Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 5

Hud

(Hūd)

௪௧

۞ وَقَالَ ارْكَبُوْا فِيْهَا بِسْمِ اللّٰهِ مَجْرٰ۪ىهَا وَمُرْسٰىهَا ۗاِنَّ رَبِّيْ لَغَفُوْرٌ رَّحِيْمٌ ٤١

waqāla
وَقَالَ
கூறினார்
ir'kabū
ٱرْكَبُوا۟
பயணியுங்கள்
fīhā
فِيهَا
இதில்
bis'mi
بِسْمِ
பெயர் கொண்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
majrahā wamur'sāhā
مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآۚ
அது ஓடும் போது நிறுத்தப்படும் போது
inna
إِنَّ
நிச்சயமாக
rabbī
رَبِّى
என் இறைவன்
laghafūrun
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
அதற்கவர் (தன்னைச் சார்ந்தவர்களை நோக்கி,) "இதைச் செலுத்தவும் நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௧)
Tafseer
௪௨

وَهِيَ تَجْرِيْ بِهِمْ فِيْ مَوْجٍ كَالْجِبَالِۗ وَنَادٰى نُوْحُ ِۨابْنَهٗ وَكَانَ فِيْ مَعْزِلٍ يّٰبُنَيَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ ٤٢

wahiya
وَهِىَ
அது (கப்பல்)
tajrī
تَجْرِى
செல்கிறது
bihim
بِهِمْ
அவர்களைக்கொண்டு
fī mawjin
فِى مَوْجٍ
அலையில்
kal-jibāli
كَٱلْجِبَالِ
மலைகளைப் போன்று
wanādā nūḥun
وَنَادَىٰ نُوحٌ
இன்னும் சப்தமிட்டு அழைத்தார்/நூஹ்
ib'nahu
ٱبْنَهُۥ
தன் மகனை
wakāna
وَكَانَ
இருந்தான்
fī maʿzilin
فِى مَعْزِلٍ
ஒரு விலகுமிடத்தில்
yābunayya
يَٰبُنَىَّ
என் மகனே!
ir'kab
ٱرْكَب
பயணி
maʿanā
مَّعَنَا
எங்களுடன்
walā takun
وَلَا تَكُن
ஆகிவிடாதே
maʿa
مَّعَ
உடன்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக் கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னைவிட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி "என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)" என்று (சப்தமிட்டு) அழைத்தார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௨)
Tafseer
௪௩

قَالَ سَاٰوِيْٓ اِلٰى جَبَلٍ يَّعْصِمُنِيْ مِنَ الْمَاۤءِ ۗقَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ ۚوَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِيْنَ ٤٣

qāla
قَالَ
கூறினான்
saāwī
سَـَٔاوِىٓ
ஒதுங்குவேன்
ilā
إِلَىٰ
மேல்
jabalin
جَبَلٍ
ஒரு மலை
yaʿṣimunī
يَعْصِمُنِى
காக்கும்/என்னை
mina
مِنَ
இருந்து
l-māi
ٱلْمَآءِۚ
நீர்
qāla
قَالَ
கூறினார்
لَا
அறவே இல்லை
ʿāṣima
عَاصِمَ
பாதுகாப்பவர்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
min
مِنْ
இருந்து
amri
أَمْرِ
கட்டளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
illā
إِلَّا
தவிர
man
مَن
எவர்
raḥima
رَّحِمَۚ
கருணை காட்டினான்
waḥāla
وَحَالَ
இன்னும் தடையானது
baynahumā
بَيْنَهُمَا
அவ்விருவருக்கும் இடையில்
l-mawju
ٱلْمَوْجُ
அலை
fakāna
فَكَانَ
ஆகவே ஆகினான்
mina l-mugh'raqīna
مِنَ ٱلْمُغْرَقِينَ
மூழ்கடிக்கப்பட்டவர்களில்
அதற்கவன் "இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக் கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்" என்று கூறினான். அதற்கவர் "அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது" என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கி விட்டான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௩)
Tafseer
௪௪

وَقِيْلَ يٰٓاَرْضُ ابْلَعِيْ مَاۤءَكِ وَيَا سَمَاۤءُ اَقْلِعِيْ وَغِيْضَ الْمَاۤءُ وَقُضِيَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُوْدِيِّ وَقِيْلَ بُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِيْنَ ٤٤

waqīla
وَقِيلَ
கூறப்பட்டது
yāarḍu
يَٰٓأَرْضُ
பூமியே
ib'laʿī
ٱبْلَعِى
விழுங்கு
māaki
مَآءَكِ
தண்ணீரை/உன்
wayāsamāu
وَيَٰسَمَآءُ
இன்னும் வானமே
aqliʿī
أَقْلِعِى
நிறுத்து
waghīḍa
وَغِيضَ
இன்னும் வற்றியது
l-māu
ٱلْمَآءُ
தண்ணீர்
waquḍiya
وَقُضِىَ
இன்னும் முடிக்கப்பட்டது
l-amru
ٱلْأَمْرُ
காரியம்
wa-is'tawat
وَٱسْتَوَتْ
இன்னும் தங்கியது
ʿalā l-jūdiyi
عَلَى ٱلْجُودِىِّۖ
ஜூதி மலையில்
waqīla
وَقِيلَ
இன்னும் கூறப்பட்டது
buʿ'dan
بُعْدًا
அழிவுதான்
lil'qawmi
لِّلْقَوْمِ
மக்களுக்கு
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
பின்னர் "பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடு; வானமே! (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்" என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) "ஜூதி" (என்னும்) மலையில் தங்கியது; அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்" என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது. ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௪)
Tafseer
௪௫

وَنَادٰى نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِيْ مِنْ اَهْلِيْۚ وَاِنَّ وَعْدَكَ الْحَقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِيْنَ ٤٥

wanādā
وَنَادَىٰ
அழைத்தார்
nūḥun
نُوحٌ
நூஹ்
rabbahu
رَّبَّهُۥ
தன் இறைவனை
faqāla
فَقَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
inna ib'nī
إِنَّ ٱبْنِى
நிச்சயமாக/என் மகன்
min ahlī
مِنْ أَهْلِى
என் குடும்பத்திலுள்ளவன்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
waʿdaka
وَعْدَكَ
உன் வாக்கு
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையானது
wa-anta
وَأَنتَ
நீ
aḥkamu
أَحْكَمُ
மகா தீர்ப்பாளன்
l-ḥākimīna
ٱلْحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில்
(நூஹ் நபியினுடைய மகன் அவரை விட்டு விலகி நிராகரிப்பவர்களுடன் சென்றுவிடவே, அவனும் அழிந்து விடுவானென அஞ்சி) நூஹ் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! (நீயோ என் குடும்பத்தவரை பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறாய்.) நிச்சயமாக உன்னுடைய வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப் பவர்களில் எல்லாம் நீ மிகவும் மேலான நீதிபதி" என்று சப்தமிட்டுக் கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௫)
Tafseer
௪௬

قَالَ يٰنُوْحُ اِنَّهٗ لَيْسَ مِنْ اَهْلِكَ ۚاِنَّهٗ عَمَلٌ غَيْرُ صَالِحٍ فَلَا تَسْـَٔلْنِ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۗاِنِّيْٓ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ ٤٦

qāla
قَالَ
கூறினான்
yānūḥu
يَٰنُوحُ
நூஹே!
innahu
إِنَّهُۥ
அவன்
laysa
لَيْسَ
இல்லை
min ahlika
مِنْ أَهْلِكَۖ
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக இது
ʿamalun
عَمَلٌ
செயல்
ghayru
غَيْرُ
அல்ல
ṣāliḥin
صَٰلِحٍۖ
நல்ல(து)
falā tasalni
فَلَا تَسْـَٔلْنِ
கேட்காதே/என்னிடம்
mā laysa
مَا لَيْسَ
எதை/இல்லை
laka
لَكَ
உமக்கு
bihi
بِهِۦ
அதில்
ʿil'mun
عِلْمٌۖ
ஞானம்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
aʿiẓuka
أَعِظُكَ
உபதேசிக்கிறேன்/உமக்கு
an takūna
أَن تَكُونَ
நீர் ஆகுவதை
mina l-jāhilīna
مِنَ ٱلْجَٰهِلِينَ
அறியாதவர்களில்
அதற்கவன், "நூஹே! நிச்சயமாக அவன் உங்கள் குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.) ஆதலால், நீங்கள் உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம்; அறியாதவர்களில் நீங்களும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நிச்சயமாக நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன்" என்று கூறினான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௬)
Tafseer
௪௭

قَالَ رَبِّ اِنِّيْٓ اَعُوْذُ بِكَ اَنْ اَسْـَٔلَكَ مَا لَيْسَ لِيْ بِهٖ عِلْمٌ ۗوَاِلَّا تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْٓ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ ٤٧

qāla
قَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
aʿūdhu
أَعُوذُ
பாதுகாப்புக் கோருகிறேன்
bika
بِكَ
உன்னிடம்
an asalaka
أَنْ أَسْـَٔلَكَ
நான்கேட்பதைவிட்டு
mā laysa
مَا لَيْسَ
எதை/இல்லை
lī bihi
لِى بِهِۦ
எனக்கு/அதில்
ʿil'mun
عِلْمٌۖ
ஞானம்
wa-illā taghfir
وَإِلَّا تَغْفِرْ
நீ மன்னிக்க வில்லையெனில்
لِى
என்னை
watarḥamnī
وَتَرْحَمْنِىٓ
கருணை காட்டவில்லையெனில்/எனக்கு
akun
أَكُن
ஆகிவிடுவேன்
mina l-khāsirīna
مِّنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
அதற்கு (நூஹ் நபி) "என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவேன்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௭)
Tafseer
௪௮

قِيْلَ يٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَيْكَ وَعَلٰٓى اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ۗوَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ ٤٨

qīla
قِيلَ
கூறப்பட்டது
yānūḥu
يَٰنُوحُ
நூஹே!
ih'biṭ
ٱهْبِطْ
நீர் இறங்குவீராக
bisalāmin
بِسَلَٰمٍ
பாதுகாப்புடன்
minnā
مِّنَّا
நமது
wabarakātin
وَبَرَكَٰتٍ
இன்னும் அருள்வளங்கள்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
waʿalā
وَعَلَىٰٓ
இன்னும் மீது
umamin
أُمَمٍ
உயிரினங்கள்
mimman maʿaka
مِّمَّن مَّعَكَۚ
உம்முடன் இருக்கின்றவர்கள்
wa-umamun
وَأُمَمٌ
இன்னும் சமுதாயங்கள்
sanumattiʿuhum
سَنُمَتِّعُهُمْ
சுகமளிப்போம்/அவர்களுக்கு
thumma
ثُمَّ
பிறகு
yamassuhum
يَمَسُّهُم
அடையும்/அவர்களை
minnā
مِّنَّا
நம்மிடமிருந்து
ʿadhābun
عَذَابٌ
ஒரு வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
(வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் "ஜூதி" என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) "நூஹே! நம்முடைய சாந்தியுடனும் பாக்கியங் களுடனும் (கப்பலிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கும் உங்களுடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக! (பிற்காலத்தில் உங்களுடைய) சந்ததிகள் (பெருகுவர். இவ்வுலகில்) நாம் அவர்களை நிச்சயமாக சுகம் அனுபவிக்க விடுவோம். பின்னர் (அவர்களில் பலர் பாவமான காரியங்களில் ஈடுபடுவார்கள். அதனால்) அவர்களை நம்முடைய துன்புறுத்தும் வேதனை வந்தடையும்" என்று கூறப்பட்டது. ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௮)
Tafseer
௪௯

تِلْكَ مِنْ اَنْۢبَاۤءِ الْغَيْبِ نُوْحِيْهَآ اِلَيْكَ ۚمَا كُنْتَ تَعْلَمُهَآ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَاۚ فَاصْبِرْۚ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِيْنَ ࣖ ٤٩

til'ka min anbāi
تِلْكَ مِنْ أَنۢبَآءِ
இவை/சரித்திரங்களில்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவான(து)
nūḥīhā
نُوحِيهَآ
வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை
ilayka
إِلَيْكَۖ
உமக்கு
mā kunta
مَا كُنتَ
நீர் இருக்கவில்லை
taʿlamuhā
تَعْلَمُهَآ
அறிவீர்/இவற்றை
anta
أَنتَ
நீரோ
walā qawmuka
وَلَا قَوْمُكَ
இன்னும் இல்லை/உமது மக்களோ
min qabli
مِن قَبْلِ
முன்னர்
hādhā
هَٰذَاۖ
இதற்கு
fa-iṣ'bir
فَٱصْبِرْۖ
ஆகவே பொறுப்பீராக
inna l-ʿāqibata
إِنَّ ٱلْعَٰقِبَةَ
நிச்சயமாக முடிவு
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
(நபியே!) இது (உங்களுக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹீ மூலமாகவே நாம் இதனை உங்களுக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீங்களோ அல்லது உங்களுடைய மக்களோ இதனை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப் போல் நீங்களும் கஷ்டங்களைச்) சகித்துப் பொறுத்திருங்கள். நிச்சயமாக முடிவான வெற்றி இறை அச்சம் உடையவர்களுக்குத்தான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௯)
Tafseer
௫௦

وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا ۗقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ۗاِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ ٥٠

wa-ilā
وَإِلَىٰ
இடம்
ʿādin
عَادٍ
ஆது
akhāhum
أَخَاهُمْ
சகோதரர் அவர்களுடைய
hūdan
هُودًاۚ
ஹூதை
qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mā lakum
مَا لَكُم
உங்களுக்கில்லை
min
مِّنْ
அறவே
ilāhin
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
ghayruhu
غَيْرُهُۥٓۖ
அவனையன்றி
in antum
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
illā
إِلَّا
தவிர
muf'tarūna
مُفْتَرُونَ
புனைபவர்களாகவே
"ஆது" (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் "ஹூதை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களை நோக்கி) அவர் கூறினார்: "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. (வேறு இறைவன் உண்டென்று கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே. ([௧௧] ஸூரத்து ஹூது: ௫௦)
Tafseer