Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஸ்ரி வசனம் ௩

Qur'an Surah Al-'Asr Verse 3

ஸூரத்துல் அஸ்ரி [௧௦௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ەۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ࣖ (العصر : ١٠٣)

illā
إِلَّا
Except
தவிர
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believe
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நற்செயல்களை
watawāṣaw
وَتَوَاصَوْا۟
and enjoin each other
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
to the truth
உண்மையை
watawāṣaw
وَتَوَاصَوْا۟
and enjoin each other
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
bil-ṣabri
بِٱلصَّبْرِ
to [the] patience
பொறுமையை

Transliteration:

Il lal lazeena aamanu wa 'amilus saali haati wa tawa saw bil haqqi wa tawa saw bis sabr (QS. al-ʿAṣr:3)

English Sahih International:

Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience. (QS. Al-'Asr, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை). (ஸூரத்துல் அஸ்ரி, வசனம் ௩)

Jan Trust Foundation

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கை கொண்டு; நற்செயல்களை செய்து; உண்மையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு; பொறுமையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).