وَلَآ اَقُوْلُ لَكُمْ عِنْدِيْ خَزَاۤىِٕنُ اللّٰهِ وَلَآ اَعْلَمُ الْغَيْبَ وَلَآ اَقُوْلُ اِنِّيْ مَلَكٌ وَّلَآ اَقُوْلُ لِلَّذِيْنَ تَزْدَرِيْٓ اَعْيُنُكُمْ لَنْ يُّؤْتِيَهُمُ اللّٰهُ خَيْرًا ۗ اَللّٰهُ اَعْلَمُ بِمَا فِيْٓ اَنْفُسِهِمْ ۚاِنِّيْٓ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ ٣١
- walā aqūlu
- وَلَآ أَقُولُ
- நான் கூறமாட்டேன்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿindī
- عِندِى
- என்னிடம்
- khazāinu
- خَزَآئِنُ
- பொக்கிஷங்கள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- walā aʿlamu
- وَلَآ أَعْلَمُ
- இன்னும் அறியமாட்டேன்
- l-ghayba
- ٱلْغَيْبَ
- மறைவை
- walā aqūlu
- وَلَآ أَقُولُ
- இன்னும் கூறமாட்டேன்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- malakun
- مَلَكٌ
- ஒரு வானவர்
- walā aqūlu
- وَلَآ أَقُولُ
- இன்னும் கூறமாட்டேன்
- lilladhīna
- لِلَّذِينَ
- எங்களுக்கு
- tazdarī
- تَزْدَرِىٓ
- இழிவாகக் காண்கிறது
- aʿyunukum
- أَعْيُنُكُمْ
- கண்கள்/உங்கள்
- lan yu'tiyahumu l-lahu
- لَن يُؤْتِيَهُمُ ٱللَّهُ
- அறவே கொடுக்கவே மாட்டான்/அவர்களுக்கு/ அல்லாஹ்
- khayran
- خَيْرًاۖ
- ஒரு நன்மை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- bimā fī anfusihim
- بِمَا فِىٓ أَنفُسِهِمْۖ
- எதை/ உள்ளங்களில்/அவர்கள்
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- idhan
- إِذًا
- அப்போது
- lamina l-ẓālimīna
- لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களில்தான்
அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் (அனைத்தும்) என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை; நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன்; நான் ஒரு மலக்கு என்றும் கூறவில்லை. எவர்களை உங்கள் கண்கள் இழிவாகக் காண்கின்றனவோ அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை (நம்பிக்கையை உங்களைவிட) அல்லாஹ் தான் மிகவும் அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்" (என்றும் கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௧)Tafseer
قَالُوْا يٰنُوْحُ قَدْ جَادَلْتَنَا فَاَ كْثَرْتَ جِدَالَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَآ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ٣٢
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- yānūḥu
- يَٰنُوحُ
- நூஹே!
- qad jādaltanā
- قَدْ جَٰدَلْتَنَا
- நீர் தர்க்கித்து விட்டீர்/எங்களுடன்
- fa-aktharta
- فَأَكْثَرْتَ
- அதிகப்படுத்தினீர்
- jidālanā
- جِدَٰلَنَا
- தர்க்கத்தை/ எங்களுடன்
- fatinā
- فَأْتِنَا
- ஆகவே வருவீராக/எங்களிடம்
- bimā taʿidunā
- بِمَا تَعِدُنَآ
- எதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்கு
- in kunta
- إِن كُنتَ
- நீர் இருந்தால்
- mina l-ṣādiqīna
- مِنَ ٱلصَّٰدِقِينَ
- உண்மையாளர்களில்
அதற்கவர்கள் "நூஹே! நிச்சயமாக நீங்கள் எங்களுடன் தர்க்கித்தீர்கள்; (அதுவும்) அதிகமாகவே தர்க்கித்து விட்டீர்கள். (ஆகவே, இனி தர்க்கத்தை விட்டொழித்து வேதனை வரும் என்று கூறுவதில்) நீங்கள் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீங்கள் அச்சமுறுத்தும் அதனை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௨)Tafseer
قَالَ اِنَّمَا يَأْتِيْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَاۤءَ وَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ ٣٣
- qāla
- قَالَ
- கூறினார்
- innamā
- إِنَّمَا
- எல்லாம்
- yatīkum bihi
- يَأْتِيكُم بِهِ
- அதைக் கொண்டு வருவான்/உங்களிடம்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- in shāa
- إِن شَآءَ
- அவன் நாடினால்
- wamā antum
- وَمَآ أَنتُم
- நீங்கள் இல்லை
- bimuʿ'jizīna
- بِمُعْجِزِينَ
- பலவீனப்படுத்துபவர்களாக
அதற்கு அவர் "வேதனை கொண்டு வருபவன் நான் அல்லன்;) அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதிசீக்கிரத்தில்) அதனை உங்களுக்கு நிச்சயமாகக் கொண்டு வருவான். அதனைத் தடுத்துவிட உங்களால் முடியாது" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௩)Tafseer
وَلَا يَنْفَعُكُمْ نُصْحِيْٓ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ يُرِيْدُ اَنْ يُّغْوِيَكُمْ ۗهُوَ رَبُّكُمْ ۗوَاِلَيْهِ تُرْجَعُوْنَۗ ٣٤
- walā yanfaʿukum
- وَلَا يَنفَعُكُمْ
- பலனளிக்காது/உங்களுக்கு
- nuṣ'ḥī
- نُصْحِىٓ
- என் நல்லுபதேசம்
- in aradttu
- إِنْ أَرَدتُّ
- நான் நாடினால்
- an anṣaḥa
- أَنْ أَنصَحَ
- நான் நல்லுபதேசம்புரிய
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- in kāna l-lahu
- إِن كَانَ ٱللَّهُ
- இருந்தால்/அல்லாஹ்
- yurīdu
- يُرِيدُ
- நாடுகிறான்
- an yugh'wiyakum
- أَن يُغْوِيَكُمْۚ
- அவன் வழிகெடுக்க/உங்களை
- huwa
- هُوَ
- அவன்
- rabbukum
- رَبُّكُمْ
- உங்கள் இறைவன்
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- அவனிடமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- நீங்கள் திருப்பப்படுவீர்கள்
அன்றி "நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. அவன்தான் உங்களைப் படைத்து காப்பவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௪)Tafseer
اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُۗ قُلْ اِنِ افْتَرَيْتُهٗ فَعَلَيَّ اِجْرَامِيْ وَاَنَا۠ بَرِيْۤءٌ مِّمَّا تُجْرِمُوْنَ ࣖ ٣٥
- am
- أَمْ
- அல்லது
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுகிறார்கள்
- if'tarāhu
- ٱفْتَرَىٰهُۖ
- அவர் புனைந்தார்/இதை
- qul
- قُلْ
- கூறுவீராக
- ini if'taraytuhu
- إِنِ ٱفْتَرَيْتُهُۥ
- நான் புனைந்திருந்தால்/அதை
- faʿalayya
- فَعَلَىَّ
- என் மீதே
- ij'rāmī
- إِجْرَامِى
- என் குற்றம்
- wa-anā
- وَأَنَا۠
- இன்னும் நான்
- barīon
- بَرِىٓءٌ
- விலகியவன்
- mimmā tuj'rimūna
- مِّمَّا تُجْرِمُونَ
- விட்டு/எவை/நீங்கள் குற்றம் புரிகிறீர்கள்
(நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) "நீங்கள் இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள்" என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீங்கள் கூறுங்கள்: "நான் அதனைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல. ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௫)Tafseer
وَاُوْحِيَ اِلٰى نُوْحٍ اَنَّهٗ لَنْ يُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَۖ ٣٦
- waūḥiya
- وَأُوحِىَ
- இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது
- ilā nūḥin
- إِلَىٰ نُوحٍ
- நூஹுக்கு
- annahu
- أَنَّهُۥ
- நிச்சயமாக செய்தி
- lan yu'mina
- لَن يُؤْمِنَ
- அறவே நம்பிக்கை கொள்ள மாட்டார்
- min qawmika
- مِن قَوْمِكَ
- உமது மக்களில்
- illā
- إِلَّا
- தவிர
- man qad āmana
- مَن قَدْ ءَامَنَ
- எவர்/நம்பிக்கை கொண்டு விட்டார்
- falā tabta-is
- فَلَا تَبْتَئِسْ
- ஆகவே நீர் கவலைப்படாதீர்
- bimā
- بِمَا
- காரணமாக/எவை
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- yafʿalūna
- يَفْعَلُونَ
- அவர்கள் செய்வார்கள்
(நபி) நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: "முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, இனி உங்களுடைய மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயலைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௬)Tafseer
وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِيْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا ۚاِنَّهُمْ مُّغْرَقُوْنَ ٣٧
- wa-iṣ'naʿi
- وَٱصْنَعِ
- இன்னும் செய்வீராக
- l-ful'ka
- ٱلْفُلْكَ
- கப்பலை
- bi-aʿyuninā
- بِأَعْيُنِنَا
- நம் கண்கள் முன்பாக
- wawaḥyinā
- وَوَحْيِنَا
- இன்னும் நம்அறிவிப்புப்படி
- walā tukhāṭib'nī
- وَلَا تُخَٰطِبْنِى
- என்னிடம் பேசாதீர்
- fī alladhīna
- فِى ٱلَّذِينَ
- இல்/எவர்கள்
- ẓalamū
- ظَلَمُوٓا۟ۚ
- அநியாயம் செய்தார்கள்
- innahum
- إِنَّهُم
- நிச்சயமாக அவர்கள்
- mugh'raqūna
- مُّغْرَقُونَ
- மூழ்கடிக்கப்படுபவர்கள்
நாம் அறிவிக்குமாறு நம்முடைய கண் முன்பாகவே ஒரு கப்பலை நீங்கள் செய்யுங்கள். அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீங்கள் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்" (என்றும் அறிவிக்கப்பட்டது.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௭)Tafseer
وَيَصْنَعُ الْفُلْكَۗ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَاٌ مِّنْ قَوْمِهٖ سَخِرُوْا مِنْهُ ۗقَالَ اِنْ تَسْخَرُوْا مِنَّا فَاِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُوْنَۗ ٣٨
- wayaṣnaʿu
- وَيَصْنَعُ
- அவர் செய்கிறார்
- l-ful'ka
- ٱلْفُلْكَ
- கப்பலை
- wakullamā marra
- وَكُلَّمَا مَرَّ
- கடந்தபோதெல்லாம்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவருக்கு அருகில்
- mala-on
- مَلَأٌ
- முக்கிய பிரமுகர்கள்
- min
- مِّن
- இருந்து
- qawmihi
- قَوْمِهِۦ
- அவருடைய மக்கள்
- sakhirū
- سَخِرُوا۟
- பரிகசித்தனர்
- min'hu qāla
- مِنْهُۚ قَالَ
- அவரை/கூறினார்
- in taskharū
- إِن تَسْخَرُوا۟
- நீங்கள் பரிகசித்தால்
- minnā
- مِنَّا
- எங்களை
- fa-innā
- فَإِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- naskharu
- نَسْخَرُ
- பரிகசிப்போம்
- minkum
- مِنكُمْ
- உங்களை
- kamā taskharūna
- كَمَا تَسْخَرُونَ
- நீங்கள் பரிகசிப்பது போன்று
அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், அதன் சமீபமாகச் சென்ற அவருடைய மக்களின் தலைவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் "நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசிக்கும் இவ்வாறே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்றும் கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௮)Tafseer
فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ ٣٩
- fasawfa taʿlamūna
- فَسَوْفَ تَعْلَمُونَ
- நீங்கள் அறிவீர்கள்
- man
- مَن
- எவர்
- yatīhi
- يَأْتِيهِ
- அவருக்கு வரும்
- ʿadhābun
- عَذَابٌ
- ஒரு வேதனை
- yukh'zīhi
- يُخْزِيهِ
- இழிவுபடுத்தும்/அவரை
- wayaḥillu
- وَيَحِلُّ
- இன்னும் இறங்கும்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- ʿadhābun
- عَذَابٌ
- ஒரு வேதனை
- muqīmun
- مُّقِيمٌ
- நிலையானது
அன்றி, "இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது, நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது என்பதையும் அதி சீக்கிரத்தில் நீங்கள் (சந்தேகமற) தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௯)Tafseer
حَتّٰىٓ اِذَا جَاۤءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُۙ قُلْنَا احْمِلْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ ۗوَمَآ اٰمَنَ مَعَهٗٓ اِلَّا قَلِيْلٌ ٤٠
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā
- إِذَا
- போது
- jāa
- جَآءَ
- வந்தது
- amrunā
- أَمْرُنَا
- நம் கட்டளை
- wafāra
- وَفَارَ
- இன்னும் பொங்கியது
- l-tanūru
- ٱلتَّنُّورُ
- அடுப்பு
- qul'nā
- قُلْنَا
- கூறினோம்
- iḥ'mil
- ٱحْمِلْ
- ஏற்றுவீராக
- fīhā
- فِيهَا
- அதில்
- min
- مِن
- இருந்து
- kullin
- كُلٍّ
- எல்லாம்
- zawjayni
- زَوْجَيْنِ
- இரு ஜோடியை
- ith'nayni
- ٱثْنَيْنِ
- இரண்டு
- wa-ahlaka
- وَأَهْلَكَ
- இன்னும் உமது குடும்பத்தை
- illā man
- إِلَّا مَن
- தவிர/எவர்
- sabaqa
- سَبَقَ
- முந்தி விட்டது
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- l-qawlu
- ٱلْقَوْلُ
- வாக்கு
- waman
- وَمَنْ
- இன்னும் எவர்
- āmana
- ءَامَنَۚ
- நம்பிக்கை கொண்டார்
- wamā āmana
- وَمَآ ءَامَنَ
- நம்பிக்கை கொள்ளவில்லை
- maʿahu illā
- مَعَهُۥٓ إِلَّا
- அவருடன்/தவிர
- qalīlun
- قَلِيلٌ
- குறைவானவர்கள்
ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி "ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள். (அழிந்து விடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்களுடைய மகன் ஆகிய)வர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர் களையும் அதில் ஏற்றிக் கொள்ளுங்கள்" என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை. ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௦)Tafseer