
وَأَن لَّآ
and that (there is) no
இன்னும் நிச்சயமாக இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَۖ
except Him
தவிர/அவன்
fahal
فَهَلْ
Then, would
ஆகவே
antum mus'limūna
أَنتُم مُّسْلِمُونَ
you (be) Muslims?
நீங்கள் முஸ்லிம்கள்

Transliteration:

Fa il lam yastajeeboo lakum fa'lamooo annamaaa unzilla bi'ilmil laahi wa al laaa ilaaha illaa Huwa fahal antum muslimoon (QS. Hūd:14)

English Sahih International:

And if they do not respond to you – then know that it [i.e., the Quran] was revealed with the knowledge of Allah and that there is no deity except Him. Then, would you [not] be Muslims? (QS. Hud, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

"நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிடில், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) அருளப்பட்டதுதான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவீர்களா? (ஸூரத்து ஹூது, வசனம் ௧௪)

Jan Trust Foundation

அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்| “அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?” (என்று கூறவும்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(உங்கள் உதவியாளர்களை நீங்கள் அழைத்த பிறகு) அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கவில்லையெனில், (அது இறக்கப்பட்டதெல்லாம் அல்லாஹ்வின் அறிவைக் கொண்டுதான் என்பதையும் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை என்பதையும் அறியுங்கள். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்விற்கு மட்டும் பணிந்த) முஸ்லிம்களா(க ஆகிவிடுகிறீர்களா)? (என்று கூறுவீராக!)