Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௨

Qur'an Surah Hud Verse 12

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوْحٰىٓ اِلَيْكَ وَضَاۤىِٕقٌۢ بِهٖ صَدْرُكَ اَنْ يَّقُوْلُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ كَنْزٌ اَوْ جَاۤءَ مَعَهٗ مَلَكٌ ۗاِنَّمَآ اَنْتَ نَذِيْرٌ ۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ وَّكِيْلٌ ۗ (هود : ١١)

falaʿallaka
فَلَعَلَّكَ
Then possibly you
நீர் ஆகலாம்
tārikun baʿḍa
تَارِكٌۢ بَعْضَ
(may) give up a part
விட்டுவிடக்கூடிய வராக/சிலவற்றை
mā yūḥā
مَا يُوحَىٰٓ
(of) what is revealed
எவை/வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
waḍāiqun
وَضَآئِقٌۢ
and straitened
இன்னும் நெருக்கடியாக
bihi
بِهِۦ
by it
அதன் மூலம்
ṣadruka
صَدْرُكَ
your breast
நெஞ்சம்/உம்
an yaqūlū
أَن يَقُولُوا۟
because they say
அவர்கள் கூறுவது
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
"Why not is sent down
இறக்கப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
for him
அவருக்கு
kanzun
كَنزٌ
a treasure
ஒரு பொக்கிஷம்
aw
أَوْ
or
அல்லது
jāa
جَآءَ
has come
வரவேண்டாமா
maʿahu
مَعَهُۥ
with him
அவருடன்
malakun
مَلَكٌۚ
an Angel?"
ஒரு வானவர்
innamā anta
إِنَّمَآ أَنتَ
Only you
நீரெல்லாம்
nadhīrun
نَذِيرٌۚ
(are) a warner
ஓர் எச்சரிப்பாளர்தான்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்தான்
ʿalā
عَلَىٰ
(is) on
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
every thing
எல்லாப் பொருள்
wakīlun
وَكِيلٌ
a Guardian
பொறுப்பாளன்

Transliteration:

Fala'allaka taarikum ba'da maa yoohaaa ilaika wa daaa'iqum bihee sadruka ai yaqooloo law laaa unzila 'alaihi kanzun aw jaaa'a ma'ahoo malak; innamaa anta nazeer; wallaahu 'alaa kulli shai'inw wakeel (QS. Hūd:12)

English Sahih International:

Then would you possibly leave [out] some of what is revealed to you, or is your breast constrained by it because they say, "Why has there not been sent down to him a treasure or come with him an angel?" But you are only a warner. And Allah is Disposer of all things. (QS. Hud, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீங்கள் சடைந்து) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீர்களோ? (அன்று) "உங்களுக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உங்களுடன் ஒரு மலக்கு வரவேண்டாமா?" என்று அவர்கள் கூறுவது உங்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீங்கள் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதரே(யன்றி வேறில்லை.) அனைத்தையும் நிர்வகிப்பவன் அல்லாஹ்தான்! (ஸூரத்து ஹூது, வசனம் ௧௨)

Jan Trust Foundation

(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு வானவர் வரவேண்டாமா?” என்று அவர்கள் (உம்மைப் பற்றி) கூறுவதால் உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுபவற்றில் சிலவற்றை நீர் விட்டுவிடக் கூடியவராக ஆகலாம்; அதன் மூலம் உம் நெஞ்சம் நெருக்கடியாக ஆகலாம். (நபியே!) நீரெல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். அல்லாஹ்தான் எல்லாப் பொருள் மீதும் பொறுப்பாளன் ஆவான்!