குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦௨
Qur'an Surah Hud Verse 102
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَآ اَخَذَ الْقُرٰى وَهِيَ ظَالِمَةٌ ۗاِنَّ اَخْذَهٗٓ اَلِيْمٌ شَدِيْدٌ (هود : ١١)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இது போன்றுதான்
- akhdhu
- أَخْذُ
- (is) the seizure (of) your Lord
- பிடி
- rabbika
- رَبِّكَ
- (is) the seizure (of) your Lord
- உம் இறைவனின்
- idhā akhadha
- إِذَآ أَخَذَ
- when He seizes
- அவன் பிடித்தால்
- l-qurā
- ٱلْقُرَىٰ
- the cities
- ஊர்களை
- wahiya
- وَهِىَ
- while they
- அவையோ
- ẓālimatun
- ظَٰلِمَةٌۚ
- (are) doing wrong
- அநியாயம் புரிந்தவை
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- akhdhahu
- أَخْذَهُۥٓ
- His seizure
- அவனுடைய பிடி
- alīmun
- أَلِيمٌ
- (is) painful
- துன்புறுத்தக் கூடியது
- shadīdun
- شَدِيدٌ
- (and) severe
- மிகக் கடுமையானது
Transliteration:
Wa kazaalika akhzu Rabbika izaaa akhazal quraa wa hiya zaalimah; inna akhzahooo aleemun shadeed(QS. Hūd:102)
English Sahih International:
And thus is the seizure of your Lord when He seizes the cities while they are committing wrong. Indeed, His seizure is painful and severe. (QS. Hud, Ayah ௧௦௨)
Abdul Hameed Baqavi:
அநியாயம் செய்யும் ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உங்கள் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதாகவும் துன்புறுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦௨)
Jan Trust Foundation
அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஊர்களை உம் இறைவன் (தண்டனையால்) பிடித்தால் -அவையோ அநியாயம் செய்பவையாக இருக்க- (அப்)பிடி இது போன்றுதான் இருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி ஒரு துன்புறுத்தக் கூடியது, மிகக்கடுமையானது.