Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Word by Word

Hud

(Hūd)

bismillaahirrahmaanirrahiim

الۤرٰ ۗ كِتٰبٌ اُحْكِمَتْ اٰيٰتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِيْمٍ خَبِيْرٍۙ ١

alif-lam-ra
الٓرۚ
அலிஃப்; லாம்; றா.
kitābun
كِتَٰبٌ
ஒரு வேத நூல்
uḥ'kimat
أُحْكِمَتْ
உறுதியாக்கப்பட்டன
āyātuhu
ءَايَٰتُهُۥ
இதன் வசனங்கள்
thumma
ثُمَّ
பிறகு
fuṣṣilat
فُصِّلَتْ
தெளிவாக்கப்பட்டன
min
مِن
இருந்து
ladun
لَّدُنْ
இடம், புறம்
ḥakīmin
حَكِيمٍ
மகா ஞானவான்
khabīrin
خَبِيرٍ
ஆழ்ந்தறிபவன்
அலிஃப்; லாம்; றா. (இது) வேத நூல். அனைத்தையும் நன்கறிந்த ஞானவானால் இதன் வசனங்கள் (பல அத்தாட்சிகளைக் கொண்டு) உறுதி செய்யப்பட்ட பின்னர் (தெளிவாக) விவரிக்கப் பட்டுள்ளன. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧)
Tafseer

اَلَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۗاِنَّنِيْ لَكُمْ مِّنْهُ نَذِيْرٌ وَّبَشِيْرٌۙ ٢

allā taʿbudū
أَلَّا تَعْبُدُوٓا۟
வணங்காதீர்கள் என்று
illā l-laha
إِلَّا ٱللَّهَۚ
அல்லாஹ்வைத் தவிர
innanī
إِنَّنِى
நிச்சயமாக நான்
lakum
لَكُم
உங்களுக்கு
min'hu
مِّنْهُ
அவனிடமிருந்து
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளன்
wabashīrun
وَبَشِيرٌ
இன்னும் நற்செய்தியாளன்
(நபியே! மனிதர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்காதிருக்க (உங்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவுமே நிச்சயமாக நான் அவனால் உங்களிடம் அனுப்பப் பட்டுள்ளேன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨)
Tafseer

وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْٓا اِلَيْهِ يُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَّيُؤْتِ كُلَّ ذِيْ فَضْلٍ فَضْلَهٗ ۗوَاِنْ تَوَلَّوْا فَاِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيْرٍ ٣

wa-ani is'taghfirū
وَأَنِ ٱسْتَغْفِرُوا۟
இன்னும் பாவமன்னிப்புக் கோருங்கள் என்று
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
thumma tūbū
ثُمَّ تُوبُوٓا۟
பிறகு/திரும்புங்கள்
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம்
yumattiʿ'kum
يُمَتِّعْكُم
சுகமளிப்பான்/உங்களை
matāʿan
مَّتَٰعًا
ஒரு சுகம்
ḥasanan
حَسَنًا
அழகியது
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
வரை/ஒரு காலம்
musamman
مُّسَمًّى
குறிப்பிடப்பட்டது
wayu'ti
وَيُؤْتِ
இன்னும் கொடுப்பான்
kulla
كُلَّ
ஒவ்வொரு
dhī faḍlin
ذِى فَضْلٍ
அதிகமுடையவருக்கு
faḍlahu
فَضْلَهُۥۖ
அதிகத்தை/அவருடைய
wa-in tawallaw
وَإِن تَوَلَّوْا۟
நீங்கள் புறக்கணித்தால்
fa-innī
فَإِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ʿadhāba
عَذَابَ
வேதனையை
yawmin
يَوْمٍ
ஒரு நாளின்
kabīrin
كَبِيرٍ
மாபெரும்
நீங்கள் உங்கள் இறைவனிடத்தில் பாவ மன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரையில் உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனை நிச்சயமாக உங்களை அணுகுமென்று நான் பயப்படுகிறேன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௩)
Tafseer

اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ ۚوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٤

ilā
إِلَى
பக்கமே
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
marjiʿukum
مَرْجِعُكُمْۖ
உங்கள் மீளுமிடம்
wahuwa
وَهُوَ
அவன்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
நீங்கள் அல்லாஹ்விடமே வரவேண்டியதிருக்கிறது. அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்." ([௧௧] ஸூரத்து ஹூது: ௪)
Tafseer

اَلَآ اِنَّهُمْ يَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِيَسْتَخْفُوْا مِنْهُۗ اَلَا حِيْنَ يَسْتَغْشُوْنَ ثِيَابَهُمْ ۙيَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَۚ اِنَّهٗ عَلِيْمٌ ۢ بِذَاتِ الصُّدُوْرِ ۔ ٥

alā
أَلَآ
அறிவீராக
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
yathnūna
يَثْنُونَ
திருப்புகின்றனர்
ṣudūrahum
صُدُورَهُمْ
நெஞ்சங்களை/தங்கள்
liyastakhfū
لِيَسْتَخْفُوا۟
அவர்கள் மறைப்பதற்காக
min'hu
مِنْهُۚ
அவனிடமிருந்து
alā
أَلَا
அறிவீராக
ḥīna
حِينَ
நேரம், சமயம்
yastaghshūna
يَسْتَغْشُونَ
மறைத்துக் கொள்கிறார்கள்
thiyābahum
ثِيَابَهُمْ
தங்கள் ஆடைகளால்
yaʿlamu
يَعْلَمُ
அறிகின்றான்
mā yusirrūna
مَا يُسِرُّونَ
எதை/மறைக்கிறார்கள்
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَۚ
இன்னும் எதை/பகிரங்கப்படுத்துகிறார்கள்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிபவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை
(இந்தப் பாவிகள் தங்கள் தீய எண்ணங்களை) அல்லாஹ்வுக்கு மறைப்பதற்காக (அவற்றைத்) தங்கள் உள்ளங்களில் (வைத்து) மடித்து மறைக்கக் கருதுகின்றனர் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள். (நித்திரைக்குச் செல்லும்போது) அவர்கள் தங்கள் போர்வையைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ளும் சமயத்தில் (தங்கள் உள்ளங்களில்) அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் அவன் அறிகிறான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ள (ரகசியங்கள்) அனைத்தையும் நன்கறிந்தவன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௫)
Tafseer

۞ وَمَا مِنْ دَاۤبَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۗ كُلٌّ فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ ٦

wamā
وَمَا
இல்லை
min dābbatin
مِن دَآبَّةٍ
எந்த/ஓர் உயிரினம்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
illā
إِلَّا
தவிர
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
riz'quhā
رِزْقُهَا
அதற்கு உணவளிப்பது
wayaʿlamu
وَيَعْلَمُ
இன்னும் அறிகின்றான்
mus'taqarrahā
مُسْتَقَرَّهَا
அவற்றின் தங்குமிடத்தை
wamus'tawdaʿahā
وَمُسْتَوْدَعَهَاۚ
இன்னும் அவற்றின் அடங்குமிடத்தை
kullun
كُلٌّ
எல்லாம்
fī kitābin
فِى كِتَٰبٍ
பதிவேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான(து)
உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன. ([௧௧] ஸூரத்து ஹூது: ௬)
Tafseer

وَهُوَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِيْ سِتَّةِ اَيَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَى الْمَاۤءِ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ۗوَلَىِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْۢ بَعْدِ الْمَوْتِ لَيَقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَٓا اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ ٧

wahuwa
وَهُوَ
அவன்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
fī sittati
فِى سِتَّةِ
இல்/ஆறு
ayyāmin
أَيَّامٍ
நாள்கள்
wakāna
وَكَانَ
இன்னும் இருந்தது
ʿarshuhu
عَرْشُهُۥ
அவனுடைய அர்ஷு
ʿalā l-māi
عَلَى ٱلْمَآءِ
மீது/நீர்
liyabluwakum
لِيَبْلُوَكُمْ
அவன் உங்களை சோதிப்பதற்காக
ayyukum
أَيُّكُمْ
உங்களில் யார்
aḥsanu
أَحْسَنُ
மிக அழகியவர்
ʿamalan
عَمَلًاۗ
செயலால்
wala-in qul'ta
وَلَئِن قُلْتَ
நீர் கூறினால்
innakum
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
mabʿūthūna
مَّبْعُوثُونَ
எழுப்பப்படுவீர்கள்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
l-mawti
ٱلْمَوْتِ
இறப்பு
layaqūlanna
لَيَقُولَنَّ
நிச்சயம் கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
in
إِنْ
இல்லை
hādhā
هَٰذَآ
இது
illā
إِلَّا
தவிர
siḥ'run
سِحْرٌ
சூனியமே
mubīnun
مُّبِينٌ
பகிரங்கமான(து)
அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய "அர்ஷு" நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீங்கள் மனிதர்களை நோக்கி) "நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்" என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭)
Tafseer

وَلَىِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰٓى اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّيَقُوْلُنَّ مَا يَحْبِسُهٗ ۗ اَلَا يَوْمَ يَأْتِيْهِمْ لَيْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ࣖ ٨

wala-in
وَلَئِنْ
akharnā
أَخَّرْنَا
நாம் பிற்படுத்தினால்
ʿanhumu
عَنْهُمُ
அவர்களை விட்டு
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
ilā ummatin
إِلَىٰٓ أُمَّةٍ
வரை/ஒரு காலம்
maʿdūdatin
مَّعْدُودَةٍ
எண்ணப்பட்டது
layaqūlunna
لَّيَقُولُنَّ
நிச்சயம் கூறுவார்கள்
مَا
எது?
yaḥbisuhu
يَحْبِسُهُۥٓۗ
தடுக்கின்றது/அதை
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
yawma
يَوْمَ
நாளில்
yatīhim
يَأْتِيهِمْ
அது வரும்/அவர்களிடம்
laysa maṣrūfan
لَيْسَ مَصْرُوفًا
அறவே திருப்பப்படாது
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
waḥāqa bihim
وَحَاقَ بِهِم
இன்னும் சூழும்/அவர்களை
مَّا
எது
kānū
كَانُوا۟
இருந்தனர்
bihi
بِهِۦ
அதை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகாசம்செய்கின்றனர்
(நிராகரிப்பின் காரணமாக) அவர்களுக்கு (வரவேண்டிய) வேதனையை ஒரு சொற்ப காலம் நாம் பிற்படுத்தியபோதிலும் "அதனைத் தடுத்துக்கொண்டது எது?" எனப் பரிகாசமாகக் கேட்கிறார்கள். அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அதைத் தடுத்துவிட முடியாது என்பதையும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? ([௧௧] ஸூரத்து ஹூது: ௮)
Tafseer

وَلَىِٕنْ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنٰهَا مِنْهُۚ اِنَّهٗ لَيَـُٔوْسٌ كَفُوْرٌ ٩

wala-in
وَلَئِنْ
adhaqnā
أَذَقْنَا
நாம் சுவைக்க வைத்தால்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
minnā
مِنَّا
நம்மிடமிருந்து
raḥmatan
رَحْمَةً
ஓர் அருளை
thumma
ثُمَّ
பிறகு
nazaʿnāhā
نَزَعْنَٰهَا
நீக்கினோம்/அதை
min'hu
مِنْهُ
அவனிடமிருந்து
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
layaūsun
لَيَـُٔوسٌ
நிராசையாளனாக
kafūrun
كَفُورٌ
நன்றி கெட்டவனாக
நம்முடைய அருளை மனிதன் அனுபவிக்கும்படி நாம் செய்து, பின்னர் அதனை அவனிடமிருந்து நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கை இழந்து பெரும் நன்றி கெட்டவனாகி விடுகிறான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯)
Tafseer
௧௦

وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَاۤءَ بَعْدَ ضَرَّاۤءَ مَسَّتْهُ لَيَقُوْلَنَّ ذَهَبَ السَّيِّاٰتُ عَنِّيْ ۗاِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌۙ ١٠

wala-in
وَلَئِنْ
adhaqnāhu
أَذَقْنَٰهُ
நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்
naʿmāa
نَعْمَآءَ
இன்பத்தை
baʿda ḍarrāa
بَعْدَ ضَرَّآءَ
பின்னர்/துன்பம்
massathu
مَسَّتْهُ
அவனுக்கு ஏற்பட்ட(து)
layaqūlanna
لَيَقُولَنَّ
நிச்சயம் கூறுவான்
dhahaba
ذَهَبَ
சென்றன
l-sayiātu
ٱلسَّيِّـَٔاتُ
தீமைகள்
ʿannī
عَنِّىٓۚ
என்னை விட்டு
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lafariḥun
لَفَرِحٌ
மகிழ்பவனாக
fakhūrun
فَخُورٌ
தற்பெருமையாளனாக
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் "நிச்சயமாக என்னுடைய துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வாராது)" என்று கூறத் தலைப்படுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாகவும், பெருமையடிப்பவனாகவும் இருக்கிறான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦)
Tafseer