Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 11

Hud

(Hūd)

௧௦௧

وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ فَمَآ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِيْ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَيْءٍ لَّمَّا جَاۤءَ اَمْرُ رَبِّكَۗ وَمَا زَادُوْهُمْ غَيْرَ تَتْبِيْبٍ ١٠١

wamā ẓalamnāhum
وَمَا ظَلَمْنَٰهُمْ
நாம் அநீதி இழைக்கவில்லை/அவர்களுக்கு
walākin
وَلَٰكِن
எனினும்
ẓalamū
ظَلَمُوٓا۟
அநீதி இழைத்தனர்
anfusahum
أَنفُسَهُمْۖ
தங்களுக்கே
famā aghnat
فَمَآ أَغْنَتْ
பலனளிக்கவில்லை
ʿanhum
عَنْهُمْ
அவர்களுக்கு
ālihatuhumu
ءَالِهَتُهُمُ
தெய்வங்கள்/ அவர்களுடைய
allatī
ٱلَّتِى
எவை
yadʿūna
يَدْعُونَ
அழைக்கின்றார்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
min shayin
مِن شَىْءٍ
சிறிதும்
lammā jāa
لَّمَّا جَآءَ
வந்த போது
amru
أَمْرُ
கட்டளை
rabbika
رَبِّكَۖ
உம் இறைவனின்
wamā
وَمَا
அவை அதிகப்படுத்தவில்லை
zādūhum
زَادُوهُمْ
அவை அதிகப்படுத்தவில்லை அவர்களுக்கு
ghayra
غَيْرَ
தவிர
tatbībin
تَتْبِيبٍ
அழிவை
இவர்களில் எவருக்குமே நாம் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்களே தங்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டனர். உங்கள் இறைவனின் வேதனை வந்த சமயத்தில் அல்லாஹ்வை யன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த தெய்வங்களில் ஒன்றுமே அவர்களுக்கு யாதொரு பயனும் அளிக்கவில்லை; அன்றி நஷ்டத்தையே அவை அவர்களுக்கு அதிகப்படுத்தின! ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௧)
Tafseer
௧௦௨

وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَآ اَخَذَ الْقُرٰى وَهِيَ ظَالِمَةٌ ۗاِنَّ اَخْذَهٗٓ اَلِيْمٌ شَدِيْدٌ ١٠٢

wakadhālika
وَكَذَٰلِكَ
இது போன்றுதான்
akhdhu
أَخْذُ
பிடி
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
idhā akhadha
إِذَآ أَخَذَ
அவன் பிடித்தால்
l-qurā
ٱلْقُرَىٰ
ஊர்களை
wahiya
وَهِىَ
அவையோ
ẓālimatun
ظَٰلِمَةٌۚ
அநியாயம் புரிந்தவை
inna
إِنَّ
நிச்சயமாக
akhdhahu
أَخْذَهُۥٓ
அவனுடைய பிடி
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
shadīdun
شَدِيدٌ
மிகக் கடுமையானது
அநியாயம் செய்யும் ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உங்கள் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதாகவும் துன்புறுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௨)
Tafseer
௧௦௩

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ۗذٰلِكَ يَوْمٌ مَّجْمُوْعٌۙ لَّهُ النَّاسُ وَذٰلِكَ يَوْمٌ مَّشْهُوْدٌ ١٠٣

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyatan
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
liman
لِّمَنْ
எவருக்கு
khāfa
خَافَ
பயந்தார்
ʿadhāba
عَذَابَ
வேதனை
l-ākhirati
ٱلْءَاخِرَةِۚ
மறுமையின்
dhālika
ذَٰلِكَ
அது
yawmun
يَوْمٌ
நாள்
majmūʿun
مَّجْمُوعٌ
ஒன்று சேர்க்கப்படும்
lahu
لَّهُ
அதில்
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
wadhālika
وَذَٰلِكَ
இன்னும் அது
yawmun
يَوْمٌ
நாள்
mashhūdun
مَّشْهُودٌ
சமர்ப்பிக்கப்படும்
மறுமையின் வேதனைக்குப் பயப்படக்கூடியவருக்கு நிச்சயமாக இதில் நல்ல ஓர் அத்தாட்சி இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் அது. அன்றி, அவர்கள் அனைவரும் (இறைவனின் சந்நிதியில்) கொண்டு வரப்படக்கூடிய நாளுமாகும். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௩)
Tafseer
௧௦௪

وَمَا نُؤَخِّرُهٗٓ اِلَّا لِاَجَلٍ مَّعْدُوْدٍۗ ١٠٤

wamā nu-akhiruhu illā
وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا
நாம் பிற்படுத்த மாட்டோம்/அதை/தவிர
li-ajalin
لِأَجَلٍ
ஒரு தவணைக்கே
maʿdūdin
مَّعْدُودٍ
எண்ணப்பட்டது
ஒரு சொற்ப தவனைக்கேயன்றி அதனை நாம் பிற்படுத்தி வைக்கவில்லை. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௪)
Tafseer
௧௦௫

يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖۚ فَمِنْهُمْ شَقِيٌّ وَّسَعِيْدٌ ١٠٥

yawma yati
يَوْمَ يَأْتِ
நாளில்/அது வரும்
lā takallamu
لَا تَكَلَّمُ
பேசாது
nafsun
نَفْسٌ
எந்த ஓர் ஆன்மா
illā
إِلَّا
தவிர
bi-idh'nihi
بِإِذْنِهِۦۚ
அவனுடைய அனுமதி கொண்டே
famin'hum
فَمِنْهُمْ
அவர்களில்
shaqiyyun
شَقِىٌّ
துர்ப்பாக்கியவான்
wasaʿīdun
وَسَعِيدٌ
இன்னும் நற்பாக்கியவான்
அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு மனிதனும் (அவனுடன்) பேச முடியாது. அவர்களில் துர்ப்பாக்கியவான்களும் உள்ளனர்; நற்பாக்கியவான்களும் உள்ளனர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௫)
Tafseer
௧௦௬

فَاَمَّا الَّذِيْنَ شَقُوْا فَفِى النَّارِ لَهُمْ فِيْهَا زَفِيْرٌ وَّشَهِيْقٌۙ ١٠٦

fa-ammā
فَأَمَّا
ஆகவே
alladhīna shaqū
ٱلَّذِينَ شَقُوا۟
துர்ப்பாக்கியமடைந்தவர்கள்
fafī l-nāri
فَفِى ٱلنَّارِ
நரகில்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
zafīrun
زَفِيرٌ
பெரும் கூச்சல்
washahīqun
وَشَهِيقٌ
இன்னும் இறைச்சல்
துர்ப்பாக்கியவான்கள் நரகத்தில் (வீழ்த்தப்படுவார்கள். வேதனையைத் தாங்க முடியாது) அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டுக் கதறுவார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௬)
Tafseer
௧௦௭

خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَاۤءَ رَبُّكَۗ اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا يُرِيْدُ ١٠٧

khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَا
அதில்
mā dāmati
مَا دَامَتِ
நிலைத்திருக்கும்வரை
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
வானங்கள்
wal-arḍu
وَٱلْأَرْضُ
இன்னும் பூமி
illā
إِلَّا
தவிர
mā shāa
مَا شَآءَ
நாடியதை
rabbuka
رَبُّكَۚ
உம் இறைவன்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
faʿʿālun
فَعَّالٌ
செய்பவன்
limā yurīdu
لِّمَا يُرِيدُ
நாடுவான்/எதை
உங்கள் இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில் அவர்கள் தங்கியும் விடுவார்கள். நிச்சயமாக உங்களது இறைவன், தான் விரும்பிய வற்றை (தடையின்றி) செய்து முடிப்பவன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௭)
Tafseer
௧௦௮

۞ وَاَمَّا الَّذِيْنَ سُعِدُوْا فَفِى الْجَنَّةِ خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَاۤءَ رَبُّكَۗ عَطَاۤءً غَيْرَ مَجْذُوْذٍ ١٠٨

wa-ammā
وَأَمَّا
ஆகவே
alladhīna suʿidū
ٱلَّذِينَ سُعِدُوا۟
நற்பாக்கியமடைந்தவர்கள்
fafī l-janati
فَفِى ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
fīhā
فِيهَا
அதில்
mā dāmati
مَا دَامَتِ
நிலைத்திருக்கும்வரை
l-samāwātu wal-arḍu
ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ
வானங்கள்/இன்னும் பூமி
illā mā shāa
إِلَّا مَا شَآءَ
நாடியதைத் தவிர
rabbuka
رَبُّكَۖ
உம் இறைவன்
ʿaṭāan
عَطَآءً
அருட்கொடையாக
ghayra majdhūdhin
غَيْرَ مَجْذُوذٍ
முடிவுறாதது
நற்பாக்கியவான்கள் சுவனபதியில் (நுழைந்து விடுவார்கள்.) உங்கள் இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில்தான் அவர்கள் தங்கி விடுவார்கள். (அது) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட் கொடையாகும். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௮)
Tafseer
௧௦௯

فَلَا تَكُ فِيْ مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هٰٓؤُلَاۤءِ ۗمَا يَعْبُدُوْنَ اِلَّا كَمَا يَعْبُدُ اٰبَاۤؤُهُمْ مِّنْ قَبْلُ ۗوَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِيْبَهُمْ غَيْرَ مَنْقُوْصٍ ࣖ ١٠٩

falā taku
فَلَا تَكُ
ஆகிவிடாதீர்
fī mir'yatin
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில்
mimmā yaʿbudu
مِّمَّا يَعْبُدُ
வணங்குபவற்றில்
hāulāi
هَٰٓؤُلَآءِۚ
இவர்கள்
mā yaʿbudūna
مَا يَعْبُدُونَ
இவர்கள் வணங்கவில்லை
illā kamā
إِلَّا كَمَا
தவிர/போன்றே
yaʿbudu
يَعْبُدُ
வணங்கினார்(கள்)
ābāuhum
ءَابَآؤُهُم
மூதாதைகள் இவர்களுடைய
min qablu
مِّن قَبْلُۚ
முன்னர்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
lamuwaffūhum
لَمُوَفُّوهُمْ
முழுமையாகக் கொடுப்போம்/இவர்களுக்கு
naṣībahum
نَصِيبَهُمْ
பாகத்தை/ இவர்களுடைய
ghayra manqūṣin
غَيْرَ مَنقُوصٍ
குறைக்கப்படாமல்
(நபியே! இணைவைத்து வணங்கும்) இவர்கள் வணங்குபவைகளைப் பற்றி (இவர்களிடம் ஏதும் ஆதாரம் இருக்குமோ என்று) நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். (யாதொரு ஆதாரமுமில்லை. எனினும்,) இதற்கு முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தது போன்றே இவர்களும் (யாதொரு ஆதாரமுமின்றியே) வணங்குகின்றனர். இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை (இவர்களுடைய மூதாதைகளுக்குக் கொடுத்து இருந்தவாறே) இவர்களுக்கும் முழுமையாக யாதொரு குறைவுமின்றி நிச்சயமாக நாம் கொடுப்போம். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௯)
Tafseer
௧௧௦

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَاخْتُلِفَ فِيْهِ ۗوَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ ۚوَاِنَّهُمْ لَفِيْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ ١١٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
கொடுத்தோம்
mūsā
مُوسَى
மூஸாவுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
fa-ukh'tulifa
فَٱخْتُلِفَ
மாறுபாடு கொள்ளப்பட்டது
fīhi
فِيهِۚ
அதில்
walawlā
وَلَوْلَا
இல்லையெனில்
kalimatun
كَلِمَةٌ
ஒரு வாக்கு
sabaqat
سَبَقَتْ
முந்தியது
min
مِن
இருந்து
rabbika
رَّبِّكَ
உம் இறைவன்
laquḍiya
لَقُضِىَ
முடிக்கப்பட்டிருக்கும்
baynahum
بَيْنَهُمْۚ
இவர்களுக்கிடையில்
wa-innahum
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lafī shakkin
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்தான்
min'hu
مِّنْهُ
அதில்
murībin
مُرِيبٍ
மிக ஆழமான (சந்தேகம்)
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (இந்தக் குர்ஆனில் இவர்கள் மாறுபடுகின்ற வாறே) அதிலும் அவர்கள் மாறுபட்டார்கள். (அவர்கள் தண்டனையடையும் காலம் மறுமைதான் என்று) உங்கள் இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில் (இம்மையிலேயே) இவர்களுடைய காரியம் முடிவு பெற்றிருக்கும். நிச்சயமாக (மக்காவாசிகளாகிய) இவர்களும் (இந்தக் குர்ஆனைப் பற்றிக் குழப்பமான) சந்தேகத்தில் இருக்கின்றனர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧௦)
Tafseer