Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 8

Hud

(Hūd)

௭௧

وَامْرَاَتُهٗ قَاۤىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَۙ وَمِنْ وَّرَاۤءِ اِسْحٰقَ يَعْقُوْبَ ٧١

wa-im'ra-atuhu
وَٱمْرَأَتُهُۥ
அவருடைய மனைவி
qāimatun
قَآئِمَةٌ
நின்று கொண்டிருந்தாள்
faḍaḥikat
فَضَحِكَتْ
சிரித்தாள்
fabasharnāhā
فَبَشَّرْنَٰهَا
நற்செய்தி கூறினோம்/அவளுக்கு
bi-is'ḥāqa
بِإِسْحَٰقَ
இஸ்ஹாக்கைக் கொண்டு
wamin warāi
وَمِن وَرَآءِ
இன்னும் பின்னால்
is'ḥāqa
إِسْحَٰقَ
இஸ்ஹாக்கிற்கு
yaʿqūba
يَعْقُوبَ
யஃகூப்
(அச்சமயம் அங்கு) நின்று கொண்டிருந்த அவருடைய (கிழ) மனைவி (லூத் நபியின் மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செவியுற்று) சிரித்தாள்; ஆனால், அதே சமயத்தில் அவளுக்கு "இஸ்ஹாக்" (என்னும் மகனைப்) பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் "யஃகூப்" (என்னும் பேரன் பிறக்கப் போவதைப்) பற்றியும் நற்செய்தி கூறச் செய்தோம். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௧)
Tafseer
௭௨

قَالَتْ يٰوَيْلَتٰىٓ ءَاَلِدُ وَاَنَا۠ عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِيْ شَيْخًا ۗاِنَّ هٰذَا لَشَيْءٌ عَجِيْبٌ ٧٢

qālat
قَالَتْ
கூறினாள்
yāwaylatā
يَٰوَيْلَتَىٰٓ
என் துக்கமே
a-alidu
ءَأَلِدُ
பிள்ளைபெறுவேனா
wa-anā
وَأَنَا۠
நானுமோ
ʿajūzun
عَجُوزٌ
கிழவியாக
wahādhā
وَهَٰذَا
இவரோ
baʿlī
بَعْلِى
என் கணவராகிய
shaykhan
شَيْخًاۖ
வயோதிகராக
inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இது
lashayon
لَشَىْءٌ
விஷயம்தான்
ʿajībun
عَجِيبٌ
வியப்பான(து)
அதற்கவள், "என்னுடைய துக்கமே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என்னுடைய இக்கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!" என்றாள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௨)
Tafseer
௭௩

قَالُوْٓا اَتَعْجَبِيْنَ مِنْ اَمْرِ اللّٰهِ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَيْكُمْ اَهْلَ الْبَيْتِۗ اِنَّهُ حَمِيْدٌ مَّجِيْدٌ ٧٣

qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
ataʿjabīna
أَتَعْجَبِينَ
வியப்படைகிறீரா?
min amri
مِنْ أَمْرِ
கட்டளையில்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வுடைய
raḥmatu
رَحْمَتُ
கருணை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wabarakātuhu
وَبَرَكَٰتُهُۥ
இன்னும் அவனுடைய அருள்கள்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ahla l-bayti
أَهْلَ ٱلْبَيْتِۚ
வீட்டாரே
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ḥamīdun
حَمِيدٌ
மகா புகழாளன்
majīdun
مَّجِيدٌ
மகா கீர்த்தியாளன்
அதற்கவர்கள், "அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய பாக்கியங்களும் (இப்ராஹீமுடைய) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீதுள்ளன. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவனாகவும், மகிமை உடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௩)
Tafseer
௭௪

فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِيْمَ الرَّوْعُ وَجَاۤءَتْهُ الْبُشْرٰى يُجَادِلُنَا فِيْ قَوْمِ لُوْطٍ ٧٤

falammā dhahaba
فَلَمَّا ذَهَبَ
சென்றபோது
ʿan ib'rāhīma
عَنْ إِبْرَٰهِيمَ
இப்றாஹீமை விட்டு
l-rawʿu
ٱلرَّوْعُ
திடுக்கம்
wajāathu
وَجَآءَتْهُ
இன்னும் வந்தது/அவருக்கு
l-bush'rā
ٱلْبُشْرَىٰ
நற்செய்தி
yujādilunā
يُجَٰدِلُنَا
தர்க்கித்தார்/நம்மிடம்
fī qawmi
فِى قَوْمِ
மக்கள் விஷயத்தில்
lūṭin
لُوطٍ
லூத்துடைய
இப்ராஹீமுடைய திடுக்கம் நீங்கி அவருக்கு நற்செய்தி கிடைத்த பின்னர் "லூத்" தின் மக்களை (அழித்து விடுவதை)ப் பற்றி அவர் நம்மு(டைய மலக்குகளு)டன் தர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௪)
Tafseer
௭௫

اِنَّ اِبْرٰهِيْمَ لَحَلِيْمٌ اَوَّاهٌ مُّنِيْبٌ ٧٥

inna ib'rāhīma
إِنَّ إِبْرَٰهِيمَ
நிச்சயமாக இப்றாஹீம்
laḥalīmun
لَحَلِيمٌ
சகிப்பாளர்
awwāhun
أَوَّٰهٌ
அதிகம் பிரார்த்திப்பவர்
munībun
مُّنِيبٌ
திரும்பக்கூடியவர்
நிச்சயமாக இப்ராஹீம் மிக்க சகிப்பவராகவும், மிக இளகியமன முடையவராகவும் (எதற்கும்) நம்மையே நோக்குபவராகவும்இருந்தார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௫)
Tafseer
௭௬

يٰٓاِبْرٰهِيْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚاِنَّهٗ قَدْ جَاۤءَ اَمْرُ رَبِّكَۚ وَاِنَّهُمْ اٰتِيْهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُوْدٍ ٧٦

yāib'rāhīmu
يَٰٓإِبْرَٰهِيمُ
இப்ராஹீமே
aʿriḍ
أَعْرِضْ
புறக்கணிப்பீராக
ʿan hādhā
عَنْ هَٰذَآۖ
இதை விட்டு
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக
qad
قَدْ
திட்டமாக
jāa
جَآءَ
வந்தது
amru
أَمْرُ
கட்டளை
rabbika
رَبِّكَۖ
உம் இறைவனின்
wa-innahum
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ātīhim
ءَاتِيهِمْ
வரும்/அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
ghayru mardūdin
غَيْرُ مَرْدُودٍ
தடுக்கபடாதது
(ஆகவே, அத்தூதர்கள் இப்ராஹீமை நோக்கி) இப்ராஹீமே! நீங்கள் இதைப் (பற்றி தர்க்கம் செய்யாது) புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக (அவர்களை அழிப்பதற்காக) உங்கள் இறைவனுடைய கட்டளை பிறந்துவிட்டது. அன்றி, நிச்சயமாக அவர்களால் தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும் (என்று கூறினார்கள்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௬)
Tafseer
௭௭

وَلَمَّا جَاۤءَتْ رُسُلُنَا لُوْطًا سِيْۤءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا يَوْمٌ عَصِيْبٌ ٧٧

walammā jāat
وَلَمَّا جَآءَتْ
வந்த போது
rusulunā
رُسُلُنَا
நம் தூதர்கள்
lūṭan
لُوطًا
லூத்திடம்
sīa
سِىٓءَ
சிரமத்திற்குள்ளானார்
bihim
بِهِمْ
அவர்களால்
waḍāqa
وَضَاقَ
இன்னும் சுருங்கினார்
bihim
بِهِمْ
அவர்களால்
dharʿan
ذَرْعًا
மனம்
waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
hādhā
هَٰذَا
இது
yawmun
يَوْمٌ
நாள்
ʿaṣībun
عَصِيبٌ
மிகக் கடுமையான(து)
(இப்ராஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்த பொழுது, அவர் (அம்மலக்குகளைத் தம் மக்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி "இது மிக நெருக்கடியான நாள்" என்று அவர் கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௭)
Tafseer
௭௮

وَجَاۤءَهٗ قَوْمُهٗ يُهْرَعُوْنَ اِلَيْهِۗ وَمِنْ قَبْلُ كَانُوْا يَعْمَلُوْنَ السَّيِّاٰتِۗ قَالَ يٰقَوْمِ هٰٓؤُلَاۤءِ بَنَاتِيْ هُنَّ اَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِيْ ضَيْفِيْۗ اَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِيْدٌ ٧٨

wajāahu
وَجَآءَهُۥ
வந்தார்(கள்)/அவரிடம்
qawmuhu
قَوْمُهُۥ
அவருடைய மக்கள்
yuh'raʿūna
يُهْرَعُونَ
விரைந்தவர்களாக
ilayhi
إِلَيْهِ
அவர் பக்கம்
wamin qablu
وَمِن قَبْلُ
இன்னும் இதற்கு முன்னர்
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
அவர்கள் செய்பவர்களாக
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِۚ
தீயவற்றை
qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்களை
banātī
بَنَاتِى
என் பெண் பிள்ளைகள்
hunna
هُنَّ
அவர்கள்
aṭharu
أَطْهَرُ
மிக சுத்தமானவர்(கள்)
lakum
لَكُمْۖ
உங்களுக்கு
fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
walā tukh'zūni
وَلَا تُخْزُونِ
அவமானப்படுத்தாதீர் கள்/என்னை
fī ḍayfī
فِى ضَيْفِىٓۖ
என் விருந்தினர் விஷயத்தில்
alaysa
أَلَيْسَ
இல்லையா?
minkum
مِنكُمْ
உங்களில்
rajulun
رَجُلٌ
ஓர் ஆடவர்
rashīdun
رَّشِيدٌ
நல்லறிவுள்ளவர்
(இதற்குள்) அவருடைய மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய காரியங்களையே செய்து கொண்டிருந்தனர். (இதனை நாடியே அவரிடம் அவர்கள் வந்தனர்.) அதற்கு ("லூத்" நபி அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர். (அவர்களை திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். (உங்களுக்கு நல்லுபதேசம் செய்யும்) நல்ல மனிதன் ஒருவன் கூட உங்களிடம் இல்லையா?" என்று கேட்டார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௮)
Tafseer
௭௯

قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِيْ بَنٰتِكَ مِنْ حَقٍّۚ وَاِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيْدُ ٧٩

qālū
قَالُوا۟
கூறினார்கள்
laqad ʿalim'ta
لَقَدْ عَلِمْتَ
அறிந்து கொண்டீர்
مَا
இல்லை
lanā
لَنَا
எங்களுக்கு
fī banātika
فِى بَنَاتِكَ
இடம்/பெண் பிள்ளைகள்/உம்
min ḥaqqin
مِنْ حَقٍّ
ஒரு தேவை
wa-innaka
وَإِنَّكَ
நிச்சயமாக நீர்
lataʿlamu
لَتَعْلَمُ
உறுதிபட அறிவீர்
mā nurīdu
مَا نُرِيدُ
எதை/நாடுகிறோம்
அதற்கவர்கள் "உங்களுடைய பெண்மக்களிடம் எங்களுக்கு யாதொரு தேவையும் இல்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்கள்" என்றும் கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௯)
Tafseer
௮௦

قَالَ لَوْ اَنَّ لِيْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِيْٓ اِلٰى رُكْنٍ شَدِيْدٍ ٨٠

qāla
قَالَ
கூறினார்
law
لَوْ
இருக்க வேண்டுமே!
anna lī
أَنَّ لِى
நிச்சயமாக/எனக்கு
bikum
بِكُمْ
உங்களிடம்
quwwatan aw
قُوَّةً أَوْ
பலம்/அல்லது
āwī
ءَاوِىٓ
ஒதுங்குவேன்!
ilā ruk'nin
إِلَىٰ رُكْنٍ
பக்கம்/ஆதரவாளர்
shadīdin
شَدِيدٍ
வலிமையானவர்
அதற்கவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டாமா? அல்லது (உங்களைத் தடுத்து விடக்கூடிய) பலமான ஆதரவை நான் அடைய வேண்டாமா?" என்று (மிக துக்கத்துடன்) கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௮௦)
Tafseer