قَالُوْا يٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَنَرٰىكَ فِيْنَا ضَعِيْفًا ۗوَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ ۖوَمَآ اَنْتَ عَلَيْنَا بِعَزِيْزٍ ٩١
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- yāshuʿaybu
- يَٰشُعَيْبُ
- ஷுஐபே
- mā nafqahu
- مَا نَفْقَهُ
- நாம் விளங்கவில்லை
- kathīran
- كَثِيرًا
- பலவற்றை
- mimmā taqūlu
- مِّمَّا تَقُولُ
- நீர் கூறுவதில்
- wa-innā
- وَإِنَّا
- நிச்சயமாக நாம்
- lanarāka
- لَنَرَىٰكَ
- உம்மை காண்கிறோம்
- fīnā
- فِينَا
- எங்களில்
- ḍaʿīfan
- ضَعِيفًاۖ
- பலவீனராக
- walawlā
- وَلَوْلَا
- இல்லாவிடில்
- rahṭuka
- رَهْطُكَ
- உம் இனத்தார்
- larajamnāka
- لَرَجَمْنَٰكَۖ
- கல் எறிந்தே கொன்றிருப்போம்/உம்மை
- wamā anta ʿalaynā
- وَمَآ أَنتَ عَلَيْنَا
- இல்லை/நீர்/நம்மிடம்
- biʿazīzin
- بِعَزِيزٍ
- மதிப்புடையவராக
அதற்கவர்கள் "ஷுஐபே! நீங்கள் கூறுபவற்றில் பெரும்பாலானவற்றை நாம் விளங்கிக்கொள்ள (முடிய)வில்லை. நிச்சயமாக நாம் உங்களை எங்களில் பலவீனமானவராகவே காண்கிறோம். உங்களுடைய இனத்தார் இல்லாவிடில் உங்களைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். நீங்கள் நம்மைவிட மதிப்புடைய வரல்ல" என்றார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௧)Tafseer
قَالَ يٰقَوْمِ اَرَهْطِيْٓ اَعَزُّ عَلَيْكُمْ مِّنَ اللّٰهِ ۗوَاتَّخَذْتُمُوْهُ وَرَاۤءَكُمْ ظِهْرِيًّا ۗاِنَّ رَبِّيْ بِمَا تَعْمَلُوْنَ مُحِيْطٌ ٩٢
- qāla
- قَالَ
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் மக்களே
- arahṭī
- أَرَهْطِىٓ
- என் இனத்தாரா?
- aʿazzu
- أَعَزُّ
- அதிகம் மதிப்புடையவர்(கள்)
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்களிடம்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வை விட
- wa-ittakhadhtumūhu
- وَٱتَّخَذْتُمُوهُ
- நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்/அவனை
- warāakum
- وَرَآءَكُمْ
- பின்னால் உங்களுக்கு
- ẓih'riyyan
- ظِهْرِيًّاۖ
- எறியப்பட்டவனாக
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbī
- رَبِّى
- என் இறைவன்
- bimā
- بِمَا
- எவற்றை
- taʿmalūna
- تَعْمَلُونَ
- செய்கிறீர்கள்
- muḥīṭun
- مُحِيطٌ
- சூழ்ந்திருப்பவன்
அதற்கவர் "என்னுடைய மக்களே! அல்லாஹ்வைவிட என்னுடைய இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் இறைவனை உங்கள் முதுகுப்புறம் தள்ளி விட்டீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலைச் சூழ்ந்துகொண்டு இருக்கிறான்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௨)Tafseer
وَيٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّيْ عَامِلٌ ۗسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَمَنْ هُوَ كَاذِبٌۗ وَارْتَقِبُوْٓا اِنِّيْ مَعَكُمْ رَقِيْبٌ ٩٣
- wayāqawmi
- وَيَٰقَوْمِ
- என் மக்களே
- iʿ'malū
- ٱعْمَلُوا۟
- நீங்கள் செயல்படுங்கள்
- ʿalā makānatikum
- عَلَىٰ مَكَانَتِكُمْ
- உங்கள் தகுதிக்கு ஏற்ப
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- ʿāmilun
- عَٰمِلٌۖ
- செயல்படுகிறேன்
- sawfa taʿlamūna
- سَوْفَ تَعْلَمُونَ
- அறிவீர்கள்
- man
- مَن
- யாருக்கு?
- yatīhi
- يَأْتِيهِ
- அவருக்கு வரும்
- ʿadhābun
- عَذَابٌ
- ஒரு வேதனை
- yukh'zīhi
- يُخْزِيهِ
- இழிவுபடுத்தும்/தன்னை
- waman
- وَمَنْ
- இன்னும் யார்?
- huwa
- هُوَ
- அவர்
- kādhibun
- كَٰذِبٌۖ
- பொய்யர்
- wa-ir'taqibū
- وَٱرْتَقِبُوٓا۟
- எதிர் பார்த்திருங்கள்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- maʿakum
- مَعَكُمْ
- உங்களுடன்
- raqībun
- رَقِيبٌ
- எதிர்பார்ப்பவன்
அன்றி, "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் போக்கில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்? பொய் சொல்பவர் யார்? என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வீர்கள். (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் (அதனை) எதிர்பார்த்திருக்கிறேன்" (என்றும் கூறினார்). ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௩)Tafseer
وَلَمَّا جَاۤءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّاۚ وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِيْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ ٩٤
- walammā jāa
- وَلَمَّا جَآءَ
- வந்த போது
- amrunā
- أَمْرُنَا
- நம் கட்டளை
- najjaynā
- نَجَّيْنَا
- பாதுகாத்தோம்
- shuʿayban
- شُعَيْبًا
- ஷுஐபை
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- maʿahu
- مَعَهُۥ
- அவருடன்
- biraḥmatin
- بِرَحْمَةٍ
- அருளைக் கொண்டு
- minnā
- مِّنَّا
- நமது
- wa-akhadhati
- وَأَخَذَتِ
- இன்னும் பிடித்தது
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- ẓalamū
- ظَلَمُوا۟
- அநியாயம்செய்தார்கள்
- l-ṣayḥatu fa-aṣbaḥū
- ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟
- சப்தம்/காலையில் ஆகிவிட்டனர்
- fī diyārihim
- فِى دِيَٰرِهِمْ
- தங்கள் இல்லங்களில்
- jāthimīna
- جَٰثِمِينَ
- இறந்தவர்களாக
(பின்னர் அவர்களிடம்) நம்முடைய வேதனை வந்த பொழுது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். அநியாயம் செய்தவர்களை விடியற்காலை நேரத்தில் இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே (இறந்து) கிடந்தனர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௪)Tafseer
كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۗ اَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ ࣖ ٩٥
- ka-an lam yaghnaw
- كَأَن لَّمْ يَغْنَوْا۟
- அவர்கள் வசிக்காததைப் போல்
- fīhā
- فِيهَآۗ
- அதில்
- alā
- أَلَا
- அறிந்துகொள்ளுங்கள்!
- buʿ'dan
- بُعْدًا
- அழிவு
- limadyana
- لِّمَدْيَنَ
- மத்யனுக்கு
- kamā baʿidat
- كَمَا بَعِدَتْ
- அழிந்தது போன்று
- thamūdu
- ثَمُودُ
- ஸமூத்
அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி) அழிந்துவிட்டனர். "ஸமூத்" (மக்)கள் மீது சாபம் ஏற்பட்டபடியே இந்த "மத்யன்" (மக்)கள் மீதும் சாபம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௫)Tafseer
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ ٩٦
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- நாம் அனுப்பினோம்
- mūsā
- مُوسَىٰ
- மூஸாவை
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நம் வசனங்களுடன்
- wasul'ṭānin
- وَسُلْطَٰنٍ
- இன்னும் அத்தாட்சி
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவான(து)
அன்றி, நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சி யுடனும் மூஸாவை நம்முடைய தூதராக (ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும்) நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௬)Tafseer
اِلٰى فِرْعَوْنَ وَملَا۟ىِٕهٖ فَاتَّبَعُوْٓا اَمْرَ فِرْعَوْنَ ۚوَمَآ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِيْدٍ ٩٧
- ilā fir'ʿawna
- إِلَىٰ فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னிடம்
- wamala-ihi
- وَمَلَإِي۟هِۦ
- இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
- fa-ittabaʿū
- فَٱتَّبَعُوٓا۟
- அவர்கள் பின்பற்றினர்
- amra
- أَمْرَ
- கட்டளையை
- fir'ʿawna
- فِرْعَوْنَۖ
- ஃபிர்அவ்னின்
- wamā amru
- وَمَآ أَمْرُ
- இல்லை/கட்டளை
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னுடைய
- birashīdin
- بِرَشِيدٍ
- நல்லறிவுடையதாக
(ஆகவே, அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் (சென்றார்.) ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய கூட்டத்தினர்) பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேரான வழியில் இருக்கவில்லை. ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௭)Tafseer
يَقْدُمُ قَوْمَهٗ يَوْمَ الْقِيٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ ۗوَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ ٩٨
- yaqdumu
- يَقْدُمُ
- முன் செல்வான்
- qawmahu
- قَوْمَهُۥ
- தன் மக்களுக்கு
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- fa-awradahumu
- فَأَوْرَدَهُمُ
- சேர்ப்பான்/அவர்களை
- l-nāra
- ٱلنَّارَۖ
- நரகத்தில்
- wabi'sa
- وَبِئْسَ
- அது கெட்டது
- l-wir'du
- ٱلْوِرْدُ
- சேருமிடம்
- l-mawrūdu
- ٱلْمَوْرُودُ
- சேரப்படும்
மறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் செல்லுமிடம் மிகக் கெட்டது. ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௮)Tafseer
وَاُتْبِعُوْا فِيْ هٰذِهٖ لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِۗ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ ٩٩
- wa-ut'biʿū
- وَأُتْبِعُوا۟
- இன்னும் அவர்களை தொடர்ந்தது
- fī hādhihi
- فِى هَٰذِهِۦ
- இதில்
- laʿnatan
- لَعْنَةً
- சாபம்
- wayawma l-qiyāmati
- وَيَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
- இன்னும் மறுமை நாளில்
- bi'sa
- بِئْسَ
- மிகக் கெட்டது
- l-rif'du
- ٱلرِّفْدُ
- சன்மானம்
- l-marfūdu
- ٱلْمَرْفُودُ
- சன்மானம் கொடுக்கப்பட்டது
இம்மையிலும் மறுமையிலும் சாபம் அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் மிகக் கெட்டது. ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௯)Tafseer
ذٰلِكَ مِنْ اَنْۢبَاۤءِ الْقُرٰى نَقُصُّهٗ عَلَيْكَ مِنْهَا قَاۤىِٕمٌ وَّحَصِيْدٌ ١٠٠
- dhālika
- ذَٰلِكَ
- இவை
- min anbāi
- مِنْ أَنۢبَآءِ
- சரித்திரங்களில்
- l-qurā
- ٱلْقُرَىٰ
- ஊர்கள்
- naquṣṣuhu
- نَقُصُّهُۥ
- விவரிக்கிறோம்/ இவற்றை
- ʿalayka
- عَلَيْكَۖ
- உம்மீது
- min'hā
- مِنْهَا
- இவற்றில்
- qāimun
- قَآئِمٌ
- நிற்கிறது
- waḥaṣīdun
- وَحَصِيدٌ
- இன்னும் அறுக்கப்பட்டது
(மேலே கூறிய) இவை சில ஊர்(வாசி)களின் சரித்திரங் களாகும். இவற்றை நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் சில (இப்போதும்) இருக்கின்றன; சில அழிந்துவிட்டன. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௦)Tafseer