Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 9

Hud

(Hūd)

௮௧

قَالُوْا يٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَّصِلُوْٓا اِلَيْكَ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَۗ اِنَّهٗ مُصِيْبُهَا مَآ اَصَابَهُمْ ۗاِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ ۗ اَلَيْسَ الصُّبْحُ بِقَرِيْبٍ ٨١

qālū
قَالُوا۟
கூறினர்
yālūṭu
يَٰلُوطُ
லூத்தே!
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
rusulu
رُسُلُ
தூதர்கள்
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
lan yaṣilū
لَن يَصِلُوٓا۟
அறவே சேர மாட்டார்கள்
ilayka
إِلَيْكَۖ
உம் பக்கம்
fa-asri
فَأَسْرِ
ஆகவே, செல்வீராக
bi-ahlika
بِأَهْلِكَ
உம் குடும்பத்தைக் கொண்டு
biqiṭ'ʿin
بِقِطْعٍ
ஒரு பகுதியில்
mina al-layli
مِّنَ ٱلَّيْلِ
இரவின்
walā yaltafit
وَلَا يَلْتَفِتْ
திரும்பிப் பார்க்க வேண்டாம்
minkum
مِنكُمْ
உங்களில்
aḥadun
أَحَدٌ
ஒருவரும்
illā
إِلَّا
தவிர
im'ra-ataka
ٱمْرَأَتَكَۖ
உம் மனைவி
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக/செய்தி
muṣībuhā
مُصِيبُهَا
அடையக்கூடியதே/அவளை
mā aṣābahum
مَآ أَصَابَهُمْۚ
எது/அடைகின்ற(து)/அவர்களை
inna
إِنَّ
நிச்சயமாக
mawʿidahumu
مَوْعِدَهُمُ
வாக்களிக்கப்பட்ட நேரம்/இவர்களின்
l-ṣub'ḥu
ٱلصُّبْحُۚ
விடியற்காலை
alaysa
أَلَيْسَ
இல்லையா?
l-ṣub'ḥu
ٱلصُّبْحُ
விடியற்காலை
biqarībin
بِقَرِيبٍ
சமீபமாக
(அதற்கு லூத்துடைய விருந்தாளிகள் அவரை நோக்கி) "லூத்தே! நிச்சயமாக நாங்கள் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்(களாகிய மலக்கு)களாவோம். இவர்கள் நிச்சயமாக உங்களை வந்தடைய முடியாது. (இன்று) ஒரு சிறு பகுதி இரவில் இருக்கும் பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் (இங்கிருந்து) வெளியேறி விடுங்கள்; (உங்களுடைய சொல் கேளாத) உங்களுடைய மனைவியைத் தவிர, உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவர்களைத் தொடும் வேதனை நிச்சயமாக அவளையும் பீடிக்கும். (வேதனை வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபித்து விடவில்லையா?" என்று கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௧)
Tafseer
௮௨

فَلَمَّا جَاۤءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّنْ سِجِّيْلٍ مَّنْضُوْدٍ ٨٢

falammā
فَلَمَّا
போது
jāa
جَآءَ
வந்தது
amrunā
أَمْرُنَا
நம் கட்டளை
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கினோம்
ʿāliyahā
عَٰلِيَهَا
அதன் மேல்புறத்தை
sāfilahā
سَافِلَهَا
அதன் கீழ்ப்புறமாக
wa-amṭarnā
وَأَمْطَرْنَا
இன்னும் மழையாக பொழிந்தோம்
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
ḥijāratan
حِجَارَةً
கற்களை
min
مِّن
இருந்து
sijjīlin
سِجِّيلٍ
இறுக்கமாக்கப்பட்டது
manḍūdin
مَّنضُودٍ
சுடப்பட்ட களிமண்
நம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை மேல் கீழாக கவிழ்த்து விட்டோம். அன்றி, (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௨)
Tafseer
௮௩

مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَۗ وَمَا هِيَ مِنَ الظّٰلِمِيْنَ بِبَعِيْدٍ ࣖ ٨٣

musawwamatan
مُّسَوَّمَةً
அடையாளமிடப்பட்டிருந்தது
ʿinda rabbika
عِندَ رَبِّكَۖ
உங்கள் இறைவனால்
wamā
وَمَا
இல்லை
hiya
هِىَ
அவை
mina
مِنَ
இருந்து
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அக்கிரமக்காரர்கள்
bibaʿīdin
بِبَعِيدٍ
தூரமாக
(எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௩)
Tafseer
௮௪

۞ وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا ۗقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ۗوَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ اِنِّيْٓ اَرٰىكُمْ بِخَيْرٍ وَّاِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيْطٍ ٨٤

wa-ilā madyana
وَإِلَىٰ مَدْيَنَ
‘மத்யன்’க்கு
akhāhum
أَخَاهُمْ
சகோதரர் அவர்களுடைய
shuʿayban
شُعَيْبًاۚ
ஷுஐபை
qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mā lakum
مَا لَكُم
உங்களுக்கு இல்லை
min
مِّنْ
அறவே
ilāhin
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
ghayruhu
غَيْرُهُۥۖ
அவனையன்றி
walā tanquṣū
وَلَا تَنقُصُوا۟
குறைக்காதீர்கள்
l-mik'yāla
ٱلْمِكْيَالَ
அளவையில்
wal-mīzāna
وَٱلْمِيزَانَۚ
இன்னும் நிறுவையில்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
arākum
أَرَىٰكُم
காண்கிறேன்/ உங்களை
bikhayrin
بِخَيْرٍ
நல்லதொரு வசதியில்
wa-innī
وَإِنِّىٓ
இன்னும் நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ʿadhāba
عَذَابَ
வேதனையை
yawmin
يَوْمٍ
ஒரு நாளின்
muḥīṭin
مُّحِيطٍ
சூழக்கூடியது
"மத்யன்" (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையும் நிறுவையும் குறைத்து ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௪)
Tafseer
௮௫

وَيٰقَوْمِ اَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَاۤءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ ٨٥

wayāqawmi
وَيَٰقَوْمِ
என் மக்களே
awfū
أَوْفُوا۟
முழுமைப்படுத்துங்கள்
l-mik'yāla
ٱلْمِكْيَالَ
அளவையில்
wal-mīzāna
وَٱلْمِيزَانَ
இன்னும் நிறுவையில்
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۖ
நீதமாக
walā tabkhasū
وَلَا تَبْخَسُوا۟
இன்னும் குறைக்காதீர்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
ashyāahum
أَشْيَآءَهُمْ
பொருள்களை அவர்களுடைய
walā taʿthaw
وَلَا تَعْثَوْا۟
கலகம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
muf'sidīna
مُفْسِدِينَ
விஷமிகளாக
அன்றி, என்னுடைய மக்களே! அளவையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைபடுத்தி வையுங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்துவிடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டும் அலையாதீர்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௫)
Tafseer
௮௬

بَقِيَّتُ اللّٰهِ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ەۚ وَمَآ اَنَا۠ عَلَيْكُمْ بِحَفِيْظٍ ٨٦

baqiyyatu
بَقِيَّتُ
மீதப்படுத்தியது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
khayrun
خَيْرٌ
மிக மேலானது
lakum
لَّكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَۚ
நம்பிக்கை கொண்டவர்களாக
wamā
وَمَآ
இல்லை
anā
أَنَا۠
நான்
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
biḥafīẓin
بِحَفِيظٍ
கண்காணிப்பாளன்
நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)" என்றும் கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௬)
Tafseer
௮௭

قَالُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَأْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَاۤؤُنَآ اَوْ اَنْ نَّفْعَلَ فِيْٓ اَمْوَالِنَا مَا نَشٰۤؤُا ۗاِنَّكَ لَاَنْتَ الْحَلِيْمُ الرَّشِيْدُ ٨٧

qālū
قَالُوا۟
கூறினார்கள்
yāshuʿaybu
يَٰشُعَيْبُ
ஷுஐபே
aṣalatuka
أَصَلَوٰتُكَ
உம் தொழுகையா?
tamuruka
تَأْمُرُكَ
தூண்டுகிறது/உம்மை
an natruka
أَن نَّتْرُكَ
நாங்கள் விடுவதற்கு
مَا
எவற்றை
yaʿbudu
يَعْبُدُ
வணங்கினார்கள்
ābāunā
ءَابَآؤُنَآ
மூதாதைகள்/எங்கள்
aw
أَوْ
அல்லது
an nafʿala
أَن نَّفْعَلَ
நாங்கள் செய்வதை
fī amwālinā
فِىٓ أَمْوَٰلِنَا
செல்வங்களில்/எங்கள்
mā nashāu
مَا نَشَٰٓؤُا۟ۖ
நாங்கள் நாடுகின்றபடி
innaka la-anta
إِنَّكَ لَأَنتَ
நிச்சயமாக நீர்தான்
l-ḥalīmu
ٱلْحَلِيمُ
மகா சகிப்பாளர்
l-rashīdu
ٱلرَّشِيدُ
நல்லறிவாளர்
அதற்கவர்கள் "ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீங்கள் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உங்களுடைய தொழுகையா உங்களைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்தாம்" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௭)
Tafseer
௮௮

قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْ وَرَزَقَنِيْ مِنْهُ رِزْقًا حَسَنًا وَّمَآ اُرِيْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰى مَآ اَنْهٰىكُمْ عَنْهُ ۗاِنْ اُرِيْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُۗ وَمَا تَوْفِيْقِيْٓ اِلَّا بِاللّٰهِ ۗعَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ اُنِيْبُ ٨٨

qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே
ara-aytum
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
in kuntu
إِن كُنتُ
நான் இருப்பதால்
ʿalā bayyinatin
عَلَىٰ بَيِّنَةٍ
தெளிவான அத்தாட்சியில்
min rabbī
مِّن رَّبِّى
என் இறைவனின்
warazaqanī
وَرَزَقَنِى
இன்னும் வழங்கினான்/ எனக்கு
min'hu
مِنْهُ
தன்னிடமிருந்து
riz'qan
رِزْقًا
உணவை
ḥasanan
حَسَنًاۚ
அழகியது/ நல்லது
wamā urīdu
وَمَآ أُرِيدُ
நாடமாட்டேன்
an ukhālifakum
أَنْ أُخَالِفَكُمْ
நான் முரண்படுவதற்கு/உங்களுக்கு
ilā mā
إِلَىٰ مَآ
இல்/எவை
anhākum
أَنْهَىٰكُمْ
தடுக்கிறேன்/உங்களை
ʿanhu
عَنْهُۚ
அவற்றை விட்டு
in urīdu
إِنْ أُرِيدُ
நாடமாட்டேன்
illā
إِلَّا
தவிர
l-iṣ'lāḥa
ٱلْإِصْلَٰحَ
சீர்திருத்துவதை
mā is'taṭaʿtu
مَا ٱسْتَطَعْتُۚ
நான் இயன்றவரை
wamā tawfīqī
وَمَا تَوْفِيقِىٓ
இல்லை /என் நற்பாக்கியம்
illā
إِلَّا
தவிர
bil-lahi
بِٱللَّهِۚ
அல்லாஹ்வைக் கொண்டே
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீதே
tawakkaltu
تَوَكَّلْتُ
நம்பிக்கை வைத்தேன்
wa-ilayhi
وَإِلَيْهِ
அவன் பக்கமே
unību
أُنِيبُ
திரும்புகிறேன்
அதற்கவர் "என்னுடைய மக்களே! என் இறைவன் தெளிவான அத்தாட்சிகளை எனக்களித்திருப்பதையும், அவன் எனக்கு வேண்டிய உணவை நல்லவிதமாக அளித்து வருவதையும் நீங்கள் அறிவீர்களா? (இந்நிலைமையில் மக்களை நான் மோசம் செய்யவேண்டிய அவசியமில்லை; ஆகவே) நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு மாறுசெய்ய விரும்பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத்தை நானும் செய்யமாட்டேன்.) என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௮)
Tafseer
௮௯

وَيٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِيْٓ اَنْ يُّصِيْبَكُمْ مِّثْلُ مَآ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ۗوَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِيْدٍ ٨٩

wayāqawmi
وَيَٰقَوْمِ
என் மக்களே
lā yajrimannakum
لَا يَجْرِمَنَّكُمْ
நிச்சயம் தூண்ட வேண்டாம்/உங்களை
shiqāqī
شِقَاقِىٓ
என்மீதுள்ளவிரோதம்
an yuṣībakum
أَن يُصِيبَكُم
அடைவதற்கு/உங்களை
mith'lu
مِّثْلُ
போன்ற
mā aṣāba
مَآ أَصَابَ
எது/அடைந்தது
qawma
قَوْمَ
மக்களை
nūḥin
نُوحٍ
நூஹூடைய
aw qawma
أَوْ قَوْمَ
அல்லது/மக்களை
hūdin
هُودٍ
ஹூதுடைய
aw
أَوْ
அல்லது
qawma
قَوْمَ
மக்களை
ṣāliḥin
صَٰلِحٍۚ
ஸாலிஹ்வுடைய
wamā
وَمَا
இல்லை
qawmu
قَوْمُ
மக்கள்
lūṭin
لُوطٍ
லூத்துடைய
minkum
مِّنكُم
உங்களுக்கு
bibaʿīdin
بِبَعِيدٍ
தூரமாக
"என்னுடைய மக்களே! உங்களுக்கு என் மீதுள்ள விரோதம் "நூஹ்" வுடைய மக்களையும் "ஹூத்" உடைய மக்களையும், "ஸாலிஹ்" உடைய மக்களையும் பிடித்தது போன்ற வேதனை உங்களையும் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட வேண்டாம். "லூத்து"டைய மக்கள் (இருந்த இடமும் காலமும்) உங்களுக்குத் தூரமல்ல. ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௯)
Tafseer
௯௦

وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْٓا اِلَيْهِ ۗاِنَّ رَبِّيْ رَحِيْمٌ وَّدُوْدٌ ٩٠

wa-is'taghfirū
وَٱسْتَغْفِرُوا۟
மன்னிப்புக் கோருங்கள்
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
thumma
ثُمَّ
பிறகு
tūbū
تُوبُوٓا۟
திருந்தி திரும்புங்கள்
ilayhi
إِلَيْهِۚ
அவன் பக்கமே
inna rabbī
إِنَّ رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
raḥīmun
رَحِيمٌ
பெரும் கருணையாளன்
wadūdun
وَدُودٌ
மகா நேசன்
ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க அன்புடையவனாகவும் (கிருபையுடன்) நேசிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௦)
Tafseer