Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦௮

Qur'an Surah Hud Verse 108

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاَمَّا الَّذِيْنَ سُعِدُوْا فَفِى الْجَنَّةِ خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَاۤءَ رَبُّكَۗ عَطَاۤءً غَيْرَ مَجْذُوْذٍ (هود : ١١)

wa-ammā
وَأَمَّا
And as for
ஆகவே
alladhīna suʿidū
ٱلَّذِينَ سُعِدُوا۟
those who were glad
நற்பாக்கியமடைந்தவர்கள்
fafī l-janati
فَفِى ٱلْجَنَّةِ
then (they will be) in Paradise
சொர்க்கத்தில்
khālidīna
خَٰلِدِينَ
(will be) abiding
அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
fīhā
فِيهَا
therein
அதில்
mā dāmati
مَا دَامَتِ
as long as remains as long as remains
நிலைத்திருக்கும்வரை
l-samāwātu wal-arḍu
ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ
the heavens and the earth
வானங்கள்/இன்னும் பூமி
illā mā shāa
إِلَّا مَا شَآءَ
except what your Lord wills what your Lord wills
நாடியதைத் தவிர
rabbuka
رَبُّكَۖ
what your Lord wills
உம் இறைவன்
ʿaṭāan
عَطَآءً
a bestowal
அருட்கொடையாக
ghayra majdhūdhin
غَيْرَ مَجْذُوذٍ
not interrupted
முடிவுறாதது

Transliteration:

Wa ammal lazeena su'idoo fafil Jannati khaalideena feehaa maa daamatis samaawaatu wal ardu illaa maa shaaa'a Rabbuk; ataaa'an ghaira majzooz (QS. Hūd:108)

English Sahih International:

And as for those who were [destined to be] prosperous, they will be in Paradise, abiding therein as long as the heavens and the earth endure, except what your Lord should will – a bestowal uninterrupted. (QS. Hud, Ayah ௧௦௮)

Abdul Hameed Baqavi:

நற்பாக்கியவான்கள் சுவனபதியில் (நுழைந்து விடுவார்கள்.) உங்கள் இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில்தான் அவர்கள் தங்கி விடுவார்கள். (அது) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட் கொடையாகும். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦௮)

Jan Trust Foundation

நற்பாக்கிய சாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, நற்பாக்கியமடைந்தவர்கள் சொர்க்கத்தில் (நுழைக்கப்படுவார்கள்). உம் இறைவன் நாடியதைத் தவிர, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை முடிவுறாத அருட்கொடையாக அதில் அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்.