குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦
Qur'an Surah Hud Verse 10
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَاۤءَ بَعْدَ ضَرَّاۤءَ مَسَّتْهُ لَيَقُوْلَنَّ ذَهَبَ السَّيِّاٰتُ عَنِّيْ ۗاِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌۙ (هود : ١١)
- wala-in
- وَلَئِنْ
- But if
- adhaqnāhu
- أَذَقْنَٰهُ
- We give him a taste
- நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்
- naʿmāa
- نَعْمَآءَ
- (of) favor
- இன்பத்தை
- baʿda ḍarrāa
- بَعْدَ ضَرَّآءَ
- after hardship
- பின்னர்/துன்பம்
- massathu
- مَسَّتْهُ
- (has) touched him
- அவனுக்கு ஏற்பட்ட(து)
- layaqūlanna
- لَيَقُولَنَّ
- surely he will say
- நிச்சயம் கூறுவான்
- dhahaba
- ذَهَبَ
- "Have gone
- சென்றன
- l-sayiātu
- ٱلسَّيِّـَٔاتُ
- the evils
- தீமைகள்
- ʿannī
- عَنِّىٓۚ
- from me
- என்னை விட்டு
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவன்
- lafariḥun
- لَفَرِحٌ
- (is) exultant
- மகிழ்பவனாக
- fakhūrun
- فَخُورٌ
- (and) boastful
- தற்பெருமையாளனாக
Transliteration:
Wala'in azaqnaahu na'maaa'a ba'da darraaa'a massat hu la yaqoolanna zahabas saiyiaatu 'anneee; innahoo lafarihun fakhoor(QS. Hūd:10)
English Sahih International:
But if We give him a taste of favor after hardship has touched him, he will surely say, "Bad times have left me." Indeed, he is exultant and boastful – (QS. Hud, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் "நிச்சயமாக என்னுடைய துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வாராது)" என்று கூறத் தலைப்படுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாகவும், பெருமையடிப்பவனாகவும் இருக்கிறான். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦)
Jan Trust Foundation
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், “என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன” என்று நிச்சயமாகக் கூறுவான்; நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர் அவனுக்கு இன்பத்தை நாம் சுவைக்க வைத்தால், “என்னை விட்டு தீமைகள் சென்றன”என்று நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் (செருக்குடன்) மகிழ்பவனாக தற்பெருமையாளனாக இருக்கின்றான்.