Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 6

Hud

(Hūd)

௫௧

يٰقَوْمِ لَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ اَجْرًا ۗاِنْ اَجْرِيَ اِلَّا عَلَى الَّذِيْ فَطَرَنِيْ ۗ اَفَلَا تَعْقِلُوْنَ ٥١

yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே
lā asalukum
لَآ أَسْـَٔلُكُمْ
நான் கேட்கவில்லை/உங்களிடம்
ʿalayhi
عَلَيْهِ
அதற்காக
ajran
أَجْرًاۖ
ஒரு கூலியை
in ajriya
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
illā ʿalā
إِلَّا عَلَى
தவிர/மீது
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
faṭaranī
فَطَرَنِىٓۚ
படைத்தான்/என்னை
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி என்னை படைத்தவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௧)
Tafseer
௫௨

وَيٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْٓا اِلَيْهِ يُرْسِلِ السَّمَاۤءَ عَلَيْكُمْ مِّدْرَارًا وَّيَزِدْكُمْ قُوَّةً اِلٰى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِيْنَ ٥٢

wayāqawmi
وَيَٰقَوْمِ
என் மக்களே
is'taghfirū
ٱسْتَغْفِرُوا۟
மன்னிப்புக் கோருங்கள்
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
thumma
ثُمَّ
பிறகு
tūbū
تُوبُوٓا۟
திருந்தி திரும்புங்கள்
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம்
yur'sili
يُرْسِلِ
அனுப்புவான்
l-samāa
ٱلسَّمَآءَ
மழையை
ʿalaykum
عَلَيْكُم
உங்களுக்கு
mid'rāran
مِّدْرَارًا
தாரை தாரையாக
wayazid'kum
وَيَزِدْكُمْ
இன்னும் அதிகப்படுத்துவான்/உங்களுக்கு
quwwatan
قُوَّةً
பலத்தை
ilā quwwatikum
إِلَىٰ قُوَّتِكُمْ
உங்கள் பலத்துடன்
walā tatawallaw
وَلَا تَتَوَلَّوْا۟
திரும்பி விடாதீர்கள்
muj'rimīna
مُجْرِمِينَ
குற்றவாளிகளாக
என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரி (மனம் வருந்தி) அவன் பக்கமே திரும்புங்கள். (அவன் தடுத்திருக்கும்) மழையை உங்கள் மீது ஏராளமாகப் பொழியச் செய்வான். உங்களுடைய பலத்தைப் பின்னும் (பின்னும்) அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள் அவனைப் புறக்கணித்துக் குற்றமிழைத்து விடாதீர்கள்" (என்றும் கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௨)
Tafseer
௫௩

قَالُوْا يٰهُوْدُ مَاجِئْتَنَا بِبَيِّنَةٍ وَّمَا نَحْنُ بِتَارِكِيْٓ اٰلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِيْنَ ٥٣

qālū yāhūdu
قَالُوا۟ يَٰهُودُ
கூறினர்/ஹூதே!
mā ji'tanā
مَا جِئْتَنَا
நீர் வரவில்லை/நம்மிடம்
bibayyinatin
بِبَيِّنَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
wamā naḥnu
وَمَا نَحْنُ
இன்னும் இல்லை/நாங்கள்
bitārikī
بِتَارِكِىٓ
விடுபவர்களாக
ālihatinā
ءَالِهَتِنَا
தெய்வங்களை/எங்கள்
ʿan qawlika
عَن قَوْلِكَ
உம் சொல்லுக்காக
wamā naḥnu
وَمَا نَحْنُ
இன்னும் இல்லை/நாங்கள்
laka
لَكَ
உம்மை
bimu'minīna
بِمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களாக
அதற்கவர்கள், "ஹூதே! நீங்கள் (நாம் விரும்பியவாறு) யாதொரு அத்தாட்சியும் நம்மிடம் கொண்டு வரவில்லை. உங்களுடைய சொல்லுக்காக நாங்கள் எங்களுடைய தெய்வங்களை விட்டுவிட மாட்டோம். உங்களை நாங்கள் நம்பவும் மாட்டோம்" என்று கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௩)
Tafseer
௫௪

اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَرٰىكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْۤءٍ ۗقَالَ اِنِّيْٓ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْٓا اَنِّيْ بَرِيْۤءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ٥٤

in naqūlu
إِن نَّقُولُ
கூறமாட்டோம்
illā
إِلَّا
தவிர
iʿ'tarāka baʿḍu
ٱعْتَرَىٰكَ بَعْضُ
தீண்டி விட்டன/உம்மை/சில
ālihatinā
ءَالِهَتِنَا
எங்கள் தெய்வங்களில்
bisūin
بِسُوٓءٍۗ
ஒரு தீமையைக் கொண்டு
qāla
قَالَ
கூறினார்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
ush'hidu
أُشْهِدُ
சாட்சியாக்குகிறேன்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-ish'hadū
وَٱشْهَدُوٓا۟
நீங்கள் சாட்சி கூறுங்கள்
annī
أَنِّى
நிச்சயமாக நான்
barīon
بَرِىٓءٌ
விலகியவன்
mimmā tush'rikūna
مِّمَّا تُشْرِكُونَ
நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து
அன்றி, "எங்களுடைய சில தெய்வங்கள் உங்களுக்குக் கேடு உண்டுபண்ணி விட்டன. (ஆதலால், நீங்கள் மதியிழந்து விட்டீர்கள்!) என்றும் கூறினார்கள். அதற்கவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவைகளிலிருந்து விலகிக் கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௪)
Tafseer
௫௫

مِنْ دُوْنِهٖ فَكِيْدُوْنِيْ جَمِيْعًا ثُمَّ لَا تُنْظِرُوْنِ ٥٥

min dūnihi
مِن دُونِهِۦۖ
அவனையன்றி
fakīdūnī
فَكِيدُونِى
ஆகவே, சூழ்ச்சி செய்யுங்கள் எனக்கு
jamīʿan
جَمِيعًا
அனைவரும்
thumma
ثُمَّ
பிறகு
lā tunẓirūni
لَا تُنظِرُونِ
அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
"ஆகவே, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு(ச் செய்யக்கூடிய) சூழ்ச்சியைச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் எனக்குச் சிறிதும் அவகாசம் அளிக்க வேண்டாம்" (என்றும்,) ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௫)
Tafseer
௫௬

اِنِّيْ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ رَبِّيْ وَرَبِّكُمْ ۗمَا مِنْ دَاۤبَّةٍ اِلَّا هُوَ اٰخِذٌۢ بِنَاصِيَتِهَا ۗاِنَّ رَبِّيْ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٥٦

innī
إِنِّى
நிச்சயமாக நான்
tawakkaltu
تَوَكَّلْتُ
நம்பிக்கை வைத்து விட்டேன்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
rabbī
رَبِّى
என் இறைவன்
warabbikum
وَرَبِّكُمۚ
இன்னும் உங்கள் இறைவன்
mā min
مَّا مِن
இல்லை/எதுவும்
dābbatin
دَآبَّةٍ
உயிரினம்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَ
அவன்
ākhidhun
ءَاخِذٌۢ
பிடித்தே
bināṣiyatihā
بِنَاصِيَتِهَآۚ
அதன் உச்சி முடியை
inna
إِنَّ
நிச்சயமாக
rabbī
رَبِّى
என் இறைவன்
ʿalā ṣirāṭin
عَلَىٰ صِرَٰطٍ
வழியில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரானது
"நிச்சயமாக நான் என்னுடைய காரியங்கள் அனைத்தையும் என்னையும் உங்களையும் படைத்துப் பாதுகாப்பவனாகிய அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன். ஒவ்வொரு உயிருள்ள வைகளின் முன் உச்சிக் குடுமியையும் அவனே பிடித்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக என் இறைவன் (நீதியின்) நேரான வழியில் இருக்கிறான் (என்றும்,) ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௬)
Tafseer
௫௭

فَاِنْ تَوَلَّوْا فَقَدْ اَبْلَغْتُكُمْ مَّآ اُرْسِلْتُ بِهٖٓ اِلَيْكُمْ ۗوَيَسْتَخْلِفُ رَبِّيْ قَوْمًا غَيْرَكُمْۗ وَلَا تَضُرُّوْنَهٗ شَيْـًٔا ۗاِنَّ رَبِّيْ عَلٰى كُلِّ شَيْءٍ حَفِيْظٌ ٥٧

fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
நீங்கள் விலகினால்
faqad
فَقَدْ
திட்டமாக
ablaghtukum
أَبْلَغْتُكُم
எடுத்துரைத்து விட்டேன்/உங்களுக்கு
مَّآ
எதை
ur'sil'tu
أُرْسِلْتُ
அனுப்பப்பட்டேன்
bihi
بِهِۦٓ
அதைக் கொண்டு
ilaykum
إِلَيْكُمْۚ
உங்களிடம்
wayastakhlifu
وَيَسْتَخْلِفُ
இன்னும் தோன்றச் செய்வான்
rabbī
رَبِّى
என் இறைவன்
qawman
قَوْمًا
மக்களை
ghayrakum
غَيْرَكُمْ
அல்லாத(வர்கள்) நீங்கள்
walā taḍurrūnahu
وَلَا تَضُرُّونَهُۥ
நீங்கள் தீங்கிழைக்க முடியாது/அவனுக்கு
shayan inna
شَيْـًٔاۚ إِنَّ
எதையும்
rabbī
رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீது
ḥafīẓun
حَفِيظٌ
பாதுகாவலன்
நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடம் எதற்காக அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) உங்களை அல்லாத வேறு மக்களை என் இறைவன் உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (இதற்காக) நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் அனைத்தையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். (ஆகவே, அவன் என்னையும் பாதுகாத்துக் கொள்வான்" என்றும் கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௭)
Tafseer
௫௮

وَلَمَّا جَاۤءَ اَمْرُنَا نَجَّيْنَا هُوْدًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّاۚ وَنَجَّيْنٰهُمْ مِّنْ عَذَابٍ غَلِيْظٍ ٥٨

walammā jāa
وَلَمَّا جَآءَ
வந்த போது
amrunā
أَمْرُنَا
நம் உத்தரவு
najjaynā
نَجَّيْنَا
பாதுகாத்தோம்
hūdan
هُودًا
ஹூதை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
biraḥmatin minnā
بِرَحْمَةٍ مِّنَّا
நமது அருளால்
wanajjaynāhum
وَنَجَّيْنَٰهُم
இன்னும் பாதுகாத்தோம்/அவர்களை
min ʿadhābin
مِّنْ عَذَابٍ
வேதனையிலிருந்து
ghalīẓin
غَلِيظٍ
கடுமையானது
(இதன் பின்னும் அவர்கள் அவரை நிராகரித்து விட்டனர். ஆகவே,) நம்முடைய (வேதனையின்) உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம்முடைய அருளால் பாதுகாத்துக்கொண்டு, கடுமையான வேதனையில் இருந்தும் நாம் அவர்களைத் தப்ப வைத்தோம். ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௮)
Tafseer
௫௯

وَتِلْكَ عَادٌ ۖجَحَدُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهٗ وَاتَّبَعُوْٓا اَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيْدٍ ٥٩

watil'ka
وَتِلْكَ
இவர்கள்
ʿādun jaḥadū
عَادٌۖ جَحَدُوا۟
ஆது/மறுத்தனர்
biāyāti
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
waʿaṣaw
وَعَصَوْا۟
இன்னும் மாறு செய்தனர்
rusulahu
رُسُلَهُۥ
தூதர்களுக்கு/அவனுடைய
wa-ittabaʿū
وَٱتَّبَعُوٓا۟
இன்னும் பின்பற்றினர்
amra
أَمْرَ
கட்டளை
kulli
كُلِّ
எல்லோருடைய
jabbārin
جَبَّارٍ
பிடிவாதக்காரர்கள்
ʿanīdin
عَنِيدٍ
முரடர்கள்
(நபியே!) இது "ஆது" மக்களின் (சரித்திரமாகும்.) அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை நிராகரித்து (அவர்களிடம் அனுப்பப்பட்ட) இறைவனின் தூதர்களுக்கு மாறு செய்தார்கள். அன்றி, பிடிவாதக்கார முரடர்கள் அனைவருடைய தீய வழிகாட்டல்களையும் அவர்கள் பின்பற்றினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௯)
Tafseer
௬௦

وَاُتْبِعُوْا فِيْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِ ۗ اَلَآ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْ ۗ اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ ࣖ ٦٠

wa-ut'biʿū
وَأُتْبِعُوا۟
இன்னும் சேர்ப்பிக்கப் பட்டார்கள்
fī hādhihi l-dun'yā
فِى هَٰذِهِ ٱلدُّنْيَا
இந்த உலகத்தில்
laʿnatan
لَعْنَةً
சாபத்தை
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
இன்னும் மறுமையில்
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna ʿādan
إِنَّ عَادًا
நிச்சயமாக/ஆது
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
rabbahum
رَبَّهُمْۗ
தங்கள் இறைவனுக்கு
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
buʿ'dan
بُعْدًا
கேடுதான்
liʿādin
لِّعَادٍ
ஆதுக்கு
qawmi
قَوْمِ
மக்கள்
hūdin
هُودٍ
ஹூதுடைய
இவ்வுலகில் (அல்லாஹ்வுடைய) சாபம் அவர்களைத் தொடர்ந்தது, மறுமை நாளிலும் (அவ்வாறே!) நிச்சயமாக "ஆது" மக்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதையும் (நபி) ஹூதுடைய "ஆது" (சமுதாயத்தவர்)களுக்குக் கேடுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௦)
Tafseer