குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௧௨
Qur'an Surah Hud Verse 112
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاسْتَقِمْ كَمَآ اُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْاۗ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ (هود : ١١)
- fa-is'taqim
- فَٱسْتَقِمْ
- So stand firm
- நிலையாக இருங்கள்
- kamā
- كَمَآ
- as
- போன்றே
- umir'ta
- أُمِرْتَ
- you are commanded
- நீர் ஏவப்பட்டீர்
- waman
- وَمَن
- and (those) who
- இன்னும் எவர்(கள்)
- tāba
- تَابَ
- turn (in repentance)
- திருந்தி திரும்பினார்(கள்)
- maʿaka
- مَعَكَ
- with you
- உம்முடன்
- walā taṭghaw
- وَلَا تَطْغَوْا۟ۚ
- and (do) not transgress
- வரம்பு மீறாதீர்கள்
- innahu
- إِنَّهُۥ
- Indeed He
- நிச்சயமாக அவன்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்பவற்றை
- baṣīrun
- بَصِيرٌ
- (is) All-Seer
- உற்று நோக்குபவன்
Transliteration:
Fastaqim kamaaa umirta wa man taaba ma'aka wa laa tatghaw; innahoo bimaa ta'maloona Baseer(QS. Hūd:112)
English Sahih International:
So remain on a right course as you have been commanded, [you] and those who have turned back with you [to Allah], and do not transgress. Indeed, He is Seeing of what you do. (QS. Hud, Ayah ௧௧௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களுக்கு ஏவப்பட்டது போன்றே நீங்களும், இணைவைத்து வணங்குவதிலிருந்து விலகி, உங்களுடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௧௨)
Jan Trust Foundation
நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக;வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நீர் ஏவப்பட்டது போன்றே, நீரும், (பாவத்தை விட்டுத்) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி உம்முடன் இருப்பவர்களும் (நேர்வழியில்) நிலையாக இருங்கள். (மார்க்கத்திலும் மக்கள் விஷயங்களிலும்) வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான்.