Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௧௬

Qur'an Surah Hud Verse 116

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِيَّةٍ يَّنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِى الْاَرْضِ اِلَّا قَلِيْلًا مِّمَّنْ اَنْجَيْنَا مِنْهُمْ ۚوَاتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْا مَآ اُتْرِفُوْا فِيْهِ وَكَانُوْا مُجْرِمِيْنَ (هود : ١١)

falawlā kāna
فَلَوْلَا كَانَ
So why not had been
இருந்திருக்க வேண்டாமா?
mina l-qurūni
مِنَ ٱلْقُرُونِ
of the generations
தலை முறையினர்களில்
min qablikum
مِن قَبْلِكُمْ
before you before you
உங்களுக்கு முன்னர்
ulū baqiyyatin
أُو۟لُوا۟ بَقِيَّةٍ
those possessing a remnant those possessing a remnant
சிறந்தோர்
yanhawna
يَنْهَوْنَ
forbidding
தடுக்கின்றார்கள்
ʿani l-fasādi
عَنِ ٱلْفَسَادِ
from the corruption
விஷமத்தை விட்டு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
illā
إِلَّا
except
எனினும்
qalīlan
قَلِيلًا
a few
குறைவானவர்(கள்)
mimman
مِّمَّنْ
of those
இருந்து/எவர்கள்
anjaynā
أَنجَيْنَا
We saved
நாம் பாதுகாத்தோம்
min'hum
مِنْهُمْۗ
among them?
அவர்களில்
wa-ittabaʿa
وَٱتَّبَعَ
But followed
இன்னும் பின்பற்றினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
did wrong
அநியாயம் செய்தனர்
mā ut'rifū
مَآ أُتْرِفُوا۟
what luxury they were given
எதில்/இன்பமளிக்கப்பட்டார்கள்
fīhi wakānū
فِيهِ وَكَانُوا۟
therein and they were
அதில்/இன்னும் இருந்தனர்
muj'rimīna
مُجْرِمِينَ
criminals
குற்றவாளிகளாக

Transliteration:

Falw laa kaana minal qurooni min qablikum ooloo baqiyyatiny yanhawna 'anil fasaadi fil ardi illaa qaleelam mimman anjainaa minhum; wattaba'al lazeena zalamoo maaa utrifoo feehi wa kaanoo mujrimeen (QS. Hūd:116)

English Sahih International:

So why were there not among the generations before you those of enduring discrimination forbidding corruption on earth – except a few of those We saved from among them? But those who wronged pursued what luxury they were given therein, and they were criminals. (QS. Hud, Ayah ௧௧௬)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து மற்ற மனிதர்களும்) பூமியில் விஷமம் செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் (அதிகமாக) இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர். நாம் அவர்களை பாதுகாத்துக் கொண்டோம். ஆனால், (பெரும்பாலான) அநியாயக்காரர்களோ தங்கள் ஆசாபாசங்களைப் பின்பற்றிக் குற்றம் செய்பவர்களாகவே இருந்தனர். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௧௬)

Jan Trust Foundation

உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்வச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு முன்னர் இருந்த தலைமுறையினர்களில் பூமியில் விஷமத்தை விட்டுத் தடுக்கின்ற (அறிவில்) சிறந்தோர் (அதிகம்) இருந்திருக்க வேண்டாமா? எனினும் அவர்களில் நாம் பாதுகாத்த குறைவானவர்கள்தான் (அவ்வாறு செய்தனர்.) அநியாயக்காரர்களோ தாங்கள் எதில் இன்பமளிக்கப்பட்டார்களோ அதையே பின்பற்றினார்கள். இன்னும் அதில் குற்றவாளிகளாகவே இருந்தனர்.