குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௨௩
Qur'an Surah Hud Verse 123
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِلّٰهِ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَيْهِ يُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِۗ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ࣖ (هود : ١١)
- walillahi
- وَلِلَّهِ
- And for Allah
- அல்லாஹ்வுக்கே
- ghaybu
- غَيْبُ
- (is the) unseen
- மறைவானவை
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமி
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- and to Him
- அவனிடமே
- yur'jaʿu
- يُرْجَعُ
- will be returned
- திருப்பப்படும்
- l-amru
- ٱلْأَمْرُ
- the matter
- காரியங்கள்
- kulluhu
- كُلُّهُۥ
- all (of) it
- அவை எல்லாம்
- fa-uʿ'bud'hu
- فَٱعْبُدْهُ
- so worship Him
- ஆகவே, அவனை வணங்குவீராக
- watawakkal
- وَتَوَكَّلْ
- and put your trust
- நம்பிக்கை வைப்பீராக
- ʿalayhi
- عَلَيْهِۚ
- upon Him
- அவன் மீதே
- wamā
- وَمَا
- And your Lord is not
- இல்லை
- rabbuka
- رَبُّكَ
- And your Lord is not
- உம் இறைவன்
- bighāfilin
- بِغَٰفِلٍ
- unaware
- கண்காணிக்காதவனாக
- ʿammā taʿmalūna
- عَمَّا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்பவற்றை
Transliteration:
Wa lillaahi ghaibus samaawaati wal ardi wa ilaihi yurja'ul amru kulluhoo fa'bu-dhu wa tawakkal 'alaih; wa maa Rabbuka bighaafilin 'ammaa ta'maloon(QS. Hūd:123)
English Sahih International:
And to Allah belong the unseen [aspects] of the heavens and the earth and to Him will be returned the matter, all of it, so worship Him and rely upon Him. And your Lord is not unaware of that which you do. (QS. Hud, Ayah ௧௨௩)
Abdul Hameed Baqavi:
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவை அனைத்தும் (அவற்றின் ஞானமும்) அல்லாஹ்வுக்குரியனவே! எல்லா காரியங்களும் அவனிடமே கொண்டு வரப்படும். ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனையே நம்புங்கள். உங்கள் இறைவன் நீங்கள் செய்பவைகளைப் பற்றி பராமுகமாயில்லை." (ஸூரத்து ஹூது, வசனம் ௧௨௩)
Jan Trust Foundation
வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்கள் இன்னும் பூமியின் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன! அவனிடமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும். ஆகவே, அவனை வணங்குவீராக! அவன் மீதே நம்பிக்கை வைப்பீராக! உம் இறைவன் நீங்கள் செய்பவற்றைப் பற்றி கண்காணிக்காதவனாக இல்லை.பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...