Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 12

Hud

(Hūd)

௧௧௧

وَاِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ اَعْمَالَهُمْ ۗاِنَّهٗ بِمَا يَعْمَلُوْنَ خَبِيْرٌ ١١١

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
kullan
كُلًّا
எல்லோருக்கும்
lammā layuwaffiyannahum
لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ
நிச்சயமாக முழுமையாகக் கொடுப்பான்/அவர்களுக்கு
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
aʿmālahum
أَعْمَٰلَهُمْۚ
அவர்களுடைய செயல்களை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
bimā yaʿmalūna
بِمَا يَعْمَلُونَ
அவர்கள் செய்பவற்றை
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
நிச்சயமாக உங்கள் இறைவன் (அவர்கள் ஒவ்வொரு வருக்கும்) அவர்களுடைய செய்கைக்குரிய கூலியை முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அவன் அவர்களுடைய செய்கைகளை நன்கறிந்தே இருக்கிறான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௧)
Tafseer
௧௧௨

فَاسْتَقِمْ كَمَآ اُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْاۗ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ١١٢

fa-is'taqim
فَٱسْتَقِمْ
நிலையாக இருங்கள்
kamā
كَمَآ
போன்றே
umir'ta
أُمِرْتَ
நீர் ஏவப்பட்டீர்
waman
وَمَن
இன்னும் எவர்(கள்)
tāba
تَابَ
திருந்தி திரும்பினார்(கள்)
maʿaka
مَعَكَ
உம்முடன்
walā taṭghaw
وَلَا تَطْغَوْا۟ۚ
வரம்பு மீறாதீர்கள்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
(நபியே!) உங்களுக்கு ஏவப்பட்டது போன்றே நீங்களும், இணைவைத்து வணங்குவதிலிருந்து விலகி, உங்களுடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௨)
Tafseer
௧௧௩

وَلَا تَرْكَنُوْٓا اِلَى الَّذِيْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُۙ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَاۤءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ١١٣

walā tarkanū
وَلَا تَرْكَنُوٓا۟
நீங்கள் சாய்ந்து விடாதீர்கள்
ilā
إِلَى
பக்கம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
அநீதி இழைத்தார்கள்
fatamassakumu
فَتَمَسَّكُمُ
உங்களை அடைந்து விடும்
l-nāru
ٱلنَّارُ
நெருப்பு
wamā
وَمَا
இல்லை
lakum
لَكُم
உங்களுக்கு
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
min awliyāa
مِنْ أَوْلِيَآءَ
பாதுகாப்பவர்கள் எவரும்
thumma lā tunṣarūna
ثُمَّ لَا تُنصَرُونَ
பிறகு/உதவி செய்யப்பட மாட்டீர்கள்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௩)
Tafseer
௧௧௪

وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ الَّيْلِ ۗاِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِۗ ذٰلِكَ ذِكْرٰى لِلذَّاكِرِيْنَ ١١٤

wa-aqimi
وَأَقِمِ
நிலை நிறுத்துவீராக!
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
ṭarafayi
طَرَفَىِ
இரு முனைகளில்
l-nahāri
ٱلنَّهَارِ
பகலின்
wazulafan
وَزُلَفًا
இன்னும் ஒரு பகுதியில்
mina al-layli
مِّنَ ٱلَّيْلِۚ
இரவில்
inna l-ḥasanāti
إِنَّ ٱلْحَسَنَٰتِ
நிச்சயமாகநன்மைகள்
yudh'hib'na
يُذْهِبْنَ
போக்கி விடுகின்றன
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِۚ
பாவங்களை
dhālika dhik'rā
ذَٰلِكَ ذِكْرَىٰ
இது/ஒருநல்லுபதேசம்
lildhākirīna
لِلذَّٰكِرِينَ
நினைவு கூருபவர்களுக்கு
பகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பாகத்திலும், நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள். நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டுதலாகும். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௪)
Tafseer
௧௧௫

وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ ١١٥

wa-iṣ'bir
وَٱصْبِرْ
பொறுப்பீராக
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yuḍīʿu
لَا يُضِيعُ
வீணாக்க மாட்டான்
ajra
أَجْرَ
கூலியை
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்களின்
(நபியே! துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௫)
Tafseer
௧௧௬

فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِيَّةٍ يَّنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِى الْاَرْضِ اِلَّا قَلِيْلًا مِّمَّنْ اَنْجَيْنَا مِنْهُمْ ۚوَاتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْا مَآ اُتْرِفُوْا فِيْهِ وَكَانُوْا مُجْرِمِيْنَ ١١٦

falawlā kāna
فَلَوْلَا كَانَ
இருந்திருக்க வேண்டாமா?
mina l-qurūni
مِنَ ٱلْقُرُونِ
தலை முறையினர்களில்
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
ulū baqiyyatin
أُو۟لُوا۟ بَقِيَّةٍ
சிறந்தோர்
yanhawna
يَنْهَوْنَ
தடுக்கின்றார்கள்
ʿani l-fasādi
عَنِ ٱلْفَسَادِ
விஷமத்தை விட்டு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
illā
إِلَّا
எனினும்
qalīlan
قَلِيلًا
குறைவானவர்(கள்)
mimman
مِّمَّنْ
இருந்து/எவர்கள்
anjaynā
أَنجَيْنَا
நாம் பாதுகாத்தோம்
min'hum
مِنْهُمْۗ
அவர்களில்
wa-ittabaʿa
وَٱتَّبَعَ
இன்னும் பின்பற்றினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
அநியாயம் செய்தனர்
mā ut'rifū
مَآ أُتْرِفُوا۟
எதில்/இன்பமளிக்கப்பட்டார்கள்
fīhi wakānū
فِيهِ وَكَانُوا۟
அதில்/இன்னும் இருந்தனர்
muj'rimīna
مُجْرِمِينَ
குற்றவாளிகளாக
உங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து மற்ற மனிதர்களும்) பூமியில் விஷமம் செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் (அதிகமாக) இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர். நாம் அவர்களை பாதுகாத்துக் கொண்டோம். ஆனால், (பெரும்பாலான) அநியாயக்காரர்களோ தங்கள் ஆசாபாசங்களைப் பின்பற்றிக் குற்றம் செய்பவர்களாகவே இருந்தனர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௬)
Tafseer
௧௧௭

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ ١١٧

wamā kāna
وَمَا كَانَ
இருக்க வில்லை
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
liyuh'lika
لِيُهْلِكَ
அழிப்பவனாக
l-qurā
ٱلْقُرَىٰ
ஊர்களை
biẓul'min
بِظُلْمٍ
அநியாயமாக
wa-ahluhā
وَأَهْلُهَا
அவற்றில் வசிப்போரோ
muṣ'liḥūna
مُصْلِحُونَ
சீர்திருத்துபவர்கள்
(நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரையில் (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உங்களது இறைவன் அழித்துவிட மாட்டான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௭)
Tafseer
௧௧௮

وَلَوْ شَاۤءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً وَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ ١١٨

walaw shāa
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
lajaʿala
لَجَعَلَ
ஆக்கியிருப்பான்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
ummatan wāḥidatan
أُمَّةً وَٰحِدَةًۖ
ஒரே வகுப்பினராக
walā yazālūna mukh'talifīna
وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ
அவர்கள் மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்
உங்கள் இறைவன் எண்ணியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடவில்லை.) அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டே யிருப்பார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௮)
Tafseer
௧௧௯

اِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ ۗوَلِذٰلِكَ خَلَقَهُمْ ۗوَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ ١١٩

illā
إِلَّا
தவிர
man
مَن
எவர்
raḥima
رَّحِمَ
அருள் புரிந்தான்
rabbuka
رَبُّكَۚ
உம் இறைவன்
walidhālika
وَلِذَٰلِكَ
இதற்காகத்தான்
khalaqahum
خَلَقَهُمْۗ
அவன் படைத்தான்/அவர்களை
watammat
وَتَمَّتْ
நிறைவேறியது
kalimatu
كَلِمَةُ
வாக்கு
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
la-amla-anna
لَأَمْلَأَنَّ
நிச்சயமாக நான் நிரப்புவேன்
jahannama
جَهَنَّمَ
நரகத்தை
mina l-jinati
مِنَ ٱلْجِنَّةِ
ஜின்களில்
wal-nāsi
وَٱلنَّاسِ
இன்னும் மக்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவர்
அவர்களில் உங்கள் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. இதற்காகவே (மாறுபடும்) அவர்களை படைத்தும் இருக்கிறான். (பாவம் செய்த) "ஜின்களைக் கொண்டும் மனிதர்களைக் கொண்டும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்" என்ற உங்கள் இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௯)
Tafseer
௧௨௦

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَاۤءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ وَجَاۤءَكَ فِيْ هٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ ١٢٠

wakullan
وَكُلًّا
எல்லாவற்றையும்
naquṣṣu
نَّقُصُّ
விவரிக்கிறோம்
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
min
مِنْ
இருந்து
anbāi
أَنۢبَآءِ
சரித்திரங்கள்
l-rusuli
ٱلرُّسُلِ
தூதர்களின்
مَا
எதை
nuthabbitu
نُثَبِّتُ
உறுதிப்படுத்துவோம்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
fuādaka
فُؤَادَكَۚ
உம் உள்ளத்தை
wajāaka
وَجَآءَكَ
இன்னும் வந்தன/உமக்கு
fī hādhihi l-ḥaqu
فِى هَٰذِهِ ٱلْحَقُّ
இவற்றில்/உண்மை
wamawʿiẓatun
وَمَوْعِظَةٌ
நல்லுபதேசம்
wadhik'rā
وَذِكْرَىٰ
அறிவுரை
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௨௦)
Tafseer