குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௧௩
Qur'an Surah Hud Verse 113
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تَرْكَنُوْٓا اِلَى الَّذِيْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُۙ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَاۤءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ (هود : ١١)
- walā tarkanū
- وَلَا تَرْكَنُوٓا۟
- And (do) not incline
- நீங்கள் சாய்ந்து விடாதீர்கள்
- ilā
- إِلَى
- to
- பக்கம்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- ẓalamū
- ظَلَمُوا۟
- do wrong
- அநீதி இழைத்தார்கள்
- fatamassakumu
- فَتَمَسَّكُمُ
- lest touches you
- உங்களை அடைந்து விடும்
- l-nāru
- ٱلنَّارُ
- the Fire
- நெருப்பு
- wamā
- وَمَا
- and not
- இல்லை
- lakum
- لَكُم
- (is) for you
- உங்களுக்கு
- min dūni l-lahi
- مِّن دُونِ ٱللَّهِ
- besides Allah besides Allah besides Allah
- அல்லாஹ்வையன்றி
- min awliyāa
- مِنْ أَوْلِيَآءَ
- any protectors
- பாதுகாப்பவர்கள் எவரும்
- thumma lā tunṣarūna
- ثُمَّ لَا تُنصَرُونَ
- then not you will be helped
- பிறகு/உதவி செய்யப்பட மாட்டீர்கள்
Transliteration:
Wa laa tarkanooo ilal lazeena zalamoo fatamassa kumun Naaru wa maa lakum min doonil laahi min awliyaaa'a summa laa tunsaroon(QS. Hūd:113)
English Sahih International:
And do not incline toward those who do wrong, lest you be touched by the Fire, and you would not have other than Allah any protectors; then you would not be helped. (QS. Hud, Ayah ௧௧௩)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது. (ஸூரத்து ஹூது, வசனம் ௧௧௩)
Jan Trust Foundation
இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அநீதி இழைத்தவர்கள் பக்கம் (சிறிதும்) நீங்கள் சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின் நரக) நெருப்பு உங்களை அடைந்துவிடும். அல்லாஹ்வையன்றி பாதுகாப்பவர்கள் (எவரும்) உங்களுக்கு இல்லை; பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.